பதின்நான்காம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
குருச்சேத்திரப் போரின் பதின்நான்காம் நாள் போரில் தனது மகன் கொல்லப்பட்டதற்காக பழிக்குப்பழி கொல்வதும்,போரை தனிப்போராக மாற்றிக்கொண்டுகௌரவர்களின் ஒரே மருமகன் ஜயத்திரதனை அழித்தது குறித்து சொல்லப் படுகிறது.[1]
அருச்சுனன் சபதம்
[தொகு]"நீ என் மகனைச் சாக விட்டுவிட்டாய்" என்று தருமரை அருச்சுனன் குற்றம் சாட்டினான்,தனது தேரை வெகு தொலைவு தள்ளிக்கொண்டு சென்றதற்காக கிருட்டிணனை கோபித்துக்கொண்டான். கிருட்டிணன் எதுவும் பேசவில்லை,அபிமன்யூவின் மரணம் அருச்சுனனைக் கடுமையாக பாதித்தது,துரோணர் தன்னுடைய ஆசானல்ல அவர் எனது முதல் எதிரி என கோபம் கொள்ள வைத்தது, தருமர் தன்னை ஜயத்திரதன் அபிமன்யுவைக் காப்பாற்ற விடாமல் தடுத்து நின்றதை கூறிய போது அருச்சுனனின் கோபம் முழுவதையும் ஜயத்திரதன் மீது செலுத்தி 'நாளை சூரியன் மறையும் முன் நான் ஜயத்திரதனை கொல்லவில்லை என்றால் என்னையே நான் எரித்துக்கொள்வேன்" என சபதம் செய்தான்.[1]
சூரியனை மறைத்தார்
[தொகு]அருச்சுனனின் சபதம் கௌரவப்படைக்கு எட்டியது,அருச்சுனன் சபதத்தைக் கேட்ட துரோணர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.நாளை நாம் செய்ய வேண்டியது சூரியன் மறையும் வரை ஜயத்திரதனை காப்பாற்றுவதுதான்,அதன் பின்னர் அருச்சுனன் சொன்னபடியே மரணமடைவான் கௌரவப்படை வெல்லும் என முடிவு செய்து கௌரவப்படை முழுவதையும், அருச்சுனனுக்கும் ஜயத்ரதனுக்கும் இடையே நிறுத்தப்பட்டது.கௌரவர் மருமகனைக் காப்பது மட்டுமே கடமையாக இருந்தது.எவ்வளவு தேடியும் அருச்சுனனால் ஜயத்திரதனை கண்டுபிடிக்க முடியவில்லை,தேடிக் களைத்தப் போன அருச்சுனனுக்கும் குதிரைக்கும் தண்ணீர் தேவை என்றார் கிருட்டிணன் ஓர் அம்பை தரையில் செலுத்தினான்.அங்கு நீர் பொங்கி எழுந்த்து,அருச்சுனன் எதிரிகளை அண்டவிடாமல் தடுத்துக் குதிரைகளை நீர் அருந்த காத்திருந்தான்.விரைவிலேயே அவை மீண்டும் ஜயத்ர தனை தேடி ஓடிக்கொண்டே இருந்தது.சூரியன் மேற்கே நெருங்க நெருங்க அருச்சுனன் வேட்டை நாயைப்போலஜயத்திரதனை தேடிக்கொண்டே இருந்தான்.திடீரென்று சூரியன் எங்கும் தெரியாமல் மறைந்து விட்டது,"சூரியன் மறைந்துவிட்டான்" என துரோணர் அறிவித்தார்.கௌரவப்படை மகிழ்ச்சி குரல் எழுப்பினர்,ஜெயத்ரதனைக் காப்பாற்றுவதில் அவர்கள் வெற்றியடைந்துவிட்டனர்.அருச்சுனனுக்கு வியப்பாக இருந்தது "அதற்குள் மாலை வந்துவிட்டதா? நான் தோற்றுவிட்டேன்,என்னைக் எரித்துக்கொள்ள ஏற்பாடுகளைச் செய்" என்றான்.கிருட்டிணன் அவன் காதில் "சூரியன் இன்னும் வானில் பிரகாசித்துக்கொண்டுதான் இருக்கிறான்,நான் தான் என் கையால் அதை மறைத்துள்ளேன், எல்லோரும் சூரியன் மறைந்து விட்டதாக நம்புகிறார்கள். ஜெயத்ரதனைக் கொல்ல இது தான் தக்க நேரம்" என்று அருச்சுனனுக்குச் சொன்னார்.[1]
ஜயத்திரதன் மரணம்
[தொகு]சூரியன் மறைந்து விட்டதாக நம்பி, கௌரவப்படை மகிழ்ச்சி குரல் எழுப்பினர்.ஆனால் கிருட்டிணன் தனது கையால் சூரியனை மறைத்ததைச் சொன்னவுடன் அருச்சுனன் உத்வேகம் கொண்டான்.இருளிலும் சப்தம் வரும் இலக்கை நோக்கி அம்பு எய்யும் அருச்சுனன் தனது காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கௌரவப்படையில் ஜயத்திரதனின் குரல் சத்தம் வரும் திசையை நோக்கி காத்திருந்தான்.சூரியன் மறைந்துவிட்டான் என துரோணர் அறிவிக்கவே கௌரவப்படைகளுக்கு நடுவே ஜயத்திரதன் ஓங்கி சத்தமிட்டு சிரித்தான்.இந்த நேரத்திற்காகக் காத்திருந்த அருச்சுனன் குரல் வந்த திசையில் அம்பை விட்டான்.அம்பு சரியாக ஜயத்திரதனை தாக்கியது.சூரியன் மறைந்த பிறகு தாக்குவது அதர்மம் என துரோணர் கூச்சலிடும் போதே கிருட்டிணன் உடனே சூரியனை மறைத்திருந்த தனது கையை எடுத்தார்.சூரியன் மீண்டும் வானில் பிரகாசித்தது. ஜயத்திரதனின் தலையைத் துண்டித்த அம்பு அதைச் சுமந்து கொண்டு விருத்தாக்சத்ரனின் மடியில் விழச்செய்தது திடுக்கிட்டு விருத்தாக்சத்ரனன் எழவே ஜயத்திரதன் தலை உருண்டு தரையைத் தொடவே ஆயிரம் துண்டுகளாக வெடித்துச் சிதறியது.[1]
இரவிலும் போர்
[தொகு]" கிருட்டிணன் பகலை இரவாக்கலாம் என்றால் நாம் ஏன் இரவைப் பகலாக்கக் கூடாது",என்று போரை சூரியனின் மறைவிற்குப் பிறகும் நடத்தக் கட்டளையிட்டார். போர்க்களம் இருள் சூழ்ந்தது வீரர்களுக்கு வெளிச்சம் தெரிவதற்காக சில வீரர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு விளக்குகளைப் பிடிக்க துரியோதனன் கட்டளை இட்டான்.அந்த விளக்கு ஒளியில் துரோணர்,துரியோதனன் மற்றும்கிருபர் தனது படைகளுடன் பாண்டவர்ப் படையை நோக்கி நகர்ந்து அழிக்க முற்பட்டனர்,சோர்ந்து போயிருந்த பாண்டவர்ப் படை இதை எதிர்பார்க்காததால் பலத்த சேதம் அடைந்தது.அந்த இரவில் பாண்டவர்களின் மாமனார் துருபதனையும்,பாண்டவர்களுக்கு கடைசியில் அடைக்கலம் கொடுத்த மத்ஸ்ய நாட்டு அரசன் விடாரனையும் துரோணர் கொன்றார்.[1]