வாழக்காலை
வாழக்காலை | |
---|---|
அண்டை பகுதி | |
ஆள்கூறுகள்: 10°00′55″N 76°19′46″E / 10.01516°N 76.329422°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எர்ணாகுளம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 42,272 |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாழக்காலை (Vazhakkala) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சி நகரில் ஒரு அண்டை பகுதியாகும். இது நகர மையத்திலிருந்து 5 கி.மீ (3 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும். இது திருக்காட்கரை நகராட்சியின் ஒரு பகுதியாகும். இதை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களை ஒட்டியுள்ள ஒரு பொதுவான குடியிருப்பு பகுதி என வகைப்படுத்தலாம். இது சுமார் 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. இது உள்ளூர் பள்ளிவாசலான பதீரியா பள்ளிவாசல் மற்றும் நுஸ்ரதுல் இஸ்லாம் பள்ளியுடன் தொடர்புடையது.
அமைவிடம்
[தொகு]மாவட்ட ஆட்சியரகம், சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் தகவல் பூங்காவை ஒட்டியுள்ள இந்தப் பகுதி கொச்சி நகரில் ஒரு மைய இடத்தை ஆக்கிரமித்துள்ளது. கேரளாவின் முதன்மையான வணிக வளாகமான லுலு வணிக வளாகம் இங்கிருந்து ஐந்து நிமிட பயணமாகும்.
2001[1] இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [2] இந்தப் பகுதின் மக்கள் தொகை 42,272 என்ற அளவில் இருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 49%, பெண்கள் 51% இருக்கின்றனர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 84% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 86%, மற்றும் பெண் கல்வியறிவு 82% உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்கள். மேலும், எர்ணாகுளம் மாவட்டத்தில் நகரம் மிக உயர்ந்த பாலின விகிதத்தை (1072) கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து
[தொகு]கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்த இடத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ளது. சுமார் 8 மற்றும் 10 கிலோமீட்டர் தொலைவில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன. அவை எர்ணாகுளம் நகரம் (வடக்கு என்றும் அழைக்கப்படுகிறது) மற்றும் எர்ணாகுளம் சந்தி (இது தெற்கு). இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து அமைப்பும் பிரதான போக்குவரத்து முறைகளாக இருக்கிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/KerlaA.html
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.