வடக்கு பறவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடக்கு பறவூர் என்னும் ஊர் கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இதை பறூர் என்றும் அழைப்பர். எறணாகுளம் மாவட்டத்தின் தெற்கில் இன்னொரு பறவூர் உள்ளதால், இதனை வடக்கு பறவூர் என்கின்றனர். மலையாளத்தில் வடக்கன் பறவூர் என்கின்றனர்.

பெயர்க் காரணம்[தொகு]

இவ்வூரின் பெயர் பறையூர் என்ற தமிழ்ப் பெயராகும். இது மலையாளத்திற்கு மாறியபோது, ஐகாரம் கெட்டு பறவூர் என்றானது. பறையர்கள் வாழ்ந்ததால் இப்பெயர் பெற்றது என்பர். [1] பறையர்கள் வாழ்ந்த ஊரை முற்காலத்தில் பறைச்சேரி என்றும் அழைத்தனர்.

நிலப்பரப்பு[தொகு]

இது திருச்சூர் வட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. அருகில் பெரியாறு பாய்கிறது. சிறு நீர்ப்பரப்புகள் உள்ளமையால் சிறு தீவுகளைக் காணலாம். கொடுங்கல்லூர் ஏரியும், வராப்புழை ஏரியும் இங்குள்ளன.

போக்குவரத்து[தொகு]

எறணாகுளம், ஆலுவா, கொடுங்ஙல்லூர், திருச்சூர், குருவாயூர் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் ஆலுவா ரயில் நிலையம் அமைந்துள்ளது. கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு படகுப் போக்குவரத்தும் உண்டு.

கோயில்கள்[தொகு]

  • பறவூர் மூகாம்பிகை - மூன்று சக்திகளின் ஒரே பீடமாக நடுக்குளத்தில் அமர்ந்து ஆசி புரிகிறாள். இத்திருத்தலம் கொல்லூர் மூகாம்பிகயை ஒத்து அமையப்பெற்றதாகும்.
    • காலை - சரசுவதி,
    • மதியம் - லக்குமி,
    • இரவு - காளி

ஆகியவை இக்கோயிலில் அலங்கரிக்கப்படும் சக்தியின் வடிவங்களாகும்.

ஊராட்சிகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. வி. வி. கே. வாலத் (1991). "பறவூர்" (in மலையாளம்). கேரளத்து ஊர்களின் வரலாறு: எறணாகுளம் மாவட்டம். திருச்சூர்: கேரள சாகித்திய அகாதெமி. பக். 199. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_பறவூர்&oldid=1694724" இருந்து மீள்விக்கப்பட்டது