முல்லை ஆறு (தேனி)
Appearance
முல்லை ஆறு, தேனி மாவட்டத்தில் ஓடும் ஒரு ஆறாகும். தேனி மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கும், மாவட்டத்தின் பெரும்பான்மையான குடிநீர்த் தேவைக்கும் இந்த முல்லை ஆற்றிலிருந்து கிடைக்கும் தண்ணீர்தான் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மலைப்பாதைகளைக் கடந்து தேனி மாவட்டத்தின் தென் பகுதியில் பயணித்து தேனிக்கு அருகில் வைகை ஆறுடன் சங்கமிக்கிறது. இந்த முல்லை ஆற்றுடன் சுருளியாறு, கொட்டக்குடி ஆறு போன்றவைகள் துணை ஆறுகளாக வந்து சேர்கின்றன. முல்லை ஆற்றில் உத்தமபாளையம், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி ஆகிய ஊர்களில் விவசாயப்பணிகளுக்காகத் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.