கோட்டுவள்ளி

ஆள்கூறுகள்: 10°06′49″N 76°14′44″E / 10.1137109°N 76.2454606°E / 10.1137109; 76.2454606
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டுவள்ளி
கிராமம்
கோட்டுவள்ளி is located in கேரளம்
கோட்டுவள்ளி
கோட்டுவள்ளி
கேரளாவில் கோடுவள்ளி கிராமத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°06′49″N 76°14′44″E / 10.1137109°N 76.2454606°E / 10.1137109; 76.2454606
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
பரப்பளவு
 • மொத்தம்20.82 km2 (8.04 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்37,884
 • அடர்த்தி1,800/km2 (4,700/sq mi)
அலுவல்
 • மொழிகள்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு0484
வாகனப் பதிவுகேஎல்-42
அருகிலுள்ள நகரம்வடக்கு பறவூர்
பாலின விகிதம்1052 /

கோட்டுவள்ளி (Kottuvally) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் பறவூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு கிராமமாகும். இந்த கிராமம் வட்டத்தின் தெற்கே அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் வடக்கு பறவூர், 4 கி.மீ தொலைவில் உள்ளது. இது தேசிய நெடுஞ்சலை எண் -66 ன் இருபுறமும் பரவியுள்ளது.

வரலாறு[தொகு]

திருவிதாங்கூரில் உருவான ஆரம்ப ஒன்பது பஞ்சாயத்துகளில் கோட்டுவள்ளியும் ஒன்றாகும். பல சமூக ஆர்வலர்கள் இங்கு வாழ்ந்ததால் இது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்வலர்கள் தீண்டாமை மற்றும் பிற நடைமுறைகளுக்கு எதிராக போராடினர். அதிக பணம் செலுத்துதல் போன்றவற்றுக்காக விவசாயத் துறைகளிலும் வேலைநிறுத்தங்களைத் தொடங்கினர். தட்டபிள்ளை - செரியபிள்ளை - எர்ணாகுளம் படகு சேவை இங்கு சிறப்பாகும். 1962 இல், செரியபிள்ளை பாலம் திறக்கப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

இங்குள்ள மக்கள் மீன்பிடித்தல், தனித்துவமான உப்புத்தன்மை கொண்ட அரிசி வகையான பொக்காலி அர்சி சாகுபடி போன்ற பிற வேலைகளை நம்பியிருக்கிறார்கள். போக்காலி அரிசி நீரில் மூழ்கிய கடலோரப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. [1] இது தென்னிந்தியாவின் கேரளாவின் ஆலப்புழா, திருச்சூர், எர்ணாகுளம் போன்ற மாவட்டங்களில் சுமார் 5000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] கோட்டுவள்ளியின் மக்கள் தொகை 37,884 என்ற அளவில் இருந்தது. ஆண்கள் 49% மக்கள்தொகையும் பெண்கள் 51% ஆகவும் உள்ளனர். ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 84% ஆகு. இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 86%, மற்றும் பெண் கல்வியறிவு 83%. கொட்டவள்ளியில், மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டுவள்ளி&oldid=3085844" இருந்து மீள்விக்கப்பட்டது