மகதலேனா மரியாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,962 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
நம்பிக்கையின் திருதூதரான மகதலா மரியாள்
சி (தானியங்கிஇணைப்பு category முதலாம் நூற்றாண்டு இறப்புகள்)
(நம்பிக்கையின் திருதூதரான மகதலா மரியாள்)
 
இவர் [[கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க திருச்சபை]], [[கிழக்கு மரபுவழி திருச்சபை]], [[அங்கிலிக்கன் திருச்சபை]] ஆகியவற்றால் [[புனிதர்|புனிதராக]] மதிக்கப்படுகிறார். இவரது திருநாள் யூலை 22 ஆகும். [[லூதரனியம்|லூதரன் திருச்சபை]]களும் அதே நாளில் இவரைக் கௌரவிக்கின்றன. மரியாளின் வாழ்க்கை ஆய்வாளர்களால் தொடர்ந்து சர்சைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளது.
 
'''நம்பிக்கையின் திருத்தூதர்:'''
 
திருத்தந்தை பிரான்சிஸ் சமீபத்தில் ஆற்றிய உரையில் மகதலா மரியாளை நம்பிக்கையின் திருத்தூதராக சுட்டிக்காட்டுகின்றார்.
 
"மகதலா மரியா, நம்பிக்கையின் திருத்தூதர் என, நற்செய்தியால் சுட்டிக்காட்டப்படுகிறார். இயேசு, உயிர்த்த நாளின் காலையில், மரியா, இயேசுவின் கல்லறைக்குச் சென்றார், காலியான கல்லறையை அவர் கண்டார், பின், இந்தச் செய்தியை, பேதுருவிடமும், மற்ற சீடர்களிடமும் சொல்வதற்காக அங்கிருந்து திரும்பினார் என, புனித யோவான் நமக்குச் சொல்கிறார். என்ன நடந்தது என்பதை இன்னும் புரியாதநிலையில், மரியா கல்லறைக்குச் சென்றார், அங்கே உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார், அவர், மரியாவை, பெயர் சொல்லி அழைக்கும்வரை, அவரை யார் என மரியா அறியாமல் இருந்தார். இறந்தோரிடமிருந்து இயேசு உயிர்பெற்றெழுந்தபின், இது அவர் அளித்த முதல் காட்சியாகும். இக்காட்சி, மிகவும் ஓர் ஆழமான தனிப்பட்ட நிகழ்வாக உள்ளது. இயேசு, மகதலா மரியாவிடம் நடந்துகொண்டதுபோன்று, நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். தம் பிரசன்னத்தால் நம்மை மகிழ்வால் நிரப்புகிறார். இயேசுவை நாம் சந்திக்கும்போது, அது நமக்குச் சுதந்திரத்தைக் கொணர்ந்து, வாழ்வை புதிய கோணத்தில் பார்ப்பதற்கு, நம் பார்வையைத் திறந்து வைக்கின்றது. அது, இந்த உலகை மாற்றுகின்றது மற்றும், இறவா நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றது. உயிர்த்த ஆண்டவர், மரியாவிடம், என்னை பற்றிக் கொள்ளாதே, மாறாக, போய், தம் உயிர்ப்பின் நற்செய்தியை மற்றவருக்கு அறிவி என்று சொன்னார். இவ்வாறு, மகதலா மரியா, கிறிஸ்தவ நம்பிக்கையின் திருத்தூதராக மாறுகிறார். நாமும், இவரின் செபங்களின் வழியாக உயிர்த்த ஆண்டவரைப் புதிதாகச் சந்திப்போமாக. உயிர்த்த ஆண்டவர், நம்மைப் பெயர் சொல்லி அழைக்கின்றார், நம் துன்பங்களை மகிழ்வாக மாற்றுகின்றார் மற்றும், அவர் உண்மையிலேயே உயிர்பெற்றெழுந்தார் என்பதை, நம் வாழ்வால் அறிவிப்பதற்கு நம்மை அனுப்புகிறார்."<ref>http://ta.radiovaticana.va/news/2017/05/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_/1312865</ref>
 
== குறிப்புகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2404410" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி