சாந்தகுருஸ், மும்பை
சாந்தகுருஸ் | |
---|---|
மும்பை புறநகர் | |
ஆள்கூறுகள்: 19°04′54″N 72°50′29″E / 19.081667°N 72.841389°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | மும்பை புறநகர் |
நகரம் | மும்பை |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகரமும்பை மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | சாந்தகுருஸ் மேற்கு 400054 & சாந்தகுருஸ் கிழக்கு 400055 |
இடக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-02 |
சாந்தகுருஸ், மும்பை நகரத்திற்கு அருகமைந்த நகரப் பகுதிகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தில், பெருநகரமும்பை மாநகராட்சியின் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. சாந்தகுருஸ் மற்றும் கர் பகுதிகள் பெருநகரமும்பை மாநகராட்சியின் H கிழக்கு மற்றும் மேற்கு வார்டுகளில் அமைந்துள்ளது. 12.98 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சாந்தகுருஸ் பகுதி, 1991-ஆம் ஆண்டில் 6,75,951 மக்கள் தொகையும், மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 36,668 பேர் வீதம் இருந்தது.
புவியியல்
[தொகு]சாந்தகுருசுக்கு தெற்கில் கர் பகுதியும், வடக்கில் வில்லே பார்லேயும், மேற்கில் ஜூகூ பகுதியும், மேற்கில் குர்லா மற்றும் பந்த்ரா பகுதிகளும் உள்ளது. சாந்தகுருஸ் பகுதி மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டாகப்ப் பிரிக்கப்பட்டுள்ளது.