எடத்தலை
எடத்தலை | |
|---|---|
கிராம ஊராட்சி | |
| ஆள்கூறுகள்: 10°01′47″N 76°19′11″E / 10.0297°N 76.3197°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | எர்ணாகுளம் |
| அரசு | |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 7.18 km2 (2.77 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 77,811 |
| • அடர்த்தி | 11,000/km2 (28,000/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | கேஎல்-41 ஆலுவா |
எடுத்தலை (Edathala) என்பது ஆலுவா நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராம ஊராட்சியாகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். [1]
புள்ளிவிவரங்கள்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] எடத்தலையின் மொத்த மக்கள் தொகை 77,811 என்ற அளவில் இருக்கின்றனர். ஆண்கள் 38,454 (49.41%) மற்றும் பெண்கள் 39,357 (50.58%). ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 82%; கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியான 59.5% ஐ விடவும், ஆண்களின் கல்வியறிவு 84% ஆகவும், பெண் கல்வியறிவு 81% ஆகவும் உள்ளது. மக்கள் தொகையில் 11% (8,772) 6 வயதுக்குட்பட்டவர்கள். 70% மக்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
புக்காட்டுப்பாடி என்பது எடத்தலையின் மிகவும் பிரபலமான மற்றும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றாகும். குழிவேலிபாடி முஸ்லிம் ஜமாஅத், மலாயில்பள்ளி முஸ்லிம் ஜம்மாத் ,பெங்கட்டுசேரி முஸ்லீம் ஜம்மாத் ஆகியோர் எடத்தலா பனச்சாயத்தில் உள்ள முக்கிய ஜமா மஸ்ஜி.