எசிடியா
Appearance
(எசுடியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எசிடியா என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் கன்னிப் பெண் கடவுள் ஆவார். இவர் அடுப்பு, கட்டிடக்கலை மற்றும் வீடு, குடும்பம் மற்றும் மாநிலத்தின் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் கடவுளாக இருக்கிறார். இவர் குரோனசு மற்றும் ரியாவின் மூத்த மகள் ஆவார். இவருக்கு இணையான உரோமக் கடவுள் வெசுடா ஆவார்.
எசிடியா தன் கன்னித்தன்மையைக் காப்பாற்றுவதற்காக பொசிடான் மற்றும் அப்போலோவின் திருமண கோரிக்கைகளை நிராகரித்தார். இவர் சகோதரர் சியுசு இவருக்கு ஒலிம்பிய தீப்பந்தந்தைப் பாதுகாக்கும் பொறுப்பை அளித்தார். அந்தப் பொறுப்பின் காரணமாக எசிடியா பன்னிரு ஒலிம்பியர்களுள் ஒருவராக இருக்க முடியவில்லை. சில கதைகளில் எசுடியா மனிதராக வாழ விரும்பியதாகவும் அதனால் தன் ஒலிம்பிய இடத்தைக் கடவுள் டயோனைசசுக்கு விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Graves, Robert (1960). "The Palace of Olympus". Greek Gods and Heroes. Garden City, N.Y., Doubleday.
- ↑ R. S. P. Beekes. Etymological Dictionary of Greek, Brill, 2009, p. 471.
- ↑ Calvert Watkins, "wes-", in: The American Heritage Dictionary of Indo-European Roots. Houghton Mifflin Harcourt, Boston 1985 (web archive).