உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கரௌலி மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°12′00″N 82°40′12″E / 24.20000°N 82.67000°E / 24.20000; 82.67000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கரௌலி மாவட்டம்
सिंगरौली जिला
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ரேவா கோட்டம்
தலைமையகம்வைதான்
பரப்பு5,672 km2 (2,190 sq mi)
மக்கட்தொகை1,178,132 (2011)
மக்கள்தொகை அடர்த்தி208/km2 (540/sq mi)
படிப்பறிவு62.36 per cent
பாலின விகிதம்916
வட்டங்கள்5
மக்களவைத்தொகுதிகள்சித்தி நாடாளுமன்ற மக்களவை தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை (இந்தியா) 75
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சிங்கரௌலி மாவட்டம் (Singrauli district) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வைதான் நகரம் ஆகும். இது ரேவா கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 5672 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[1]

வரலாறு

[தொகு]

சிங்கரௌலி மாவட்டம் சித்தி மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 24 மே 2008 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது.[2][3]

அமைவிடம்

[தொகு]

சிங்கரௌலி மாவட்டத்தின் வடக்கில் உத்திரப் பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டம், கிழக்கில் சோன்பத்திரா மாவட்டம், (உத்திரப் பிரதேசம்), தென் கிழக்கில் சூரஜ்பூர் மாவட்டம் (சத்தீஸ்கர்), தென்மேற்கில் கோரியா மாவட்டம் (சத்தீஸ்கர்), மேற்கில் சித்தி மாவட்டம், வடமேற்கில் ரேவா மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

சிங்கரௌலி மாவட்டம் சிங்கரோலி, தேவசர், சித்திராங்கி, மாத மற்றும் சராய் என ஐந்து வருவாய் வட்டங்களைக் கொண்டது.

அரசியல்

[தொகு]

இம்மாவட்டம் சித்திராங்கி, சிங்கரௌலி மற்றும் தேவசர் என மூன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டது. இம்மூன்று சட்டமன்ற தொகுதிகளும் சித்தி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பொருளாதாரம்

[தொகு]

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மையை நம்பியுள்ளது. [4] இம்மாவட்டத்தில் 2200 கிலோ மீட்டர் பரப்பளவில் நிலக்கரி கனிம வளம் உள்ளது.

நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின்சாரம்

[தொகு]

இந்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தின் வடக்கு நிலக்கரி சுரங்கங்கள் இம்மாவட்டத்தின் சிங்கரௌலி பகுதியில் உள்ளது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிறுவனங்கள் சிங்கரோலி வட்டத்தில் உள்ளது. சிங்ரௌலியில் 2017-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முப்பத்து ஐந்தாயிரம் மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய நிறுவனங்கள்

[தொகு]
  1. சிங்கரௌலி சூப்பர் அனல் மின் நிலையம்
  2. விந்தியாமலை அனல் மின் நிலையம
  3. ரிகாண்ட் அனல் மின் நிலையம்
  4. கோல் இந்தியா நிறுவனத்தின் வடக்கு மண்டல நிலக்கரி சுரங்கங்கள்
  5. சாசன் அல்டிரா மெகா அனல் மின் நிலையம்
  6. சித்திராங்கி அனல் மின் நிலையம்
  7. முகர் மற்றும் முகர் அம்லோரி நிலக்கரி சுரங்கங்கள்]
  8. எஸ்ஸார் குழுமத்தின் மகான் சூப்பர் அனல் மின் நிலையம்

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,178,273 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 80.75% மக்களும்; நகரப்புறங்களில் 19.25% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 28.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 613,637 ஆண்களும் மற்றும் 564,636 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 920 பெண்கள் வீதம் உள்ளனர். 5,675 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 208 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 60.41% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.34% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 48.53% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 209,792 ஆக உள்ளது. [5]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,118,998 (94.97 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,422 (0.12 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 46,574 (3.95 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,332 (0.20 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 182 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 338 (0.03 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 6,139 (0.52 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,288 (0.19 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Singrauli". Singrauli district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  2. "District Singrauli". Singrauli district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  3. "Singrauli district comes into being". Press Release, 24 May 2008. Department of Public Relations, Madhya Pradesh. Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  4. "Rihand dam". india9. பார்க்கப்பட்ட நாள் 2010-08-12.
  5. Singrauli District : Census 2011 data

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கரௌலி_மாவட்டம்&oldid=3553829" இலிருந்து மீள்விக்கப்பட்டது