கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல்
Jump to navigation
Jump to search

நோர்வே நாட்டின் கெரொல் இசைக்குழு 2005
தொகுப்பு கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் (ஆங்கில மொழி: Christmas carol) என்பது கிறிஸ்து பிறப்பு விழாவை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட பாடல்/தேவார வகையாகும். இவ்வகைப்பாடல்கள் பொதுவாக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாக பாடப்படுவது வழக்கம். இவ்வகை இசை கிபி 13வது நூற்றாண்டில் துவங்கினாலும் மிக அன்மைய காலமாகவே கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெறவும் கிறிஸ்துமஸ் விழாவுடன் தொடர்பு படவும் தொடங்கியது. பாரம்பரிய கெரொல் இசைகள் மத்தியக் கால ஐரோப்பிய இசை வடிவத்தைக் கொண்டிருப்பதால் மற்ற இசை வகைகளில் இருந்து வேறுபடுத்துவது இலகுவாகும். இது சாதாரணமாக ஒரு தலைமை பாடகருக்கு கீழான குழுப்பாடகர்களால் இசைக்கப்படும். கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்னர் கெரொல் இசையின் புகழ் குன்றினாலும் 19 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் அதிகரித்தது.