சீயசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சியுசு
Jupiter Smyrna Louvre Ma13.jpg
இடம் ஒலிம்பசு மலைச்சிகரம்
துணை எரா மற்றும் பலர்
பெற்றோர்கள் குரோனசு மற்றும் ரியா
சகோதரன்/சகோதரி எசுடியா, ஏட்சு, எரா, பொசைடன், டிமடர்
குழந்தைகள் ஏசசு, ஏரெசு, ஏதெனா, அப்போலோ, ஆர்டமீசு, அஃப்ரோடிட், டார்டானசு, டயோனைசசு, எய்லெய்தையா, என்யோ, எரிசு, எபே, எர்மிசு, எராகில்சு, டிராயின் எலன், எஃபீசுடசு, பெர்சியுசு, மினாசு, மியூசுகள், ஓரேக்கள், மொய்ரய்கள், கிரேசுகள்

சியுசு பண்டைக் கிரேக்கம்Ζεύς என்பவர் கிரேக்க புராணக் கதைகளில் வரும் வானம் மற்றும் இடியின் கடவுள் ஆவார். இவர் ரோம புராணக் கதைகளில் வரும் சூபிடருக்கு சமமானவர். ஒலிம்பிய மலையில் இருக்கும் சியுசு அனைத்து கடவுள்களுக்கும் அரசர் ஆவார். சியுசு என்பவர் டைடன்களான குரோனசு மற்றும் ரியாவின் கடைசி மகன் ஆவார். இவருக்கு பல மனைவிகள் இருந்தாலும் எரா முக்கியமானவராக கருதப்படுகிறார். மேலும் சியுசு பல பெண்கள் மேல் மோகம் கொண்டார். அவர்கள் மூலம் பல கடவுள்கள் மற்றும் வீரர்கள் சியுசிற்கு பிறந்தனர்.

பிறப்பு[தொகு]

தன் பிள்ளைகளால் தனக்கு அழிவு வரும் என்பதை குரோனசு தன் பெற்றோரான யுரேனசு மற்றும் கயாவின் மூலம் அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த எரா, எசுடியா, டிமடர், பொசைடன் மற்றும் ஏட்சு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சியுசை ரியா ரகசியமாக காப்பாற்றி க்ரேடேயில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் மறைத்து வைத்தார். அதன் பிறகு கயா அவரை வளர்த்ததாக சொல்லப்படுகிறது.

கடவுள்களின் அரசன்[தொகு]

சியுசின் தேர்.

சியுசு ஆடவனாக வளர்ந்ததும் தன் தந்தையின் வயிற்றை கிழித்து தன் சகோதர சகோதரிகளை விடுவித்தார். பிறகு பாதாள உலகமான டார்டருசுக்குச் சென்று காவலன் கேம்பேயை கொன்று, குரோனசின் சகோதரர்களான கைகான்ட்சுகள், எகாடோஞ்சிர்கள் மற்றும் சைக்ளோப்சுகள் ஆகியவர்களை விடுவித்தார்.

இதற்கு பரிசாக சைக்ளோப்சுகள் இடி ஆயுத்த்தை சியுசிற்கு வழங்கினர். பிறகு சியுசு தன் சகோதரர்கள் மற்றும் குரோனசின் சகோதர்ர்களுடன் சேர்ந்து தன் தந்தை குரோனசையும் மற்ற டைட்டன்களையும் வீழ்த்தினான். இவர்களிடையே நடந்த போர் டைடனோமாச்சி என அழைக்கப்படுகிறது. தோற்ற டைட்டன்கள் அனைவரும் பாதாள நிழல் உலகமான டார்டரசுக்கு சென்றுவிட்டனர். அட்லசு என்ற டைட்டனுக்கு மட்டும் வானத்தை தாங்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.

போருக்குப் பிறகு சியுசு தன் சகோதரர்களுடன் உலகை பகிர்ந்து கொண்டார். அதன்படி வானம் சியுசுக்கும், கடல் பொசைடனுக்கும் பாதாளம் ஏட்சுக்கும் கிடைத்தது.

பிறகு கயாவின் அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவுடன் சியுசு போரிட்டார். டைஃபோனை வெற்றி கொண்ட பிறகு அவரை ஏட்னா மலைச்சிகரத்தின் கீழ் அடைத்து வைத்தார். ஆனால் எசிட்னா மற்றும் அவர் பிள்ளைகளை சியுசு உயிருடன் விட்டுவிட்டார்.

சியுசு மற்றும் எரா[தொகு]

எரா என்பவள் சியுசின் சகோதரியும் மனைவியும் ஆவாள். எராவின் மூலம் எரெசு, எபே மற்றும் எஃபீசுடசுக்கு சியுசு தந்தையானார். சியுசு மோகத்தால் பல பெண்களுடன் உறவாடினார். அவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் மீது எரா பொறாமை கொண்டதாக பல புராணக் கதைகள் உள்ளன.

சியுசின் காம விளையாட்டுக்கள்[தொகு]

டைட்டன்களான கோயசு மற்றும் ஃபோபேயின் மகள் லெடோ. அவள் மீது காம்ம் கொண்ட சியுசு அவளுடன் உறவாடினான். லெடோ மூலம் அப்போலோ மற்றும் ஆர்டமீசு ஆகிய இரட்டை குழந்தைகளின் தந்தையானார் சியுசு. இவர்கள் பிற்காலத்தில் சூரிய மற்றும் சந்திர கடவுள்களாயினர்.

பெர்சியூசு மற்றும் அன்ட்ரோமெடாவின் பேத்தியும் எலக்ட்ரியோனின் மகளுமான அல்கிமி மேல் சியுசு மோகம் கொண்டார். அதனால் அல்கிமியின் கணவனான அம்ஃபிட்ரியோனின் உருவத்தில் வந்து அவளுடன் உறவாடினார். அல்கிமி மூலம் மாவீரன் எராகில்சுக்கு தந்தையானார் சியுசு.

டிரோசு மற்றும் கெல்லிர்வோயேவின் மகன் கானிமிடெ. அவன்மீது மோகம் கொண்ட சியுசு கழுகு உருவம் கொண்டு அவனை ஒலிம்பிய மலைக்கு தூக்கிச் சென்றார். அவனுக்கு என்றும் இளமையாக இருக்கும் வரத்தை சியுசு அருளினார்.

சியுச மற்றும் பிற கடவுள்கள் ஒற்றுமை[தொகு]

சியுசு ரோமக் கடவுளான சூபிடருடன் ஒப்பிடப்படுகிறார். மேலும் எகிப்திய கடவுள் அம்மோன், இந்துக் கடவுள் தேவேந்திரன் ஆகியோரும் சியுசுக்கு சமமாக கருதப்படுகிறார்கள். சியுசை போலவே தேவேந்திரனும் இடி ஆயுதம் கொண்டுள்ளார். கிறித்தவ புனித நூலான பைபிளில் வரும் பார்னபாசு என்பவருடன் சியுசு ஒப்பிடப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயசு&oldid=2102152" இருந்து மீள்விக்கப்பட்டது