பெரிலியம் ஐதராக்சைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெரிலியம் ஐதராக்சைடு
| |
வேறு பெயர்கள்
நீரேறிய பெரிலியம்
| |
இனங்காட்டிகள் | |
13327-32-7 | |
ChEBI | CHEBI:35102 |
ChemSpider | 24727701 |
EC number | 236-368-6 |
Gmelin Reference
|
1024 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | ஐதராக்சைடு பெரிலியம் ஐதராக்சைடு |
பப்கெம் | 25879 |
வே.ந.வி.ப எண் | DS3150000 |
| |
பண்புகள் | |
BeH2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 43.03 g·mol−1 |
தோற்றம் | Vivid white, opaque crystals |
அடர்த்தி | 1.92 g cm−3[1] |
உருகுநிலை | 1,000 °C (1,830 °F; 1,270 K) |
குறைவாகக் கரையும் | |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-904 kJ mol−1[2] |
நியம மோலார் எந்திரோப்பி S |
47 J·mol−1·K−1[3] |
வெப்பக் கொண்மை, C | 1.443 J K−1 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | புற்றுநோயாக்கும் தன்மை |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
4 mg kg−1 (intravenous, rat) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | அலுமினியம் ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பெரிலியம் ஐதராக்சைடு (Beryllium hydroxide) என்பது அமிலத்திலும் காரத்திலும் கரையக்கூடிய ஒர் ஈரியல்பு ஐதராக்சைடு ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு Be(OH)2 பெரைல் மற்றும் பெர்டிராண்டைட்டு[4] தாதுக்களில் இருந்து பெரிலியம் உலோகத்தைப் பிரித்தெடுக்கும்போது உடன் விளைபொருளாக பெரிலியம் ஐதராக்சைடு கிடைக்கிறது. இவ்வுப்பின் கரைசலுடன் காரத்தைச் சேர்க்கும்போது கூழ்மம் போன்ற ஆல்பா வடிவம் உருவாகிறது. தொடர்ந்து இதைச் சூடுபடுத்தினால் அல்லது இடையூறின்றி அப்படியே வைத்திருந்தால் சாய்சதுர வடிவ β- வடிவ வீழ்படிவாக கிடைக்கிறது[5]. துத்தநாக ஐதராக்சைடு Zn(OH)2 போன்றே இதுவும் நான்முக பெரிலியம் மையங்களைக் கொண்டுள்ளது.[6]
வேதிவினைகள்
[தொகு]காரங்களுடன் வினைபுரிகையில் இது காரத்தில் கரைந்து நான்கு ஐதராக்சிடோபெரைலேட் எதிர்மின் அயனியாக உருவாகிறது. சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன்[7] பின்வருமாறு வினை நிகழ்கிறது,
- 2NaOH(aq) + Be(OH)2(s) → Na2Be(OH)4(aq)
அமிலங்களுடன் வினைபுரியும் போது பெரிலியம் உப்புகள் உருவாகின்றன.[7] உதாரணமாக கந்தக அமிலத்துடன் புரியும் வினையில் பெரிலியம் சல்பேட்டு உருவாகிறது.
- Be(OH)2 + H2SO4 → BeSO4 + 2H2O
பெரிலியம் ஐதராக்சைடு 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் நீக்கப்பட்டு கரையும் தன்மை கொண்ட வெண்மை நிறத் துகளான பெரிலியம் ஆக்சைடு உண்டாகிறது.:[7]
- Be(OH)2 → BeO + H2O
மேலும் இதை அதிக வெப்பநிலைக்குச் சூடுபடுத்தினால் அமிலத்தில் கரையாத பெரிலியம் ஆக்சைடாக மாறுகிறது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
- ↑ Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.
- ↑ Jessica Elzea Kogel, Nikhil C. Trivedi, James M. Barker and Stanley T. Krukowski, 2006, Industrial Minerals & Rocks: Commodities, Markets, and Uses, 7th edition, SME, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87335-233-5
- ↑ Mary Eagleson, 1994, Concise encyclopedia chemistry, Walter de Gruyter, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-11-011451-8
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 7.0 7.1 7.2 7.3 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5