தொட்டாற் சுருங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொட்டாற் சுருங்கி
தொட்டாற் சிணுங்கி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
துணைக்குடும்பம்: Mimosoideae
பேரினம்: Mimosa
இனம்: M. pudica
இருசொற் பெயரீடு
Mimosa pudica
L.
தொட்டாற் சுருங்கி தொட்டவுடன் வாடுகின்ற காட்சி

தொட்டாற் சுருங்கி அல்லது தொட்டாற் சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும். இவை மிமோசேசியே குடும்பத்தைச் சார்ந்தவை. இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ அது உடன் தன் சீறிலைகளை மூடிக்கொள்ளும், அதாவது தன் இலைகளைச் சுருக்கிக்கொள்ளும். இது நடு மற்றும் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

பெயர்[தொகு]

இது தொட்டாற்சுருங்கி, இலச்சகி, தொட்டால்வாடி ஆகிய பொதுப் பெயர்களும் வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை போன்ற சிறப்புப் பெயர்களையும் கொண்டது. இதற்கு அறியப்படும் வேறு ஒரு பெயர் ”ஆள்வணங்கி” ஆகும். இதனை கேரளப்பகுதிகளில் தொட்டாவாடி எனவும் சொல்லுகின்றனர்.

விளக்கம்[தொகு]

தரையோடு படரும் செடிவகையான இதில், சிறு சிறு முட்கள் நிறைந்திருக்கும். சிறு பட்டையான காய்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இதன் மலர்கள், சிறிய பந்துபோல் காட்சியளிக்கும். இத்தாவரமானது ஐசோ-குவர்செடின் (Isoquercetin), அவிகுலாரின் (Avicularin), டானின்கள், மைமோசைன் (Mimosine), அபிஜெனின் (Apigenin) போன்ற வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது.[1]

சுருக்கும்விதம்[தொகு]

இதன் இலைகள் பிற தாவர இலைகளைப் போல பல செல்களின் சேர்க்கையால் ஆனவை. ஒவ்வொரு செல்லும் சில திரவப் பொருட்களை இலைக்குள் கொண்டிருக்கும். இந்தத் திரவத்தின் அழுத்த மாறுபாட்டின் காரணமாக செல்களும், அவற்றாலான இலையும் நிமிர முடிகிறது. இலையின் உயிரணுவிலிருந்து திரவம் வெளியேறிவிட்டால், திரவ அழுத்தம் குறைந்து இலையின் உறுதித்தன்மை தளர்ந்துவிடும். புளிய மரம், தூங்குமூஞ்சி மரம் போன்றவை இரவு நேரத்தில் இவ்வாறே சுருங்குகின்றன.

தொட்டாற்சிணுங்கி இலைகளைத் தொடும்போது, அதன் தண்டுப் பகுதி ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. அதனால் இலையின் கீழ்ப்பகுதி செல்களில் உள்ள திரவத் தன்மை நீங்கிவிடுகிறது. ஆனால், இலையின் மேற்பகுதி செல்களில் உள்ள திரவத்தன்மை நீங்குவது இல்லை. எனவே மேற்பகுதி இலையின் எடை காரணமாக, முழு இலையும் நெகிழ்ந்து வளைந்து மூடிக்கொள்கிறது.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mimosa pudica
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டாற்_சுருங்கி&oldid=3577569" இருந்து மீள்விக்கப்பட்டது