ஸ்ரீரங்கம் (சட்டமன்றத் தொகுதி)
ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.
தொகுதி எல்லைகள் [தொகு]
2008ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதி எல்லைகள்.
- திருச்சிராப்பள்ளி (மாநகராட்சி)
வார்டு எண். 1 முதல் 6 வரை.
- ஸ்ரீரங்கம் வட்டம் (பகுதி)
பனையபுரம், உத்தமசேரி, கிளிக்கூடு, மல்லியம்பத்து, சோமரசம்பேட்டை, குமாரவயலூர், முள்ளிக்கரும்பூர், கோப்பு (வடக்கு), கோப்பு (தெற்கு), போதாவூர், புலியூர், அதவத்தூர் (மேற்கு), அதவத்தூர் (கிழக்கு), நாச்சிக்குறிச்சி, சோழங்கநல்லூர், கே.கள்ளிக்குடி (வடக்கு) கே.கள்ளிக்குடி (தெற்கு), தாயனூர், நாவலூர் கொட்டப்பட்டு, அரியாவூர்-உக்கடை அரியாவூர், பெரியநாயகி சத்திரம், அம்மாப்பேட்டை, கொளத்தூர், மாத்தூர், சேதுராப்பட்டி, அளுந்தூர், பாகனூர், நாகமங்கலம், கொட்டப்பட்டு, மேக்குடி, முடிகண்டம், கொழுக்கட்டைக்குடி, தொரக்குடி, திருமலைசமுத்திரம், ஓலையூர், பழூர், முத்தரசநல்லூர், கம்பரசம்பேட்டை, மருதன்காகுறிச்சி, பேட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய் துறை, அந்தநல்லூர், கொடியாலம், குலுமணி, பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, மேக்குடி, அல்லூர் மற்றும் பேரூர் கிராமங்கள்,
சிறுகமணி (பேரூராட்சி),
- மணப்பாறை வட்டம் (பகுதி)
தொப்பம்பட்டி, மொண்டிப்பட்டி, கே.பெரியப்பட்டி (வடக்கு), இடையப்பட்டி, செட்டிச்சத்திரம்,, சித்தாநத்தம், கே.பெரியப்பட்டி (தெற்கு), சமுத்திரம், சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி மற்றும் மாதம்பட்டி கிராமங்கள்.
- இலுப்பூர் வட்டம் (பகுதி) புதுக்கோட்டை மாவட்டம் **கோமங்கலம் கிராமம் (**கோமங்கலம் கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கன மற்றும் பூகோள ரீதியாக 139 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் எல்லைப் பரப்பிற்குள் வருகிறது).
வெற்றி பெற்றவர்கள் [தொகு]
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1951 | சிற்றம்பலம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 25343 | 52.60 | சீனிவாசன் | காங்கிரசு | 17364 | 36.04 |
| 1957 | கே. வாசுதேவன் | காங்கிரசு | 22756 | 48.92 | சிற்றம்பலம் | சுயேச்சை | 6847 | 14.72 |
| 1962 | என். சுப்பிரமணியன் செட்டியார் | காங்கிரசு | 39101 | 54.76 | டி. ஓரைசாமி | திமுக | 24651 | 34.52 |
| 1967 | எசு. இராமலிங்கம் | காங்கிரசு | 34474 | 50.48 | எம். அருணா | திமுக | 33356 | 48.84 |
| 1971 | ஜோதி வெங்கடாசலம் | ஸ்தாபன காங்கிரசு | 36172 | 51.22 | ஆர். காமாட்சியம்மாள் | திமுக | 33239 | 47.07 |
| 1977 | ஆர். சவுந்தரராசன் | அதிமுக | 26200 | 31.31 | எம். தர்மலிங்கம் | திமுக | 21135 | 25.26 |
| 1980 | ஆர். சவுந்தரராசன் | அதிமுக | 49160 | 53.48 | வி. சுவாமிநாதன் | காங்கிரசு | 42761 | 46.52 |
| 1984 | ஆர். சவுந்தரராசன் | அதிமுக | 58861 | 56.52 | சி. இராமசாமி உடையார் | ஜனதா கட்சி | 38399 | 36.87 |
| 1989 | ஒய். வெங்கடேசுவர தீட்சிதர் | ஜனதா கட்சி | 42629 | 35.00 | கு. ப. கிருசுணன் | அதிமுக (ஜெ) | 34621 | 28.43 |
| 1991 | ப. கிருசுணன் | அதிமுக | 82462 | 70.51 | ஆர். செயபாலன் | ஜனதா தளம் | 30918 | 26.44 |
| 1996 | டி. பி. மாயவன் | திமுக | 73371 | 55.74 | எம். பரஞ்சோதி | அதிமுக | 43512 | 33.06 |
| 2001 | கே. கே. பாலசுப்பிரமணியன் | அதிமுக | 72993 | 53.07 | எம். சவுந்திரபாண்டியன் | பாஜக | 60317 | 43.86 |
| 2006 | எம். பரஞ்சோதி | அதிமுக | 89135 | --- | ஜி. ஜெரோம் ஆரோக்கியராசு | காங்கிரசு | 78213 | --- |
| 2011 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 1,05,328 | --- | என். ஆனந்த் | திமுக | 63,840 | --- |
- 1977ல் ஜனதாவின் சி. இராமசாமி 19782 (23.64%) & காங்கிரசின் வி. கே. அரங்கநாதன் 15562 (18.60%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989ல் அதிமுக ஜானகி அணியின் ஜி. இராமசந்திரன் 12868 (10.57%) & காங்கிரசின் என். இராசசேகரன் 26169 (21.49%) வாக்குகளும் பெற்றனர்
- 1996ல் மதிமுகவின் பேரூர் தர்மலிங்கம் 9971 (7.58%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் எ. இரமேசு 16522 வாக்குகள் பெற்றார்.