வரப்புழா

ஆள்கூறுகள்: 10°06′41″N 76°15′27″E / 10.1113133°N 76.2575627°E / 10.1113133; 76.2575627
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரப்புழா
வெரப்போலி
புறநகர்ப் பகுதி
வரப்புழா பாலம்
வரப்புழா பாலம்
ஆள்கூறுகள்: 10°06′41″N 76°15′27″E / 10.1113133°N 76.2575627°E / 10.1113133; 76.2575627
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
அண்மையிலுள்ள நகரம்எர்ணாகுளம்
பரப்பளவு
 • மொத்தம்7.74 km2 (2.99 sq mi)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்24,516
 • அடர்த்தி2,909/km2 (7,530/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்683517
வாகனப் பதிவுகேஎல்-42
இணையதளம்[1]

வரப்புழா (Varapuzha) (இதன் முந்தைய பெயர் வெரப்போலி என்றும் அழைக்கப்பட்டது) கொச்சி நகரத்தின் வடக்கு புறநகர்ப் பகுதியாகும். இது இந்திய மாநிலமான கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் பறவூர் வட்டத்திலுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். நகர மையத்திலிருந்து 15 கிமீ (9 மைல்) மற்றும் இடப்பள்ளியிலிருந்து 8 கிமீ (5 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிகள் வைட்டிலாவை வடக்கு பறவூருடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 66 இல் அமைந்துள்ளது. வரப்புழாவின் மேற்குப் பகுதி தேவஸ்வம்பாடம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு தனித்துவம் வாய்ந்த உப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நெல் வகையான பொக்காலி நெல் சாகுபக்கு பெயர் பெற்றது. மீன்பிடித்தலும், விவசாயமும் இங்குள்ள பூர்வீக மக்களின் பொதுவான வேலையாகும்.

வரப்புழாப் பாலம் (வரலாற்று வரப்புழாத் தீவுக்கு அருகில்) வரப்புழாவை (மன்னந்துருத்து) அண்டைப் பகுதியான சேரநல்லூருடன் இணைக்கிறது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[1] வரப்புழாவின் மக்கள் தொகை 24,516 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 48%, பெண்கள் 52%. ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 84% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 85%, மற்றும் பெண் கல்வியறிவு 83%. இதன் மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

வழிபாட்டு மையங்கள்[தொகு]

பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிரக்காக்கோம் மற்றும் தேவர்காட்டில் பெரும்பாலான மக்கள் இந்து குடும்பம் மற்றும் கொங்கணிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரப்புழா&oldid=3086277" இருந்து மீள்விக்கப்பட்டது