ஏடிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏட்சு
ஈராக்லியோன் தொல்லியல் சார்ந்த அருங்காட்சியகம்
இடம் பாதாள உலகம்
துணை பெர்சிஃபோன்
பெற்றோர்கள் குரோனசு மற்றும் ரியா
சகோதரன்/சகோதரி பொசிடான், டிமிடர், இசுடியா, ஈரா மற்றும் சீயசு
குழந்தைகள் மகாரியா, மெலினோவே மற்றும் சாக்ரியூசு

ஏடிசு (Hades, /ˈhdz/; பண்டைக் கிரேக்கம்ᾍδης அல்லது Άͅδης, ஆய்டேஸ்) என்பவர் கிரேக்கத் தொன்மவியலில் கூறப்படும் பாதாள கடவுள் ஆவார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் புளூட்டோ ஆவார். இவர் மரணித்தவர்கள், பணக்காரர்கள் போன்றோரின் கடவுள் ஆவார். இவரது பாதாள உலகின் வாயிலில் செர்பெரசு எனும் நாய் காணப்படுகின்றது. இது பாதாள உலகத்தினுள் எவரையும் தப்பவோ அல்லது உள்நுழையவோ விடாமல் பாதுகாக்கின்றது. குரோனசு மற்றும் ரியா ஆகியோரின் மூத்த மகன் ஏடிசு. டைட்டன்களை வீழ்த்திய பிறகு சீயசு தன் சகோதரர்களான பொசைடன் மற்றும் ஏடிசு ஆகியோருடன் உலகைப் பகிர்ந்துகொண்டார். அதன்படி வானம் சீயசிற்கும் கடல் பொசைடனுக்கும் பாதாளம் ஏடிசுவிற்கும் கிடைத்தது.

ஏடிசு மற்றும் பெர்சிஃபோன்[தொகு]

பெர்சிஃபோன் மற்றும் ஏடிசு

டிமிடரின் மகளான பெர்சிஃபோன் ஏடிசுவின் மனைவி ஆவார். ஒருநாள் பெர்சிஃபோன் பூக்கள் பறித்துக்கொண்டிருந்த போது அவள் அழகில் மயங்கிய ஏடிசு அவளை பாதாள உலகிற்கு கடத்திச் சென்றான். இதனால் விவசாயக் கடவுளான டிமிடர் வருந்தினார். அதன் காரணமாக பூமியில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இதற்குத் தீர்வு காண எண்ணிய சியுசு தகவல் கடவுளான எர்மீசை பாதாள உலகிற்குச் சென்று ஏடிசிடம் பேசுமாறு கூறினார். ஏடிசும் பெர்சிஃபோனை விடுவிக்க சம்மதித்தான் ஆனால் அவள் பாதாள மாதுளைப்பழத்தை உண்டுவிட்டதால் ஒவ்வொரு வருடமும் மூன்று மாதங்கள் மட்டும் அவள் ஏடிசுடன் பாதாள உலகில் வாழ வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. பயிர்கள் வாடும் கோடைக்காலம் அல்லது பயிர்கள் குளிரினால் வீணாகும் குளிர்காலம் போன்ற காலங்களில் பெர்சிஃபோன் பாதாள உலகில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடிசு&oldid=2371491" இருந்து மீள்விக்கப்பட்டது