வாள்வீச்சு (விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வாள்வீச்சு
Fencing pictogram.svg
Final Trophee Monal 2012 n08.jpg
2012 ஆம் ஆண்டு பாரிசில் நடந்த உலக வாள் சண்டை போட்டியின் இறுதியாட்டம்
நோக்கம்ஆயுத சண்டை
ஒலிம்பிய
விளையாட்டு
1896 முதலிருந்து
Official websitewww.fie.ch
www.fie.org

வாள்வீச்சு, வாள் சண்டை, வாளோச்சும் கலை கட்ட, குத்த, அல்லது அடிக்க பயன்படும் வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டை செய்வதைக் குறிக்கும். தற்காலத்தில் இது குறிப்பாக மேற்குநாட்டு விளையாட்டான Fencing ஐ குறிக்கின்றது. இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். மேலும் இது பென்ட்லத்தான் போடியின் ஓர் அங்கமாக உள்ளது.

உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து போட்டியாளர்கள் ஆயுதத்துடன் சண்டை செய்வர். நவீன கால வாள் சண்டை போட்டியானது பெரும்பாலும் பிரான்சு நாட்டில் உருவாக்கப்பட்டது. எனவே இதில் வழங்கப்படும் பெரும்பாலான வார்தைகள் பிரெஞ்சு மொழியினை சேர்ந்ததாக உள்ளது.

வகைகள்[தொகு]

போட்டிக்கான வாள் சண்டையில் 3 வகைகள் உள்ளன அவை,

  • இலகு ரக வாள் சண்டை (ஃபாயில்)
  • அடி வாள் சண்டை (சேபர்)
  • குத்து வாள் சண்டை (எப்பி)

விதிகள்[தொகு]

நவீன கால வாள் சண்டை போட்டிக்கான விதிகளானது ஒவ்வொரு வகிக்கும் ஏற்றவாறு சிறு சிறு வேறுபாடுகளுடையதாக உள்ளது
  • இப்போட்டிக்கான ஆடுகளமானது 60 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டது. இதன் மையதில் ஒரு நடுக்கோடும் அதிலிருந்து இரு போட்டியாளர்கான கோடுகளும் போடப்பட்டிருக்கும். ஆடுகளமானது ரப்பர் அல்லது பட்டால் ஆன மேற்பரப்பை கொண்டிருக்கும்.
  • போட்டி அதிகபட்சம் 3 நிமிடங்கள் நீளமுடையது, போட்டியின் முடிவில் அதிக புள்ளிகள் பெறுபவரோ அல்லது முதலில் 5 புள்ளிகள் பெறுபவரோ வெற்றியாலரவார்.
  • எதிர் போட்டியாளரின் உடலில் வாளால் தாக்கும் போது புள்ளி வழங்கப்படுகிறது.
  • தாக்கும் இடம் ஒவ்வொரு வகையான போட்டிக்கும் வேறுபாடும். இலகு ரக போட்டியில் மார்பு பகுதி மட்டுமே தக்கப்பட வேண்டும். அடி வாள் சண்டை போட்டியில் இடுப்புக்கு மேல் எந்தபகுதியிலும் தாக்கலாம். மேலும் குத்து வாள் போட்டியில் உடலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உரிய பகுதிகளாகும்.
  • முதலில் தாக்கும் போட்டியாளாருக்கே புள்ளி வழங்கப்பட்டலும் குத்து வாள் சண்டையில் மட்டும் ஒரே நேரத்தில் தாக்கும் இருவருக்கும் புள்ளிகள் வழங்கப்படலாம்.
  • தற்காலத்தில் போட்டியின் போது முதலில் தாக்குபவரை கண்டறிய ஒவ்வொரு வீரரின் வாளும் ஒரு மின்சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வாளின் முனையில் மின்சுற்று பூர்த்தி (switch) அமைப்பு உள்ளது.

பாதுகாப்பு உபகரணங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
fencing
என்பதின் ஊடகங்கள் உள்ளன.