உள்ளடக்கத்துக்குச் செல்

முளவுக்காடு

ஆள்கூறுகள்: 10°01′N 76°16′E / 10.01°N 76.26°E / 10.01; 76.26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முளவுக்காடு
அண்மைப் பகுதி
பாரம்பரிய தங்குமிடமான போல்கட்டி மாளிகை
பாரம்பரிய தங்குமிடமான போல்கட்டி மாளிகை
முளவுக்காடு is located in கேரளம்
முளவுக்காடு
முளவுக்காடு
கேரளாவில் முளவுகாட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°01′N 76°16′E / 10.01°N 76.26°E / 10.01; 76.26
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்22,845
இனம்மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
682504
ஆராக்குழா தேவாலயம்
போல்கட்டி அரண்மனை

முளவுக்காடு (Mulavuka), மேலும் போல்கட்டித் தீவு என்றும் உள்ளூரில் அறியப்படும் இது, இந்தியாவின்கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராம ஊராட்சியாகும். வைப்பீன் தீவு, வல்லர்பாடம் தீவு ஆகியவை இதன் மேற்குப் பக்கத்திலும், வடுத்தளையின் கிழக்கிலும் அமைந்துள்ளது. இந்த ஊர் கோசுரீ பாலங்கள் மூலமாக எர்ணாகுளம் மற்றும் வல்லர்பாடம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் களமச்சேரி, ஆலுவா, கொச்சி ஆகிய பகுதிகளின் இணைப்புச் சாலையும் உள்ளது.

போல்கட்டி மாளிகை

[தொகு]

போல்கட்டி மாளிகை, தீவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இது காலனித்துவ நிர்வாகத்திற்கான மையமாக டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. அரண்மனை ஒரு பிரபலமான சுற்றுலா அம்சமாகவும், பாரம்பரிய தங்குமிடமாகவும் உள்ளது. இது கேரள சுற்றுலா வளச்சிக் கழகத்தால் (கே.டி.டி.சி) நிர்வகிக்கப்படுகிறது. லுலு சர்வதேச மாநாட்டு மையம், ஹையாத் குழும விடுதிகள் போன்றவை 2016 இல் தொடங்கப்பட்டது.

தீவில் குழிப்பந்தாட்ட மைதானமும், சர்வதேச கடற்கரையும் உள்ளது. இது இந்தியாவில் முதன்முதலில் கேரள சுற்றுலா வளச்சிக் கழகத்திற்காக கிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. தீவு அதன் விடுதிகள், பண்ணை வீடுகள், நீர் விளையாட்டு, பாதுகாப்பான மிதிவண்டி வழிகள், நடைபாதை தடங்கள், பல உணவு உணவகங்கள் போன்றவைகளுக்கு பிரபலமானது.

முளவுகாட்டின் ஈர்ப்பு என்பது அனைத்து கலாச்சாரமும் ஒன்றிணைந்து இருப்பதாகும். அனைத்து மத மற்றும் அரசியல் நம்பிக்கையுள்ள மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். எந்தவொரு பொதுவான பிரச்சினைகளுக்கும் எப்போதும் ஒன்றுபடுவார்கள். சமீபத்தில் இது கேரள உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் மற்றும் ஆஸ்டர் மெட்சிட்டியின் மருத்துவர்களுக்கான குடியிருப்பு மையமாக வளர்ந்து வருகிறது. கொள்கலன் சாலைக்கு இணையாக தீவின் மேற்குப் பகுதியில் ஒரு சேவை சாலை அமைக்கப்படவுள்ளது.

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், [1] இந்த ஊரில் மக்கள் தொகை 22,845 என இருந்தனர். ஆண்கள் 49% மக்கள்தொகையும் பெண்கள் 51% ஆகவும் உள்ளனர். ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 86% ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 87% மற்றும் பெண் கல்வியறிவு 84%. மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்களாவர்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முளவுக்காடு&oldid=3085918" இலிருந்து மீள்விக்கப்பட்டது