1896 கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1896 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், அலுவல்முறையாக முதலாம் ஒலிம்பியாட்டின் விளையாட்டுப் போட்டிகள், (Games of the I Olympiad) கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரத்தில் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 15, 1896 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இதுவே தற்காலத்தில் நடைபெற்ற முதல் பன்னாட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பண்டைக் கிரேக்கம் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பிறப்பிடமாகக் கருதப்படுவதால் இந்த துவக்க ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற ஏதென்சு நகரமே பொருத்தமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெஞ்சு ஆசிரியரும் வரலாற்றாளருமான பியர் தெ குபர்த்தென் 1894இல் சூன் 23 அன்று பாரிசில் கூட்டிய பேராயமொன்றில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. இந்தப் பேராயத்தில் தான் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவும் (IOC) நிறுவப்பட்டது.

பல்வேறு இடையூறுகளையும் பின்னடைவுகளையும் கடந்து 1896ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்கள் வெற்றியடைந்ததாக கருதப்பட்டது. அதுநாள்வரையிலான மிக கூடுதலான பன்னாட்டு பங்கேற்பைப் பெற்ற ஓர் விளையாட்டு நிகழ்வாக இது அமைந்தது. பேனதினைக்கோ விளையாட்டரங்கில் மிகுந்த மக்கள் திரள் போட்டிகளைக் காணக் கூடியது.[4] போட்டி நடத்திய கிரேக்கர்களுக்கு தங்கள் நாட்டு இசுபைரிடோன் லூயி மாரத்தானை வென்றது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. போட்டிகளில் மிகுந்த பதக்கங்களைப் பெற்றவராக செருமானிய கார்ல் சூமான் விளங்கினார்; மற்போர் மற்றும் சீருடற் பயிற்சி விளையாட்டாளரான இவருக்கு நான்கு பதக்கங்கள் கிடைத்தன.

இந்தப் போட்டிகளுக்குப் பின்னர் கிரேக்க மன்னர் முதலாம் ஜார்ஜ், அமெரிக்கப் போட்டியாளர்களில் சிலர் உட்பட பல முக்கிய நபர்கள் அடுத்தப் போட்டிகளையும் ஏதென்சிலேயே நடத்த குபர்த்தெனுக்கும் ஐஓசிக்கும் மனு கொடுத்தனர். இருப்பினும் 1900 ஒலிம்பிக் போட்டிகளை பாரிசில் நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டதால் இதனை ஏற்க இயலவில்லை. இருப்பினும் ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் இடையில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை ஏதென்சில் இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகள் என்ற பல்துறை விளையாட்டுப் போட்டிகளை திட்டமிட்டது; அத்தகைய முதல் விளையாட்டுப் போட்டிகள் 1906இல் ஏதென்சில் நிகழ்த்தப்பட்டது. பின்னர் இந்தப் போட்டிகளை கைவிட்ட பன்னாட்டு ஒலிம்பிக் குழு இந்த இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வழங்கப்பட்ட பதக்கங்களையும் அங்கீகரிக்கவில்லை. 108 ஆண்டுகள் கழித்தே 2004இல் ஒலிம்பிக் போட்டிகள் மீண்டும் ஏதென்சில் நடந்தது.

பங்கேற்ற நாடுகள்[தொகு]

பங்கேற்ற நாடுகள்

இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன்னதாக ஒலிம்பிக் இயக்கத்தில் தேசிய அணிகள் குறித்த வரயறை எதுவம் இருக்கவில்லை. பத்தாண்டுகள் கழித்து 1896இல் பங்கேற்ற போட்டியாளர்களின் தேசியத்தைக் குறித்த மூலங்கள் ஆயப்பட்டு பதக்க எண்ணிக்கைகள் வழங்கப்பட்டன. இதனால் பங்கேற்ற நாடுகள் குறித்து பல பிணக்குகள் எழுந்துள்ளன. பன்னாட்டு ஒலிம்பிக் குழு 14 நாடுகள் பங்கேற்றதாக அறிவித்தபோதும் அவற்றை பட்டியலிடவில்லை.[5] கீழ்காணும் 14 நாடுகளே ப.ஒ.கு அங்கீகரித்த நாடுகளாக இருக்க வாய்ப்புள்ளது. சில ஆதாரங்களின்படி 12 நாடுகள், சிலி மற்றும் பல்கேரியாவைத் தவிர்த்து, பட்டியலிடப்பட்டுள்ளன.மேலும் சில இத்தாலியை மட்டும் தவிர்த்து 13 எனக் காட்டுகின்றன. சில ஆதாரங்களில் எகிப்து சேர்க்கப்பட்டுள்ளன. பெல்ஜியமும் உருசியாவும் போட்டியாளர்களை அறிவித்தபோது பின்னர் விலக்கிக் கொண்டன.

பங்கேற்ற நாடுகள்
 1.  ஆத்திரேலியா – 1901க்கு முன்னதாக ஆத்திரேலியா ஓர் ஒன்றுபட்ட நாடாக இருக்கவில்லை; பிரித்தானியாவின் ஆறு தனித்தனி நிர்வாகப் பிரிவுகளாக இருந்தது. ஆனால் எட்வின் பிளாக்கின் சாதனைகள் ஆத்திரேலியர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. (1)
 2.  ஆஸ்திரியா   ஆத்திரியா-அங்கேரி– ஆஸ்திரியா ஆஸ்திரியா-அங்கேரியின் அங்கமாக இருந்தது;இருப்பினும் ஆஸ்திரிய போட்டியாளர்களின் சாதனைகள் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன. (3)
 3.  பல்கேரியா – பல்கேரிய ஒலிம்பிக் குழு சார்லசு சாம்பவுட் என்ற சீருடற் பயிற்சியாளர் தம்நாட்டைச் சேர்ந்தவராகக் காட்டுகிறது.[6] சாம்பவுட் பல்கேரியாவில் வாழ்ந்து வந்த சுவிட்ர்லாந்துக்காரர் ஆவார். மல்லோன் மற்றும் டெ வீல் இவரை சுவிட்சர்லாந்து போட்டியாளராக காட்டுகின்றனர்.[7] (1)
 4.  சிலி – சிலி ஒலிம்பிக் குழு ஓர் போட்டியாளர், லூயி சுபர்காசீயசு, தன் நாட்டுச் சார்பாக 100, 400, 800 மீட்டர் பந்தயங்களில் பங்கெடுத்ததாக கூறுகிறது.[8][9][10][11] மேல் விவரங்கள் கொடுக்கப்படவில்லை;மேலும் டெ வீல் மற்றும் அலுவல்முறை அறிக்கையில் சுபர்காசீயசு பற்றிக் குறிப்பிடப்படவில்லை. (1)
 5.  டென்மார்க் (3)
 6.  பிரான்சு (13)
 7.  செருமனி (19)
 8.  ஐக்கிய இராச்சியம் – பெரிய பிரித்தானிய இராச்சியம் தனது உள்நாடுகளுக்கு தனித்தனி விளையாட்டுச் சங்கங்கள் கொண்டிருந்தது. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மட்டுமே இதற்கு தனி விலக்காக ஒரே நாடாக பதியப்பட்டு இருந்தது. (10)
 9.  கிரேக்க நாடு – கிரேக்க சாதனைகளில் சைப்பிரசு, இசுமைர்னா மற்றும் எகிப்தின் சாதனைகள் உள்ளடங்கி இருந்தது.[12] சில ஆதாரங்கள் சைப்பிரசின் சாதனைகளை தனியாக பட்டியலிடுகின்றன. ஆனால் பெரும்பாலானவை ஒரே கிரேக்க-சைப்பிரசு போட்டியாளரான அனசுட்டாசியோசு ஆன்டிரியோவின் சாதனைகளை கிரேக்கர் என்றே குறிப்பிடுகின்றன. (சைப்பிரசு அப்போது ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியில் இருந்தது). எகிப்தின் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த காசுடாக்லிசு கிரேக்கர் எனப் பட்டியலிடப்பட்டுள்ளார். ஆனால் கிரேக்க போட்டியாளர் டெமெட்ரியோசு பெட்ரோக்கினோசுடன் அவர் ஆடிய டென்னிசு இரட்டையர் ஆட்டம் கலவை அணியில் பட்டியலிடப்பட்டுள்ளது.[13] (169)
 10.  அங்கேரி  ஆத்திரியா-அங்கேரி- அங்கேரியும் ஆஸ்திரியாவும் அக்காலத்தில் இணைந்திருந்தபோதும் அங்கேரி வழக்கமாக தனியாக பட்டியலிடப்பட்டது. (7)
 11.  இத்தாலி – இந்தப் போட்டியில் பங்கெடுத்த முக்கிய இத்தாலியரான கார்லோ ஐரோல்டி தொழில்முறை விளையாட்டாளர் என்ற காரணத்திற்காக போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டார். குயுசெப் ரிவிபெல்லா என்ற துப்பாக்கி சுடுதல் போட்டியாளர் இத்தாலியராக பங்கேற்றார்.[14][15] (1)
 12.  சுவீடன் (1)
 13.  சுவிட்சர்லாந்து (3)
 14.  ஐக்கிய அமெரிக்கா (14)
 •  கலவை அணி — டென்னிசு இரட்டையர் அணிகள் வெவ்வேறு நாடுகளின் போட்டியாளர்களைக் கொண்டிருக்கலாம்.இவர்களை ஐஓசி கலவை அணி எனக் குறிப்பிடுகிறது.

பதக்கங்கள்[தொகு]

1896 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளி பதக்கம்.

கலந்துகொண்ட 14 நாடுகளில் 10 பதக்கங்களை வென்றன. தவிரவும் கலவை அணி எனப்பட்ட பன்னாட்டு நாடுகளின் அணி மூன்று பதக்கங்களை வென்றன. ஐக்கிய அமெரிக்கா மிகுந்த தங்கப் பதக்கங்களை (11) வென்றது. போட்டி நடத்திய கிரீசு மிகுதியான மொத்த பதக்கங்களையும் (46) மிகுதியான வெள்ளி (17) மற்றும் வெண்கல (19) பதக்கங்களை வென்றது. ஐக்கிய அமெரிக்காவை விட ஒரு தங்கப் பதக்கம் குறைவாக 10 பதக்கங்களை வென்றது.[13]

இந்த துவக்க ஒலிம்பிக் விளையாட்டுக்களில், வெற்றியாளர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், ஓர் சைத்தூன் கிளையும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இரண்டாமிடத்தை எட்டியவர்களுக்கு செப்பு பதக்கமும் பட்டை மரக்கிளையும் சான்றிதழும் வழங்கப்பட்டன.[16][17] பின்னதாக அண்மைய மரபுகளுக்கேற்ப ப.ஒ.அ ஒவ்வொருப் போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பின்னோக்கி தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை அறிவித்தது.[13]

குறிப்பு

      போட்டி நடத்திய நாடு (கிரீசு)

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1  ஐக்கிய அமெரிக்கா 11 7 2 20
2  கிரேக்க நாடு 10 17 19 46
3  செருமனி 6 5 2 13
4  பிரான்சு 5 4 2 11
5  ஐக்கிய இராச்சியம் 2 3 2 7
6  அங்கேரி 2 1 3 6
7  ஆஸ்திரியா 2 1 2 5
8  ஆத்திரேலியா 2 0 0 2
9  டென்மார்க் 1 2 3 6
10  சுவிட்சர்லாந்து 1 2 0 3
11  கலவை அணி 1 1 1 3
மொத்தம் (11 தேஒகு) 43 43 36 122

பெண் போட்டியாளர்கள்[தொகு]

1896 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், இசுட்டாமதா ரேவிதி என்ற கிரேக்கப் பெண் அலுவல்முறையான மாரத்தான் முடிவுற்றதற்கு அடுத்தநாள், ஏப்ரல் 11, அன்று மாரத்தான் ஓடினார். ஓட்ட முடிவில் விளையாட்டரங்கினுள் நுழைய அனுமதிக்கப்படாவிடினும் அவர் இந்த ஓட்டத்தை 5 மணிகள், 30 நிமிடங்களில் நிறைவு செய்தார்.இதற்கான சாட்சிகளையும் ஏற்பாடு செய்து புறப்பட்ட நேரத்தையும் முடித்த நேரத்தையும் குறிப்பிட்டு அவர்களிடம் கையொப்பம் பெற்றார். இந்த ஆவணத்தை கிரேக்க ஒலிம்பிக் குழுவினரிடம் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற எண்ணியிருந்தார். ஆனால் இதனை உறுதி செய்ய அவரது ஆவணமோ கிரேக்க ஒலிம்பிக் குழுவினரின் ஆவணங்களோ கிடைக்கவில்லை.[18]

மேற்சான்றுகள்[தொகு]

 1. The number, given by the International Olympic Committee, is open to interpretation and could be as few as 10 and as many as 15. There are numerous reasons for the disparity: National teams hardly existed at the time, and most athletes represented themselves or their clubs. In addition, countries were not always as well-defined as they are today. The number of countries here reflects the number used by most modern sources. See the relevant section for further details.
 2. This number of competitors is according to the International Olympic Committee. The identities of 179 competitors are known. Mallon & Widlund calculate 245 athletes, while De Wael finds 246.
 3. Greece still used the யூலியன் நாட்காட்டி at the time. According to that calendar, the Games were opened on 25 March and closed on 3 April.
 4. Young (1996), 153
 5. Athens 1896 – Games of the I Olympiad, International Olympic Committee
 6. Athens 1896 பரணிடப்பட்டது 2011-09-28 at the வந்தவழி இயந்திரம், Bulgarian Olympic Committee
 7. De Wael, KONRAD Gymnastics 1896
 8. Guttmann (1994), 128; "La Presencia de Chile en los Juegos Olimpicos". Archived from the original on 2 சூலை 2008. பார்க்கப்பட்ட நாள் 16 மார்ச்சு 2014., Olympic Committee of Chile; McGehee (2000), 107
 9. aboutolympics.co.uk. "1896 Athens Olympics". பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2011. Fourteen nations were represented — Australia, Austria-Hungary, Bulgaria, Chile, Denmark, Egypt, USA, France, Germany, Great Britain, Greece, Italy, Sweden and Switzerland {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 10. Mallon, Bill, and Ture Widlund (1988). The 1896 Olympic Games. Results for All Competitors in All Events, with Commentary. Jefferson: McFarland. பக். 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7864-0379-9 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080411091042/http://www.la84foundation.org/6oic/OfficialReports/Mallon/1896.pdf. பார்த்த நாள்: 21 பிப்ரவரி 2011. "Across the field, in answer to the Herald's trumpet, come two Hungarians, a Chilian, a Frenchman, a German, an Englishman and an American, to run the 100-meters race" 
 11. Olympic Games Museum (2011). "Participating Countries — Olympic Games Athens 1896". olympic-museum.de. Archived from the original on 27 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 12. Gillmeister (1998), 364
 13. 13.0 13.1 13.2 Athens 1896–Medal Table, International Olympic Committee
 14. De Wael, Shooting 1896 பரணிடப்பட்டது 2021-04-22 at the வந்தவழி இயந்திரம்
 15. "Giuseppe Rivabella". Sports-Reference. Archived from the original on 8 பிப்ரவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 24 பிப்ரவரி 2009. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help); Unknown parameter |= ignored (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-16.
 16. Coubertin–Philemon–Politis–Anninos (1897), 232–234
 17. IOC Olympic Museum exhibition panel, 2010
 18. Martin–Gynn (2000), 22