சுழல் காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு சுழல் காட்டி

சுழல் காட்டி என்பது, திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும். இது கோண உந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. இது ஒரு சுழலும் சில்லு அல்லது தட்டு வடிவில் அமைந்தது. இதன் அச்சு எந்தத் திசையமைவையும் எடுக்கும் வகையில் கட்டற்ற வகையில் அமைந்துள்ளது. வெளி முறுக்கு விசைகளின் தாக்கங்கள் உயர்ந்த வேகத்தில் சுழலும் இதன் திசையமைவில் மிகக்குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்துகின்றன. இது கட்டாத்தாங்கியில் பொருத்தப்படுவதால் வெளி முறுக்குவிசைகளின் தாக்கம் இதில் இருப்பதில்லை. எனவே இது வைக்கப்பட்டுள்ள தளம் எவ்வாறு நகர்ந்தாலும், சுழல் காட்டியின் திசையமைவு ஏறத்தாழ நிலையாகவே இருக்கும்.

காந்தத் திசையறிகருவிகளைப் பயன்படுத்த முடியாத இடங்களில், திசையை அறிவதற்கு இதனைப் பயன்படுத்துகின்றனர். இக் காரணத்துக்காகவே ஹபிள் தொலைநோக்கியில் சுழல் காட்டி பயன்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுழல்_காட்டி&oldid=1629947" இருந்து மீள்விக்கப்பட்டது