சேரநல்லூர்
சேரநல்லூர் | |
---|---|
புறநகர் பகுதி | |
ஆள்கூறுகள்: 10°10′50.6″N 76°28′45.10″E / 10.180722°N 76.4791944°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
வட்டங்கள் | கனயண்ணூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10.59 km2 (4.09 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 26,330 |
• அடர்த்தி | 2,485/km2 (6,440/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 682034 |
தொலைபேசி இணைப்பு எண் | 0484 |
வாகனப் பதிவு | கேஎல்-07 |
பாலின விகிதம் | 1014 ♂/♀ |
மாநிலச் சட்டப் பேரவைத தொகுதி | எர்ணாகுளம் |
இணையதளம் | cheranalloor |
சேரநல்லூர் (Cheranallur) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி நகரத்தின் புறநகர்ப் பகுதியாகும். இது பெரியாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பாரம்பரியத்தின் படி, இந்த இடத்தை அதன் முந்தைய குடிமக்கள் பெயரிட்டனர். அவர்கள் இந்த இடத்தை மிகவும் வளமானதாகவும் அழகாகவும் கண்டனர். உள்ளூர் மொழியான மலையாளத்தில் "சேரர்களின் நல்ல கிராமம்" என்று பொருள்.

கொச்சினை மும்பை - பன்வேலுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66, இந்த ஊர் வழியாக வல்லர்பாடம் சர்வதேச கொள்கலன் தேசிய நெடுஞ்சாலை எண் 47 சி யை கடந்து செல்கிறது ( இரண்டு நெடுஞ்சாலைகளுக்கு இடையிலான ஒரே சந்திப்பு). சேரநல்லூர் என்பது உப்பங்கழிகளால் சூழப்பட்ட இடமாகும். மேலும், கேரளாவில் பொதுவானதாக இருக்கும் உப்பு கலந்த ஏரிகளின் ஒன்றாகும். இந்த பகுதியின் முன்னாள் ஆட்சியாளர் "சேரநல்லூர் கர்த்தாவு" என்று அழைக்கப்பட்டார் - இவர் கொச்சின் சக்தன் தம்புரனுக்கு முன்பு கொச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்ளில் ஒருவராக இருந்தார்.
அமைவிடம்[தொகு]
புள்ளிவிவரங்கள்[தொகு]
2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[1] சேரநல்லூரில் 26,330 மக்கள் தொகை இருந்தது. ஆண்களில் மக்கள் தொகையில் 50%, பெண்கள் 50%. ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 85% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்; ஆண்களின் கல்வியறிவு 87% மற்றும் பெண் கல்வியறிவு 84%. மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றர்.
சேரனல்லூர் தேசிய நெடுஞ்சாலை எண் 66இல் மிகவும் பரப்பரப்பான படகு போக்குவரத்துக்கான இடமாக இருந்தது. ஆனால் வரபுழா பாலம் திறக்கப்பட்டதும் இதன் முக்கியத்துவம் குறைந்தது. பாக்கு கொட்டை வர்த்தகம் மட்டுமே இப்பகுதியிலுள்ள குறிப்பிடத்தக்க வர்த்தகமாகும்
வழிபாட்டு மையங்கள்[தொகு]
சேரநல்லூரில், சோட்டானிக்கரை பகவதி கோயிலைப் போலவே முக்கியமானதாகக் கருதப்படும் பகவதி கோயிலும், (108 துர்க்கை கோயில்களில் ஒன்று). மரப்பராம்பு சிவன் கோயிலும் (சுயம்பு, வைத்தியநாதர் கோயில்) என இரண்டு பிரபலமான கோயில்கள் உள்ளன. இதுதவிர சித்தூர் சிறீ கிருட்டிண சுவாமி கோயில், விஷ்ணுபுரம் விஷ்ணு கோயில், சிறீ காளிசுவரி கோயில் ஆகியவையும் அமைந்துள்ளன.
சிறந்த ஆளுமைகளான பண்டிதர் கருப்பன் மற்றும் வி.வி.கே. வாலத் போன்றவர்களும் இப்பகுதியைச் சேர்ந்தவராவர். பெரியாறு ஆற்றங்கரையோரம் எர்ணாகுளத்தில் வரப்புழா காயல் அல்லது வரபுழா ஏரி என்று அழைக்கப்படும் அழகான இடங்களில் இந்த ஊரும் ஒன்றாகும். சேரநல்லூர் என்பது சட்டமன்றத் தொகுதியின் வடக்கு முனை (இது தொகுதிக்குள் உள்ள ஒரே பஞ்சாயத்து), எர்ணாகுளம், இப்போது டி.ஜே. வினோத் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.