அக்ரோபோலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏதென்ஸின் அக்ரோபோலிஸ், கிரீஸ்

அக்ரோபோலிஸ் (acropolis, கிரேக்க மொழி: Ακρόπολις) என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான கட்டிடங்களும், குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து ஏதென்ஸின் அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும்.

அக்ரோபோலிஸ் (Acropolis) என்னும் சொல், acron = விளிம்பு, polis = நகரமென்னும் இரு கிரேக்கச் சொற்களின் இணைவினால் உருவானது. நேரடியாக மொழி பெயர்க்கும்போது, நகரத்தின் விளிம்பு என்ற பொருள் தருகின்றது.

தென்மேற்கிலிருந்து ஏதென்சிலுள்ள அக்ரோபோலிசின் இன்னொரு தோற்றம்

அக்ரோபோலிஸ்கள் உயர்ந்த நிலப்பகுதிகளிலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாக செங்குத்தான பக்கங்களைக் கொண்ட குன்றுகளே தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய இடங்கள் நகரத்தின் பாதுகாப்புக்கு வாய்ப்பான இடங்களாகும். பண்டைய கிரேக்க நகரங்களான ஏதென்ஸ், ஆர்கோஸ் (Argos), தேபிஸ் (Thebes), கொறிந்த் (Corinth) என்பவற்றில் அக்ரோபோலிஸ்கள் இருந்தன. இது கிரேக்க நகரங்கள் தொடர்பிலேயே உருவானபோதும், பிற்காலத்தில் பல இடங்களிலும் உருவான நகர மையங்களும் அக்ரோபோலிஸ் என்று அழைக்கப்பட்டன.

மிகவும் பிரபலமான அக்ரோபோலிஸ், கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரிலுள்ள அக்ரோபோலிஸே ஆகும்.[1] இதனால் எவ்வித அடைமொழியுமின்றி அக்ரோபோலிஸ் என்றால் அது ஏதென்ஸில் உள்ளதையே குறித்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Acropolis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரோபோலிஸ்&oldid=3259391" இலிருந்து மீள்விக்கப்பட்டது