உள்ளடக்கத்துக்குச் செல்

தடியூன்றித் தாண்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடியூன்றித் தாண்டுதல்

தடியூன்றித் தாண்டுதல் (தென்னிலங்கை வழக்கு: கோலூன்றிப் பாய்தல்) (Pole vault) என்பது தட கள விளையாட்டுக்களில் ஒரு போட்டியாகும். இதில் போட்டியாளர் நீளமான நெகிழ்வுடைய கம்பு ஒன்றினைப் பயன்படுத்தி கிடைநிலை சட்டத்தின் மேலாக தாவித் தாண்டுகிறார். தற்காலத்தில், தாவப் பயன்படுத்தும் கம்பு கண்ணாடியிழை அல்லது கரிம இழைகளால் தயாரிக்கப்படுகிறது.[1] தடியூன்றித் தாண்டும் போட்டிகள் கிரேக்கத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது. இந்த விளையாட்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1896 முதல் ஆடவருக்கும் 2000 ஆம் ஆண்டு முதல் மகளிருக்குமான போட்டியாக விளங்குகிறது.

தொடர்புடைய பக்கங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடியூன்றித்_தாண்டுதல்&oldid=3539196" இலிருந்து மீள்விக்கப்பட்டது