உள்ளடக்கத்துக்குச் செல்

சாப்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாப்மி
Sápmi
Border NorwaySwedenFinlandRussia

ஐரோப்பாவில் சாப்மி
நாட்டுப்பண் சாமி சோகா லாவில்லா
தேசிய நாள் பெப்ரவரி 6 (சாமி தேசிய நாள்)
மொழிகள் சாமி மொழிகள், நோர்வே மொழி, சுவீடியம், பின்னியம், மியான்கீலி, உருசியம்
பரப்பளவு அண். 388,350 கிமீ2; (150,000 சது.மைல்)
மக்கள்தொகை அண். 2,000,000 மொத்தம்

* = சிறுபான்மையினர் அடங்கலாக.

விடுதலை இல்லை¹
நேர வலயம் ஒசநே +1 முதல் +3
¹ நோர்வே, சுவீடன், பின்லாந்து, உருசியா ஆகிய நாடுகளின் பகுதி.

சாப்மி (Sápmi) என்பது சாமி மக்களின் பாரம்பரியமான பிரதேசம் ஆகும். இப்பிரதேசம் வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது பெனோஸ்காண்டியாவின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது. இப்பிரதேசம் நோர்வே, சுவீடன், பின்லாந்து, மற்றும் உருசியா ஆகிய நான்கு நாடுகளின் பகுதிகளில் அமைந்துள்ளது.[1] நோர்வேஜிய, சுவீடிய மொழியில் இது "சேம்லாந்து" (Sameland) என அழைக்கப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, மற்றும் உலகமயமாக்கலின் அதிகரிப்பு ஆகிய காரணிகளால் நாடுகளுக்கிடையேயான எல்லைகளுக்கு முக்கியத்துவம் குறைந்து, எல்லை-கடந்த கூட்டுறவு சாமி பழங்குடி மக்களிடையேயும், ஏனையோரிடையேயும் முக்கியத்துவம் பெற்றது. சாப்மி பிரதேசத்தில் உருசியர்களும், நோர்வேஜியர்களும் அதிகம் வாழ்கின்றனர். சாமி பழங்குடி மக்கள் 5% மட்டுமே உள்ளனர்.[2] எந்த ஒரு அரசியல் கட்சியும் இங்கு பிரிவினை கேட்கவில்லை ஆயினும், அங்குள்ள பழங்குடியினருக்கு கூடுதலான சுயாட்சி வழங்குமாறு பல குழுக்கள் கேட்டு வருகின்றன.

விளையாட்டு

[தொகு]

இப்பிரதேசத்திற்கென தனியே ஒரு கால்பந்து அணி உண்டு. சாப்மி கால்பந்து அணி கொனிஃபா எனப்படும் சுயாதீன காற்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை வகிக்கின்றது. 2014 கொனிஃபா உலகக்கிண்ணப் போட்டியை நடத்தியது. சாப்மி கால்பந்து அணி 2006 வீவா உலகக்கோப்பையை வென்றது. 2008 வீவா உலககோப்பைப் போட்டியை நடத்தியது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. We are the Sámi – Fact sheets பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம். Gáldu Resource Centre for the Rights of Indigenous Peoples.
  2. மொத்த 2,000,000 இல் 100,000 மட்டுமே.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாப்மி&oldid=3607261" இலிருந்து மீள்விக்கப்பட்டது