சங்கீத வாத்யாலயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கீத வாத்யாலயா (Sadgeetha vadyalaya) என்பது சென்னையின் அண்ணா சாலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு இசைக்கருவிகள் காட்சிக் கூடமாகும். இங்கு பண்டைய அரிய வகை இசைக்கருவிகள் உள்ளிட்ட 400 இசைக்கருவிகள் இங்கு பாதுகாத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1] இது மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

வரலாறு[தொகு]

இந்த காட்சிக்கூடமானது 1956இல் சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் சாம்பமூர்த்தி என்ற இசை வித்வானால் தொடங்கப்பட்டது ஆகும். இந்த கண்காட்சிக் கூடத்தை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார். பிறகு, சில காரணங்களால் பெரம்பூர் மில்லர்ஸ் சாலைக்கும், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன்கோயில் தெருவுக்கும் இடம் மாறிய இக்காட்சிக்கூடமானது. இறுதியாக 2000இல் அண்ணாசாலை, டிவிஎஸ் பேருந்து நிலையம் அருகே மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இக்காட்சிக்கூடத்தில் பழங்காலத்தில் இருந்த வில் யாழ், மகர யாழ், மச்ச யாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் போன்ற இசைக்கருவிகளும், வீணை, தம்புரா, மிருதங்கம், தவில், நாதஸ்வரம், தபேலா, வயலின், கிடார் உள்ளிட்ட நூற்றுக்கனக்கான இசைக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்காட்சிக் கூடத்தை தில்லிக்கு இடம்மாற்றம் செய்து தில்லி பிரகதி மைதானத்தில் கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.[2] இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த காட்சிக்கூடத்தை இடம் மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சங்கீத வாத்யாலயாவால் யாருக்கு சங்கடம்?! - சிப்பெட்டைத் தொடர்ந்து அடுத்த அநீதி". கட்டுரை. ஆனந்த விகடன். 11 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "சென்னையில் அரிய இசைக் கருவிகளின் காட்சிக்கூடமான சங்கீத வாத்யாலயாவை டெல்லிக்கு இடம் மாற்றக் கூடாது: இசை ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் வேண்டுகோள்". செய்தி. இந்து தமிழ். 18 பெப்ரவரி 2019. pp. ப.முரளிதரன். பார்க்கப்பட்ட நாள் 19 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. ஆர். பாலசரவணகுமார் (30 மே 2019). "சென்னையில் உள்ள பண்டைய இசைக்கருவிகள் அருங்காட்சியகத்தை டெல்லிக்கு மாற்ற இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு". செய்தி. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2019.



"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீத_வாத்யாலயா&oldid=3577105" இலிருந்து மீள்விக்கப்பட்டது