நெய்யாற்றிங்கரை
நெய்யாற்றின்கரை
Neyyattinkara നെയ്യാറ്റിന്കര | |
---|---|
நகரம் | |
நெய்யாற்றிங்கரை, திருவனந்தபுரம், கேரளா | |
ஆள்கூறுகள்: 8°24′10″N 77°05′10″E / 8.4027°N 77.0861°E[1] | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
அரசு | |
• நிர்வாகம் | நெய்யாற்றின்கரை நகராட்சி |
ஏற்றம் | 43.79 m (143.67 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 70,850 (municipality) 8,80,986 (taluk) |
மொழிகள் | |
• ஆட்சி் | மலையாளம் · ஆங்கிலம் |
• பேசும் மொழிகள் | மலையாளம், ஆங்கிலம், தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 695121 |
தொலைபேசிக் குறியீடு | 91 (0)471 XXX XXXX |
வாகனப் பதிவு | KL-20 |
கடற்கரை | 78 கிலோமீட்டர்கள் (48 mi) |
Sex ratio | 1064 |
கல்வியறிவு | 98.72% |
நகரத் திட்டமிடல் குழு | நெய்யாற்றின்கரை பொதுப்பணித் துறை அலுவலகம் |
ஆட்சிக் குழு | நெய்யாற்றின்கரை நகராட்சி |
இங்கிருந்து மும்பை | 1,563 கிலோமீட்டர்கள் (971 mi) வடமேற்கில் (தரைவழியில்) |
இங்கிருந்து தில்லி | 2,834 கிலோமீட்டர்கள் (1,761 mi) வடக்கில் (தரைவழியில்) |
Climate | Am/Aw (Köppen) |
பொழிவு | 1,700 மில்லிமீட்டர்கள் (67 அங்) |
ஆண்டு முழுவதுமான சராசரி வெப்பநிலை | 27.2 °C (81.0 °F) |
கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை | 35 °C (95 °F) |
குளிர்காலத்தில் சராசரி வெப்பநிலை | 24.4 °C (75.9 °F) |
இணையதளம் | www |
நெய்யாற்றின்கரை நகராட்சி, கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது. இது திருவனந்தபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது நெய்யாற்றின் கரையில் அமைந்துள்ளதால், நெய்யாற்றின்கரை என்று அழைப்பர். மலையாளத்தில், ”ற்ற” என எழுதி, ”ட்ட” என உச்சரிப்பார்கள். எனவே, நெய்யாற்றின்கரையை நெய்யாட்டிங்கரா என்று உச்சரிப்பர். இது நெய்யாற்றின்கரை வட்டத்தின் தலைமையகமாக உள்ளது. திருவனந்தபுரம் பெருநகர்ப் பகுதியின் புறநகராக விளங்குகிறது. நெய்யாறு அகத்தியமலையில் இருந்து தொடங்குகிறது. இந்த நகரத்தை நெய்யாற்றின்கரை நகாராட்சியினர் ஆட்சி செய்கின்றனர்.
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து திருவனந்தபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், குருவாயூர், திருச்சூர், கோழிக்கோடு, சாலக்குளத்துக்காவு, கொல்லம், எர்ணாகுளம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
இங்கு நெய்யாற்றின்கரை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, மங்களூர், புனே ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அருகில் உள்ள நகரங்கள்
[தொகு]சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]