விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா? இதனைப் படிக்கவும்!
சிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.


சனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்





திசம்பர் 31, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

பற்றவைத்தல் என்பது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை பல்வெறு வழிகளை பயன்படுத்தி ஒன்றிணைக்கும் செயலாகும். பற்றவைத்தல் வெப்பத்தின் மூலமோ அல்லது அழுத்ததின் மூலமோ உருக்கப்பட்டு செய்யப்படுகிறது. படத்தில் வாயு உலோக மின்தீபற்றவைப்பு முறை காட்டப்பட்டுள்ளது.

படம்: சஃபெராடு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 28, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

கோழி காடுகளிலும் மனிதனால் வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு (பெட்டைக் கோழி) என்றும் ஆணினம் சேவல் என்றும் அழைக்கப்படுகின்றது. கோழிகள் பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. படத்தில் இறைச்சிக் கடையில் கொன்று இறக்கைகள் நீக்கப்பட்டு கோழி உடல்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.

படம்:தாமஸ் காஸ்டெலசோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 24, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் (Christmas carol) என்பது கிறித்து பிறப்பு விழாவையோ குளிர் காலத்தையோ மையக்கருவாகக் கொண்ட பாடல் வகையாகும். இவ்வகை இசை கிபி 13ஆம் நூற்றாண்டில் துவங்கினாலும் மிக அண்மைய காலமாகவே தேவாலயங்களில் இடம்பெறவும் கிறித்துமசு விழாவுடன் தொடர்பு படவும் தொடங்கியது. படத்தில் கிறித்துமஸ் அன்று தேவாலயத்தில் மகிழ்ச்சிப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

படம்: கிளாகர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 21, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

கிராபீன் கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுள் ஒன்று. (மற்றொன்று வைரம்) இது வலைப்பின்னல் போன்ற, அறுபக்க வடிவில் பிணைக்கப்பட்டுள்ள கரிம அணுக்களாலான, மெல்லிய தாளையொத்த பொருள். இதுவே முதலில் உருவாக்கப்பட்ட இருபரிமாணப் பொருள் எனலாம். கிராபீனின் தடிமன் ஓர் அணு அளவையொத்தது. படத்தில் கிராபீனின் வடிவமும் இணைப்பு முறையும் காட்டப்பட்டுள்ளது.

படம்: அலெக்சாண்டர்AlUS
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 17, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

வெர்னியர் அளவுகோல் என்பது சாதாரண அளவு கோலைக் காட்டிலும் திருத்தமாக நீளத்தை அளப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி ஆகும். இதனைப் பொறியியலாளர்களும் இயந்திர உருவாக்குனர்களும் திருத்துனர்களும் துல்லியமான நீள அளவீட்டைப் பெறுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். படத்தில் வெர்னியர் அளவுகோலைப் பயன்படுத்தும் முறை அசைபடம் மூலம் காட்டப்பட்டுள்ளது.

அசைபடம்: ஆல்வெஸ்கஸ்பர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 14, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

வைன் என்பது திராட்சைச் சாற்றைப் புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககால் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. படத்தில் பார்ட்-ஒயின் வகை காட்டப்பட்டுள்ளது.

படம்: கிரேபால்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 10, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

தடியூன்றித் தாண்டுதல் (Pole vault) என்பது தட கள விளையாட்டுக்களில் ஒரு போட்டியாகும். இதில் போட்டியாளர் நீளமான நெகிழ்வுடைய கம்பு ஒன்றினைப் பயன்படுத்தி கிடைநிலை சட்டத்தின் மேலாக தாவித் தாண்டுவர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற IPC தட கள விளையாட்டின் தடியூன்றித் தாண்டுதல் படம் காட்டப்பட்டுள்ளது.

படம்: ஜேஸ்ட்ரோவ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 7, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
மச்சு பிச்சு நகரம்

மச்சு பிச்சு பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இது, இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்.

படம்: மார்ட்டின் சென்-அமான்ட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



திசம்பர் 3, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

பெசிமர் செயல்முறை என்பது வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலையில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை ஆகும். இதில் பெசிமர் மாற்றி எனும் உலை பயன்படுத்தப்படுகிறது. இவ்வுலையினுள் ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து எஃகு உருவாக்கப்படுகிறது. படத்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெசிமர் மாற்றி காட்டப்பட்டுள்ளது.

படம்: கெமிக்கல் எஞ்சினியர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 29, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பாரிசில் நுழையும் பிரெஞ்சுப் படைகளை வரவேற்கும் மக்கள்

1944 இல் ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசின் விடுவிப்பு எனப்படுகிறது. பாரிசுக்குள் நுழையும் விடுதலை பிரெஞ்சுப் படைகளை பாரிசு மக்கள் ஆரவாரித்து வரவேற்பதைக் காணலாம்.

படம்: ஜாக் டௌனி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
மியூனிக் நகரில் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் விற்பனைக்கூடம்.

மெர்சிடிஸ்-பென்ஸ் ஒரு ஜெர்மானியத் தானுந்து நிறுவனம். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான பேருந்துகளும், சுமையுந்துகளும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. படத்தில் மியூனிக் நகரில் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் விற்பனைக்கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மகிழுந்துகளைக் காணலாம்.

படம்: டியேகோ டெல்சோ
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 22, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
1840 இல் அடா லவ்லேஸ்

அடா லவ்லேஸ் இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலாளர் ஆவார். சார்லஸ் பாப்பேஜின் அனலிடிக்கல் இஞ்சின் என்னும் கருவி ஏற்கக்கூடிய படிமுறைத் தீர்வு ஒன்றை எழுதினார். இதனால் உலகின் முதல் கணினி மொழி நிரலாளராகக் கருதப்படுகிறார்.

ஓவியர்: ஆல்பிரட் எட்வர்ட் சலோன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
1900 இல் ஒரு சமி குடும்பம்

சமி மக்கள் ஆர்க்டிக் பகுதியிலுள்ள சாப்மி பகுதியில் (தற்போதைய நோர்வே, சுவீடன், பின்லாந்து, உருசியா நாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) வாழும் பின்ன-உக்ரிக் பழங்குடி மக்களாவர். எசுக்காண்டினாவியாவின் பழங்குடி மக்களாக சமி மக்கள் மட்டுமே உலக வழக்காறுபடி பழங்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். 1900 ஆம் ஆண்டு எடுக்கபப்ட்ட இப்படத்தில் பாரம்பரிய உடை அணிந்த சமி குடும்பம் ஒன்றைக் காணலாம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 15, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஆஸ்திரேலியாவில் ஒரு சூரியகாந்தி மலர்

சூரியகாந்தி (Helianthus annuus ) அமெரிக்க நாடுகளில் தோன்றிய பூக்கும் தாவரம். மொட்டு நிலையிலுள்ள சூரியகாந்திகள் ஒளிதூண்டு திருப்பகுணம் கொண்டுள்ளன. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் கழியும் போது, அவையும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றன. இரவில் அவை மீண்டும் கிழக்கு திசைக்குத் திரும்புகின்றன.

படம்: Fir0002
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் போல்ட்

உசேன் போல்ட் யமேக்காவில் பிறந்த தட கள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9.69 நொ நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலக சாதனை படைத்தவர். 200 மீ ஓட்டப்போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்.

படம்: ரிச்சர்ட் கைல்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 8, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இரவில் புரூக்ளின் பாலம்

புரூக்ளின் பாலம் ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 1825 மீட்டர் நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. நியூ யார்க் நகரின் மேன்ஹேட்டன் பகுதியை புரூக்ளின் பகுதியோடு இணைக்கிறது.

ஆண்ட்ரூ சோய்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 5, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பஞ்ச நிவாரண முகாமொன்றில் வாடும் மக்கள்

1876-78 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தைப் பெரும் பஞ்சம் பீடித்தது. தாது வருடப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட இதில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். பஞ்சத்தின் போது பெங்களூரில் நிவாரண முகாமொன்றில் வாடும் மக்களை படத்தில் காணலாம்.

படம்: தி இல்லஸ்டிரேடட் லண்டன் நியூஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



நவம்பர் 2, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
தக்காளிகள்

தக்காளி சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினம். இதன் தாயகம் தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். “சீமைத்தக்காளி” என்று தமிழர்களால் வழங்கப்படும் அமெரிக்கத் தக்காளிகளைக் படத்தில் காணலாம்.

படம்: Softeis
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 29, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
2010 மேவரிக்ஸ் அலைச்சறுக்குப் போட்டி

அலைச்சறுக்கு என்பது ஒரு நீர் விளையாட்டு. இதில் பங்கேற்போர் தக்கைப்பலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்வார். பெரும்பாலும் இந்த விளையாட்டை கடலில் மேற்கொள்வர்; போட்டிகளும் நடைபெறுவது உண்டு. அலைகளில் பாய்ந்து சறுக்கு சாகசம் செய்வோருக்கு போட்டிகளின் போது அதிக புள்ளிகள் வழங்கப்படும். இந்த தக்கைப்பலகைக்கு ”சர்ப் போட்” என்ற பெயர் உண்டு. இது ஒன்பது அடிவரையிலும் நீளம் கொண்டதாக இருக்கும்.

படம்: ஷலோம் ஜேக்கோப்விட்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அமெரிக்க எப்/ஏ-18 வகை போர் வானூர்தி

வான் போரில் வானத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், பிற போர் நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வானூர்தி (விமானம்) போர் வானூர்தி ஆகும். படத்தில் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் எப்/ஏ-18 வகை போர் வானூர்தி குண்டுகளையும் பிற ஆயுதங்களையும் ஏந்தி வானூர்தி தாங்கிக் கப்பல் யூ. எஸ். எஸ். ஜான் சி. ஸெடென்னிஸ் இல் இருந்து புறப்படத் தயாராக உள்ளது.

படம்: ஐக்கிய அமெரிக்க கடற்படை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 22, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
2008 இல் அங்கெலா மேர்க்கெல்

அங்கெலா மேர்க்கெல் இடாய்ச்சுலாந்து நாட்டின் ஓர் அரசியல்வாதி; கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் உறுப்பினர். இடாய்ச்சுலாந்தின் முதல் பெண் வேந்தரும், அந்நாடு தனி நாடு ஆனதன் பின் அதனை வழி நடத்தும் முதல் பெண்ணும் இவரே.

படம்: அலெப்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
நமீபியாவில் எடோஷா தேசியப் பூங்காவில் ஒரு குள்ளநரி

குள்ள நரி, நரி இனத்தில் ஒரு வகை. இது நரியை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி என்று பெயர். இவை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இது எல்லாம் உண்ணி வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ நீளமும், 36 செ.மீ உயரமும் கொண்டிருக்கும்.

படம்: யதின் எஸ். கிருஷ்ணப்பா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 15, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

துப்பாக்கி என்பது, மூடப்பட்ட இறுதிப்பாகத்துடன் கூடிய குழாய் போன்ற குழலைப் பயன்படுத்தி உந்துவிசையினால் எறியப்படத்தக்க ஆயுதம் ஆகும். பெரும்பாலான துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தப்படும் குழல்களின் வகை மூலமாகவும், சுடுதிறன் மூலமாகவும் வகைபடுத்தப்படுகிறது. படத்தில் சுழல்படுகை வகை துப்பாக்கியின் செயல்முறை-அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: எமோஸ்கோப்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

பாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்பது எருசலேம் பழைய நகரின் கோவில் மலையில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும். உமையா கலீபகம் அப்ட் அல்-மலீக் என்பவரால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டிடம் பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்பாறைக் குவிமாடத்தை பிரதி செய்து பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. படத்தில் பாறைக்குவிமாடத்தின் முழுமையான தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

படம்: இடோபி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



அக்டோபர் 8, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வைசன் மலைப்பாலத்தின் மீது செல்லும் தொடர்வண்டி

தொடர்வண்டி அல்லது தொடருந்து என்பது இரும்புப் பாதைகள் என்று சொல்லப்படும் தண்டவாளங்களின் வழியாக ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு போக்குவரத்து வண்டியாகும். தொடர்வண்டி முன்னர் செல்வதற்கான உந்து சக்தியானது ஒரு தனியான வண்டி மூலமோ அல்லது பல மோட்டார்கள் மூலமோ அளிக்கப்படுகிறது. வைசன் மலைப்பாலத்தின் மீது செல்லும் தொடர்வண்டியை படத்தில் காணலாம்.

படம்: டேவிட் கப்லர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 28, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நிலக்கரி (Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. படத்தில் ஆந்திரசைட்டு (Anthracite) வகை நிலக்கரித் துண்டு காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 24, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நடிகர் அல்லது நடிகை என ஒரு திரைப்படத்திலோ தொலைக்காட்சியிலோ மேடை நாடகத்திலோ வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பவரைக் குறிக்கும். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர். படத்தில் நாடகத்தில் நடிக்க ஆயத்தமாகும் நடிகர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

படம்: ஜார்ஜ் ரோயன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 21, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சுழல் காட்டி என்பது திசையமைவை அளப்பதற்கோ அதனை உள்ளவாறு பேணுவதற்கோ பயன்படும் ஒரு கருவியாகும். இது கோண உந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. இது ஒரு சுழலும் சில்லு அல்லது தட்டு வடிவில் அமைந்தது. இதன் அச்சு எந்தத் திசையமைவையும் ஏற்கும் வகையில் எந்தக் கட்டுப்பாடுமின்றி (constraint) அமைந்துள்ளது. அசைபடத்தில் இயக்கத்திலுள்ள ஒரு சுழல் காட்டி காட்டப்பட்டுள்ளது.

அசைபடம்: லூகாஸ் விபி
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 17, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கோவில் மலை பழைய எருசலேம் நகரிலுள்ள மிக முக்கிய சமயத் தலங்களில் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளாக இது ஒரு சமயத் தலமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தது நான்கு சமயங்கள் (யூதம், உரோம பாகால், கிறித்தவம், இசுலாம்) இந்த இடத்தைப் பயன்படுத்தியுள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 14, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

சிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 112 கிமீ முதல் 120 கிமீ (70 முதல் 75 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். இந்தக் காணொளியில் வேகமாக ஓடும் ஒரு சிவிங்கிப் புலியின் குறைவேகக் காணொளி காட்டப்பட்டுள்ளது.

காணொளி: கிரெஜரி வில்சன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 10, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 10, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 7, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

லூயி பாஸ்ச்சர் ஒரு வேதியியலாளரும் நுண்ணுயிரியலின் தந்தை என்று அறியப்படுபவரும் ஆவார். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.

படம்: ஃபெலிக்சு நாடார் (ஃபிரெஞ்சுப் புகைப்படக் கலைஞர்)
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



செப்டம்பர் 3, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

விண்மீன் (நட்சத்திரம்) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வாயுக்களினாலும் பிளாஸ்மாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. புவிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் விண்மீன்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது புவியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். படத்தில் 280o கோணத்தில் விண்ணில் தெரியும் விண்மீன்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: மாத்தியாஸ் கிரம்போல்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 31, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 31, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 27, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 27, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 24, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 24, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 20, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அரிவாள் மூக்கன் என்பது நீண்ட கால்களையும் வளைந்த அலகையும் கொண்ட ஒரு பறவை இனம். இதன் அலகு வளைந்து அரிவாள் போன்று தெரிவதால் இப்பெயர் பெற்றது. கூட்டமாக இரை தேடும் இப்பறவைகள் சேற்றில் வாழும் உயிரினங்களைத் தின்கின்றன. மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 17, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

உடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்குப்பறை என்றும் துடி என்றும் அழைப்பர்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 13, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 13, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 10, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 10, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 6, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 6, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஆகத்து 3, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 3, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 30, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 30, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 27, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அர்சா மேஜர் (Ursa Major) என்பது ஆண்டு முழுதும் வட அரைக்கோளத்தில் காணப்படுகின்ற விண்மீன் கூட்டம் ஆகும். இப்பெயர் இலத்தீன் மொழியில் பெருங்கரடி (Ursa = கரடி, major = பெரிய) எனப் பொருள்படும். இதனைத் தமிழில் எழுமீன் என்றும் வடமொழியில் சப்தரிசி மண்டலம் என்றும் அழைப்பர். படத்தில் சிட்னி ஆல் என்ற விண்மீன் ஆய்வாளர் வரைந்த வரைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: சிட்னி ஆல் (Sidney Hall)
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 23, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ரக்பி கால்பந்து அல்லது ரக்பி என்பது ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் உருவாகி வளர்ந்த கால்பந்து விளையாட்டில் இருந்து தோன்றிப் பல்வேறு கால கட்டங்களிலும் விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்களில் ஒன்றைக் குறிக்கும். படத்தில் பந்துக்காகப் போராடும் வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர்.

படம்: பிளெக்லோவ்ன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 20, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சாலஞ்சர் விண்ணோட விபத்து ஜனவரி 28, 1986-இல் நிகழ்ந்த மோசமான விண்கல விபத்து. சாலஞ்சர் விண்ணோடத்தீநேர்வுப் பொறியியலில் பல பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தியது. சாலஞ்சர் விண்ணோடம் தரையிலிருந்து கிளம்பிய 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 7 குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர். படத்தில் வெடித்துச் சிதறும் சாலஞ்சர் விண்ணோடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 16, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 16, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 13, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

அக்ரூட் அல்லது வால்நட் என்பது ஒரு வகை தாவரத்திலிருந்து பெறப்படும் கொட்டை. இது பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த மரங்கள் 10 - 40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது. படத்தில் உடைக்கப்பட்ட ஒரு வால்நட் காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 6, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நீர் மின் ஆற்றல் நீராற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் குறிக்கும். அதாவது, புவியீர்ப்பு விசையால் இயற்கையாக பாயும் நீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலைக் குறிக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் முறைகளில் நீர்மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது. படத்தில் உலகின் மிகப்பெரிய நீர் மின்னிலையமான சீனாவின் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை காட்டப்பட்டுள்ளது.

படம்: லெ கிராண்ட் போர்டேஜ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூலை 2, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

குங்குமப்பூ என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு என்ற செடியின் பூவிலிருந்து தருவிக்கப்படும் ஒரு நறுமணப் பொருளாகும். இது இந்தியாவின் காஷ்மீரிலும் ஈரான், கிரீஸ், எஸ்பானியா போன்ற நாடுகளிலும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. படத்தில் ஈரானில் நடைபெறும் குங்குமப்பூ அறுவடை காட்டப்பட்டுள்ளது.

படம்: சாஃபா.தனேசுவர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 29, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. படத்தில் வயலினை உருவாக்கிய ஸ்டிராடிவேரியசினால் 1721ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட வயலின் காட்டப்பட்டுள்ளது. இந்த வயலின் இதன் கடைசி தெரிந்த உரிமையாளரான லேடி பிளன்ட் என்பவரின் பெயரால் அறியப்படுகிறது.

படம்: வயோலாசிக்68
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 25, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

எறி கற்குழம்பு அல்லது லாவா என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700°C முதல் 1200°C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது. படத்தில் அவாய் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வடிந்தோடும் லாவா காட்டப்பட்டுள்ளது.

படம்: எம்பிஇசட்1
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 22, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இலண்டன் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ரொசெட்டா கல்

ரொசெட்டா கல் என்பது ஒரே பத்தியை பட எழுத்தை உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக்கடற் துறைமுகமான ரொசெட்டாவில், கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது.

படம்: ஹான்ஸ் ஹிலேவேர்ட்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 15, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
2012 வாள்வீச்சு உலகக் கிண்ணத்தின் இலகு ரக வாள்வீச்சு இறுதிப்போட்டி

வாள்வீச்சு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுள் ஒன்று. இது பிரான்சு நாட்டில் உருவாகி வளர்ந்தது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து வாட்கள் ஏந்தி சண்டை செய்வர். அவர்கள் ஏந்தும் வாளின் அடிப்படையில் போட்டிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன - இலகு ரக வாள் சண்டை (ஃபாயில்), அடி வாள் சண்டை (சேபர்), குத்து வாள் சண்டை (எப்பி).

படம்: மரீ-லான் என்கூயென்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 8, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்தின் “பிக் மேக்” பர்கர்

பர்கர் இருரொட்டிகளுக்கிடையே அல்லது வெட்டப்பட்ட ரொட்டித்துண்டின் இடையே நன்றாக அரைத்த இறைச்சி (பொதுவாக மாட்டிறைச்சி, சில நேரங்களில் பன்றியிறைச்சி அல்லது கலவை) வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டியாகும். இவை வழமையாக கீரை, பன்றி இறைச்சிக் குழல், தக்காளி, வெங்காயம், வெள்ளரி, பாலாடைக்கட்டி இவற்றுடன் கடுகு போன்றவையுடன் அலங்காரப்படுத்தப்பட்டு வழங்கப்படும். படத்தில் மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்தின் “பிக் மேக்” பர்கரைக் காணலாம்.

படம்: எவான்-அமோஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சூன் 1, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
மூன்று ஓட்டைகள் கொண்ட கறுப்பு நிற பலக்லாவா

பலக்லாவா என்பது, முகத்தின் சில பகுதிகளைத் தவிர்த்து, தலையில் ஏனைய பகுதிகள் முழுவதையும் மூடியிருக்கும் துணியால் ஆன ஒருவகைத் தலையணி ஆகும். பெரும்பாலும், கண்கள் அல்லது கண்களும், வாயும் மட்டுமே திறந்து இருக்கும். உக்ரேன் நாட்டின் கிரீமியாவில் உள்ள சேவாசுத்தோபோலுக்கு அண்மையில் அமைந்துள்ள பலக்லாவா என்னும் நகரின் பெயரைத் தழுவியே இத்தலையணிக்குப் பெயர் ஏற்பட்டது.

படம்: டொபையாஸ் மேயர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 28, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 28, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 25, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வாசிங்க்டன், டி.சி நகரில் விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்று நடனாடும் பெண்கள்

சிங்க்கோ டே மாயோ அமெரிக்காவிலும் மெக்சிக்கோவில், முக்கியமாக புவெப்லா மாநிலத்தில் கொண்டாடப்படுகிற விழா. 1862, மே 5ஆம் தேதி அன்று, மெக்சிக்கோ படையினர்களுக்கும் பிரெஞ்சு படையினர்களுக்கும் இடையில் நடந்த புவெப்லா சண்டையை மெக்சிக்கோ வென்றதை நினைவுப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. மெக்சிக்க-அமெரிக்கர்கள் தனது மெக்சிக்க பாரம்பரியத்தையும் பெருமையையும் சிங்க்கோ டே மாயோ அன்று கொண்டாடுகின்றனர். வாசிங்க்டன், டி.சி. நகரில் விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்று நடனாடும் பெண்களைப் படத்தில் காணலாம்.

படம்: dbking
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 21, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 21, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 18, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இந்தியாவில் வீதியோர வர்த்தகர் ஒருவரின் கையில் பச்சைப்பட்டாணிகள்

பச்சைப்பட்டாணி விதைகள் பூக்களின் அண்டத்தில் இருந்து உருவாகுவதால் தாவரவியலில் பழங்களாகவே கருதப்படுகின்றன. பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஊட்டச்சத்துகள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. இந்தியாவில் ஒரு வீதியோர வர்த்தகர் ஒருவர் கையில் வைத்திருக்கும் பச்சைப்பட்டாணிகளைப் படத்தில் காணலாம்.

படம்: ஹோர்ஹே ரோயான்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 14, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 14, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 11, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இலண்டன் கிரீன்விச் வானாய்வகத்திலிருந்து பாய்ச்சப்படும் பச்சை நிற சீரொளிக் கற்றை

ஓர் ஒளிப்படத்தின் சரியான வெளிப்பாடு ஓர் காட்சியை படம் எடுக்கையில் ஒளிப்படக்கருவியின் உள்விழும் ஒளியின் அளவில் உள்ளது, ஒளிப்படக் கருவி பெறும் ஒளியின் அளவு அதன் நுண்துளையின் அளவு, அது திறந்து மூட எடுக்கும் நேரம், ஒளிப்பட உணரியின் உணர்தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. மேலுள்ள படம் நுண்துளை திறந்து மூட எடுக்கும் நேரம் மாறுவதால் மாறும் வெளிப்பாட்டினை உணர்த்துகிறது.

படம்: Aram Dulyan
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 7, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 7, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மே 4, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 4, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 30, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 30, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 27, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 27, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 23, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 23, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 20, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 20, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 16, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சதுரங்கப்பலகை என்பது நீளப்பாங்காகவும், கிடைப்பாங்காகவும் சதுரங்களைக்கொண்ட, சதுரங்கம் விளையாடப்பயன்படும் பலகை ஆகும். இது அறுபத்து நான்கு சதுரங்களைக் கொண்டதாகும் (கிடையாக எட்டு, நிலைக்குத்தாக எட்டு). இது இரண்டு வேறு நிற (மென்மையான மற்றும் கடுமையான) நிறங்களைக் கொண்டதாகும். இதற்கு கருப்பு மற்றும் வெள்ளை எனும் பெயர்கள் பயன்படுத்தப்படும்.

படம்: மைக்கேல் மேக்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 13, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நிக்கோட்டீன் எனப்படுவது, சில தாவர வகைகளில், சிறப்பாகப் புகையிலையிலும் சிறிய அளவில் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, பச்சை மிளகு போன்றவற்றிலும் காணப்படுகின்றது. இதனை, கோகேயின் என்னும் பொருளுடன் சேர்ந்து கொக்கோ தாவரத்தின் இலைகளிலும் காணலாம். இது புகையிலைச் செடியின் வேரில் உருவாக்கப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது. இது ஒரு தாவர உண்ணி எதிர்ப்பு வேதிப்பொருள் ஆகும். அமெரிக்க இதயக் கழகத்தின் கூற்றுப்படி, நிக்காட்டீன் பழக்கம் நிறுத்துவதற்கு மிகக் கடினமானதொரு பழக்கம் ஆகும். படத்தில் நிக்கோட்டீன் மூலக்கூறு ஒன்றின் முத்திரட்சி அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

அசைபடம்: Fuse809
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 9, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கூழைக்கடா பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இப்பறவைகளின் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதை கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது. படத்தில் ஆஸ்திரேலியக் கூழைக்கடாக்கள் காட்டப்பட்டுள்ளன.

படம்: ஜே ஜே ஹாரிசன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



ஏப்ரல் 6, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வியாழன் சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும். படத்தில் வியாழனின் உள்ளகம், புறப்பரப்பு, நிலவுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் பாகங்கள் குறிக்கப்பட்டுள்ளன. வியாழனின் கருவம் பனிக்கட்டியாலும் பாறையாலும் ஆனது.

படம்: கெல்வின்சாங்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 30, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 30, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 26, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 23, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மான்டே கார்லோ என்பது மொனாக்கோவின் நிர்வாகம் சார்ந்த பகுதிகளில் ஒன்றாகும். சில சமயங்களில் இது நாட்டின் தலைநகரமாக தவறாக நம்பப்படுகிறது. ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள், உலகக் குத்துச்சண்டை போட்டிகள், போக்கர் டூர் இறுதியாட்டம் ஆகியவை இங்கு நடைபெறுகின்றன. இந்நகரம் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உலகின் பிரபலமான ஆட்கள் பலரும் இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.

படம்: ஆம்பஸ் கல்லின்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சார்லஸ் ராபர்ட் டார்வின் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். படத்தில் ஜான் கோலியரால் வரையப்பட்ட டார்வினின் ஓவியம் காட்டப்பட்டுள்ளது.

ஓவியம்: ஜான் கோலியர்; மூலம்: தேசிய நேர்ப்படக் கூடம், இலண்டன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 16, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மும்முறை தாண்டுதல் நீளம் தாண்டுதலைப் போன்ற ஓர் தடகளப் போட்டியாகும். இதில் போட்டியாளர் களத்தில் ஓடிவந்து தாவிக்குதித்து (hop), மேலெழுந்து (step), பின்னர் நீளத் தாண்டி (jump) மணல் பள்ளத்தில் விழுவார். தற்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் தொடக்கத்திலிருந்தே இப்போட்டி இருந்து வருகிறது. படத்தில் மேலெழும் வீரர் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.

படம்: மேரி-லான் ஙியுயென்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 12, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 9, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு தரையுளவியே கியூரியாசிட்டி (Curiosity rover) ஆகும். தானுந்து அளவான இதன் பணிகளாவன, செவ்வாயின் காலநிலையையும் புவியியலையும் ஆராய்ந்து அது மனிதர் வாழ ஏற்ற இடமா என்று ஆய்வு செய்தல் ஆகும். படத்தில் கியூரியாசிட்டி எடுத்துக்கொண்ட ஒரு தாமி (selfie) காட்டப்பட்டுள்ளது.

படம்: நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 5, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தொட்டாற்சுருங்கி அல்லது தொட்டாற்சிணுங்கி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும். இவை மிமோசேசியே குடும்பத்தைச் சார்ந்தவை. இவை கொடி போற் தொற்றி படரும் இனத்தைச் சார்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ உடனே தன் சிற்றிலைகளை மூடிக்கொள்ளும். அவ்விலைகள் மூடும் காட்சியின் அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: Hrushikesh
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



மார்ச் 2, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வார்சா போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது. படத்தில் வார்சா நகரில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அகலப் பரப்புக் காட்சி காட்டப்பட்டுள்ளது.

படம்: Spens03
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கார்லா புரூனி-சார்கோசி ஓர் இத்தாலிய-பிரெஞ்சு பாடலாசிரியர், பாடகர், நடிகை மற்றும் முன்னாள் விளம்பர வடிவழகி. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியை 2008ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமணம் புரிந்தார். மேலும், இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

படம்: ரெமி யோஉஆன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 23, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

நுண்நோக்கி என்பது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியங்கள், வைரசுகள் போன்ற சிறிய கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியல் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். படத்தில் ஓர் ஒளியியல் நுண்ணோக்கி காட்டப்பட்டுள்ளது.

படம்: Wolfg lehmann
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வானவில் என்பது மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழுஅக எதிரொளிப்பு நடைபெறுவதனால் வெள்ளொளி பிரிகையடைந்து ஏழு நிறங்களாகத் தெரியும் இயற்கை நிகழ்வாகும். படத்தில் ஒரு சமவெளியில் தோன்றிய வானவில் காட்டப்பட்டுள்ளது.

படம்: க்ராய்ச்னபெல்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 16, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 16, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தொடர்வண்டிப் போக்குவரத்து என்பது, இருப்புப்பாதைகளின் மீது ஓடுவதற்காக வடிவமைக்கப்பட்ட தொடர்வண்டிகள் மூலம் பயணிகளையும், சரக்குகளையும் வெவ்வேறு இடங்களுக்கு இடையே கொண்டு செல்வதைக் குறிக்கும். ஜார்ஜ் ஸ்டீபென்சன் என்பவரால் 1825ஆம் ஆண்டு பயணிகள் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படம் 1860ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறப்புமிக்க படம்.

படம் எடுத்தவர் யாரென்று தெரியவில்லை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 9, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கிறித்துமசு விழாவின்போது ஒவ்வோர் ஊரிலும் அவர்களது கலாச்சாரத்துக்கு ஏற்றபடி விதவிதமான வகையில் உணவுப் பொருள்கள் உண்ணப்படுகின்றது. இந்த உணவு பொதுவாக குடும்பத்திலுள்ள அனைவரும் பகிர்ந்துண்ணும்படி பரிமாறப்படுகிறது. படத்தில் செர்பியக் கிறித்துமசுக் கொண்டாட்டத்தில் பொதுவாக பரிமாறப்படும் உணவுகள் காட்டப்பட்டுள்ளன.

படம்: பெடார் மிலோசெவிக்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 5, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

சூரியனை ஒத்த - 'சூரியப் போலிகள்' - எனும் ஒரு கருதுகோள் இன்றைக்கு உள்ள சூரியனின் கடந்த காலம் அல்லது வருங்கால நிலைகளைப் பற்றி அறியப் பயன்படுவதாகும். சூரியன் அதன் இளமைக் காலத்தில் இப்போது சுற்றுவதை விடவும் 10 மடங்கு அதிவேகமாகவும் X கதிர்கள், புறஊதாக் கதிர்கள் ஆகியவற்றை இப்போது உமிழ்வதை விட பன்னூறு மடங்கு அதிகமாகவும் உமிழ்ந்தது.

படம்: IAU/E. Guinan பதிவேற்றம்: ஸ்டாஸ் 1995
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



பெப்ரவரி 2, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

செங்கால் நாரை நாரை குடும்பத்தைச் சேர்ந்த ஓர் நீர் இறங்கு பறவை ஆகும். இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது. நீண்ட செந்நிற கால்களும் செந்நிற அலகும் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும். 100 இலிருந்து 115 செ.மீ வரை இதன் உயரம் இருக்கும். பனிப்பொழிவில் தரை பனியால் மூடப்படும் போது இவை கூட்டம் கூட்டமாக வலசை போக ஆரம்பிக்கின்றன. சில கூட்டம் ஆப்பிரிக்காவிற்கும், வேறு சில இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன.

படம்: Carlos Delgado
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 29, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 29, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கிளிமாஞ்சாரோ மலை தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்தது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு உகுரு என்று பெயர். படத்தில் மலையின் மேலிருந்து அதன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

படம்: முகமது மக்தி கரீம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 22, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

ஜேம்ஸ் டூயி வாட்சன் அமெரிக்கப் பேராசிரியரும் உயிரியலாளரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கேவண்டிஷ் ஆய்வகத்தில், பிரான்சிஸ் க்ரிக்குடன் இணைந்து ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் மூலக்கூறு அமைப்பை ஆராயும் பணியில் ஈடுபட்டார். இந்த ஆய்வுகளுக்காக 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசைக் க்ரிக், வில்கின்ஸ் ஆகியோருடன் இணைந்து வாட்சன் பெற்றுக்கொண்டார். மரபியல், பாக்டீரியத்திண்ணிகள், புற்று நோய் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.

படம்: ஜேன் அர்கெஸ்டெய்ன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

மீக்கடத்துத்திறன் என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் கடத்திகள் சுழிய மின்தடையுடன் மின்னோட்டத்தைக் கடத்தும் தன்மை ஆகும். இவ்வாறு கடத்தும் பொருள்கள் மீக்கடத்திகள் என்றறியப்படுகின்றன. மீக்கடத்திகள் குறைந்த வெப்பநிலையில் இருக்கையில் அவற்றின் மீது வைக்கப்படும் காந்தத்தின் காந்தப்புலத்தை விலக்கி அதனை மேலே தூக்கும் மெய்ஸ்னர் விளைவு படத்தில் காட்டப்பட்டுள்ளது.

படம்: Mai-Linh Doan
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 15, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்

விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 15, 2014
இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு எனத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

படம்: ஈசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 8, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

கத்தி வெட்டுவதற்குப் பயன்படும் வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்ட கருவி. கற்காலத்திலிருந்து இவை ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகின்றன. நவீன ஆயுதங்களின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது. படத்தில் ஒரு பேனாமுனைக் கத்தி காட்டப்பட்டுள்ளது.

படம்: எம்டாட்சன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 5, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

விண்மீன்கள் நிறைந்த இரவு என்பது நெதர்லாந்து ஓவியர் வின்சென்ட் வான் கோ என்பவரால் வரையப்பட்டது. தென்பிரான்சிலுள்ள தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரியும் காட்சியைச் சித்தரித்து, அவர் நினைவிலிருந்து வரையப்பட்டது. இது வான் கோவின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும் பரவலாக தலைசிறந்த ஒன்றாகவும் புகழப்படுகிறது.

ஓவியம்: வின்சென்ட் வான் கோ; படம்: கூகுள் கலாச்சாரக் கழகம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு



சனவரி 1, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
{{{texttitle}}}

வௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இதுவே. இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. படத்தில் புதிதாகப் பிறந்த ஒரு சிறுமூக்கு வௌவால் குட்டி காட்டப்பட்டுள்ளது.

படம்: ஆன்டன்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்


இச்சிறப்புப் பக்கத்தை: பார்  உரையாடல்  தொகு