உள்ளடக்கத்துக்குச் செல்

புளூட்டோ (தொன்மவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளூட்டோ

புளூட்டோ (Pluto) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் பாதாள உலகத்திற்கான கடவுள் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் ஹேடிஸ் ஆவார். மரணித்தவர்கள், பணக்காரர்கள் மற்றும் நம்பிக்கை இழந்தவர்களின் கடவுளும் இவரே ஆவார். பாதள உலகத்தில் இருந்தே தங்கமும் வைரமும் கிடைப்பதனால் இவர் பணக்காரர்களின் கடவுளாகப் போற்றப்படுகின்றார். இவரது பாதாள உலகின் வாயிலில் செர்பெரஸ் எனும் நாய் காணப்படுகின்றது. இது பாதாள உலகத்தினுள் எவரையும் தப்பவோ அல்லது உள்நுழையவோ விடாமல் பாதுகாக்கின்றது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூட்டோ_(தொன்மவியல்)&oldid=2492979" இலிருந்து மீள்விக்கப்பட்டது