உசேன் போல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மதிப்பிற்குரிய
உசேன் போல்ட் OJ, CD
Usain Bolt by Augustas Didzgalvis (cropped).jpg
2013 மாஸ்கோ உலகத் தடகளப் போட்டியில்
தனித் தகவல்கள்
தேசியம் ஜமைக்கா
பிறந்த நாள் 21 ஆகஸ்ட் 1986 (1986-08-21) (அகவை 29)
வசிப்பிடம் கிங்சுடன், ஜமைக்கா
உயரம் 1.95 m (6)[1]
எடை 94 kg (207 lb)[1]
விளையாட்டு
விளையாட்டு தடகளப் போட்டி
நிகழ்வு(கள்) விரைவோட்டம்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை

100 மீ: 9.58 உலக சாதனை (பெர்லின் 2009)[2]
200 மீ: 19.19 உலக சாதனை (பெர்லின் 2009)[3]

400 மீ: 45.28 (கிங்ஸ்டன் 2007)[4]

உசேன் போல்ட் அல்லது யூசைன் போல்ட் என்கிற உசேன் செயிண்ட் லியோ போல்ட் (Usain St. Leo Bolt, பி. ஆகஸ்ட் 21, 1986) டிரிலானி, யமேக்காவில் பிறந்த தட கள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9.69 நொ நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலகச் சாதனை பெற்றார். அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்; தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தையும் போல்ட்டு 2008 பெய்ஜிங் கோடை ஒலிம்பிக்கில் நிகழ்த்தினார்.2003இல் 200 மீட்டர் விரைவோட்டத்திலும் உலக இளையோர் சாதனை படைத்தார். ஒலிம்பிக்கின் மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் (100 மீ, 200 மீ மற்றும் 4 x 100 மீ) நடப்பு முதன்மை வீரன் (சாம்பியன்), ஒன்பது முறை உலக முதன்மை வீரன், ஒலிம்பிக் விரைவோட்டப் பந்தையங்களில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர், இம்மூன்று விரைவோட்டப் பந்தயங்களின் நடப்பு உலக சாதனைகளின் சொந்தக்காரர் எனப் பல சிறப்புகள் போல்ட்டைச் சாறும்.

இவரது விரைவோட்ட சாதனைகள் இவருக்கு 'மின்னல் வேக போல்ட்' (Lightning Bolt) என்ற ஊடகப் பட்டப்பெயரையும்[5] தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கத்தின் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது, தடகள செய்திகள் நிறுவனத்தின் ஆண்டிற்கான சிறந்த வீரர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பன்முறை பெற்று தந்தன. உலகத் தடகள வீரர்களில் அதிகப்படியான வருமானம் ஈட்டும் வீரர் இவரே[6]. 2013-ஆம் ஆண்டிற்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் பந்தயங்களின் 30 ஆண்டு வரலாற்றின் அதிக வெற்றிகளைக் பெற்ற தலைச் சிறந்த வீரர்களுள் ஒருவரானார்.

2017-ஆம் ஆண்டில் லண்டன் நடைபெறவிருக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகே போட்டிகளில் இருந்து ஓய்வுபெற விரும்புவதாக போல்ட் அண்மையில் தெரிவித்தார்.[7]

தொடக்க காலம்[தொகு]

உசேன் போல்ட், ஜமைக்காவின் டிரிலானி சபையிலுள்ள ஷெர்வூட் கான்டென்ட் எனும் சிறு நகரத்தில், 21 ஆகஸ்ட் 1986 அன்று, வெல்லெஸ்லீ மற்றும் ஜெனிஃபர் போல்டிற்குப் பிறந்தார். உசேனிற்கு சடிக்கி என்றொரு சகோதரரும்[8], ஷெரீன் என்றொரு சகோதரியும்[9][10] உள்ளனர். போல்ட்டின் பெற்றோர் ஊரில் மளிகை கடை நடத்தி வந்தனர்; போல்ட் தன் சிறுவயதுகளில் சகோதரருடன் தெருக்களில் கிரிக்கெட் மற்றும் காற்பந்து விளையாடி வந்தார்,[11] போல்ட் பின்னாட்களில், "சிறுவயதில் நான் விளையட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை" என்று கூறினார்.[12]

தொடக்க காலப் போட்டிகள்[தொகு]

கரீபிய பிராந்திய நிகழ்ச்சியான 2001 கரிஃப்டா விளையாட்டுகளில் ஜமைக்கா சார்பில் முதல் முறையாகப் போட்டியிட்ட போது 400 மீ ஓட்டத்தில் தனது அப்போதைய சிறந்த ஓட்டத்தை 48.28 நொடிகளில் நிகழ்த்தி வெள்ளி பதக்கம் வென்றார். அப்போட்டியின் 200 மீ பந்தயத்திலும் 21.81 நொடிகளில் ஓடி வெள்ளி பதக்கம் வென்றார். [13]

போல்ட், அங்கேரியின் டெப்கிரீன் நகரில் நடைபெற்ற 2001 உலக இளையோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்றதன் மூலம் உலக அரங்கிற்கு அறிமுகம் ஆனார். அதன் 200 மீ பந்தயத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேரத் தவறியபோதும், அன்றுவரையிலான தனது சிறந்த ஓட்ட நேரமாக 21.73 நொடிகளைப் பதிவு செய்தார்.[14] இருப்பினும் போல்ட் தன்னைக் குறித்தோ, தன் ஓட்டப் பந்தயத்தைக் குறித்தோ தீவிரமான சிந்தனை கொள்ளவில்லை, மாறாக துடுக்குத்தனமும் குறும்புத்தனமும் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒருமுறை, கரிஃப்டா விளையாட்டுகளுக்கான 200 மீ தேர்வு போட்டிக்குப் பயிற்சி செய்ய வேண்டிய நேரத்தில் வண்டியின் பின் புறம் ஒளிந்து கொண்டதற்குக் காவலரின் பிடியில் சிக்குமளவிற்கு அவரின் குறும்புத்தனத்தின் வரம்பு நீண்டது. இச்சம்பத்திற்கு அவரது பயிற்சியாளர் மெக்நீலே காரணம் என்று உள்ளூர் சமூகத்தினர் கருதி போல்ட்டின் காவல் வைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.[15] இச்சர்ச்சை மெல்ல முடிவுக்கு வந்து போல்ட்டும் அவரது பயிற்சியாளர் மெக்நீலும் கரிஃப்டா விளையாட்டுக்களுக்குச் சென்றனர்; அங்கு போல்ட் 200 மீ மற்றும் 400 மீ பந்தயங்களில் புதிய போட்டிச் சாதனை நேரங்களான 21.12 நொ மற்றும் 47.22 நொடிகளையும் பதிவு செய்தார்.[13]தொடர்ந்து மத்திய அமெரிக்க மற்றும் கரீபிய இளையோர் போட்டிகளில் 20.61 நொ மற்றும் 47.12 நொ நேர ஓட்டங்கள் கொண்டு புதிய சாதனைகளை நிகழ்த்தினார்.[16]

ஏற்றம்[தொகு]

தன் சொந்த ஊரான கிங்ஸ்டனில் நடைபெற்ற 2002 உலக இளையோர் தடகளப் போட்டிகள் மூலம், தன் சொந்த மக்கள் முன்னிலையில் உலக அரங்கில் தன் மதிப்பை நிலைநாட்ட வாய்ப்புக் கிடைத்தது. பதினைந்து வயது நிரம்பிய நிலையில் போல்ட்டின் 1.96 மீற்றர்கள் (6 ft 5 in) உயரம் தன் சகாக்களினின்று அவரைத் தனித்துக்காட்டியது.[5] 200 மீ ஓட்டத்தை 20.61 நொடிகளில் கடந்து வெற்றி பெற்றார். [17] இது முதல் சுற்றில் நிகழ்த்திய தன் தனிச் சிறந்த ஓட்ட நேரமான 20.58 நொடிகளை விடவும் 0.03 நொடி நேரம் அதிகம்.[18] இளையோர் போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர்களுள் போல்ட்டின் வெற்றியே இதுவரை தங்கம் வென்றவருள் மிக இளம் வயதில் நிகழ்த்திய வெற்றியாகும்.[19] சொந்த மக்களின் எதிர்பார்ப்பு போல்ட்டை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியது, அதனால் தன் காலணிகளை மாற்றி அணிந்தே பந்தயத்தில் ஓடினார். எனினும் இவ்வனுபவம் பின்னாளில் எப்போதும் பந்தயத்தின் முன் தோன்றும் பதற்றம் தன்னை பாதிக்காதவாறு காத்துகொள்ள உறுதி செய்தது.[20] ஜமைக்க தொடர் ஓட்ட அணியில் பங்கேற்று 4×100 மீ மற்றும் 4×400 மீ பந்தயங்களில் முறையே 36.15 நொ மற்றும் 3:04.06 நி நேரங்களில் ஓடி, வெள்ளிப் பதக்கங்களை வென்றார். [21][22]

தொழில்முறை விளையாட்டு வாழ்க்கை[தொகு]

தொடக்க கால தொழில்முறை வாழ்க்கை (2004–2007)[தொகு]

2007 கிரிஸ்டல் பேலஸ் போட்டிகளின் போது போல்ட்

2004-இல் பெர்முடாவில் நடைபெற்ற கரிஃப்டா விளையாட்டுகளில் பங்கேற்கத் தொடங்கியதிலிருந்து, புதிய பயிற்சியாளரான ஃபிட்ஸ் கோல்மேனின் வழிகாட்டுதலின் கீழ் போல்ட் தொழில்முறை வீரராக உருவெடுத்தார்.[5] 200மீ ஓட்டத்தை 19.93 நொடிகளில் ஓடி இளையோர் சாதனை படைத்து, 20 நொடிகளுக்குள்ளாக 200 மீ ஓடிய முதல் இளையோர் விரைவோட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.[5][19] கரிஃப்டா விளையாட்டுகளின் தலைச்சிறந்த வீரருக்கான ஆஸ்டின் ஸீலி கோப்பை போல்ட்டிற்கு 2004இல் தொடர்ந்து இரண்டாம் முறையாக வழங்கப்பட்டது[23][24][25]

2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற கொண்டாட்டத்தின் போது

2009 பெர்லின் உலக தடகளப் போட்டிகளில் உலக சாதனைகள்[தொகு]

150 மீ பந்தயத்தின் 14.35 நொடிகள் உலக சாதனை ஓட்டத்திற்கு சற்று முன்னர், துவக்கப் பாளத்தில் போல்ட் (நடுவில்)
2009 பெர்லின் உலக தடகளப் போட்டியில் டைசன் கேவைத் தோற்கடித்து, 100 மீ ஓட்டப்பந்தய உலக சாதனை படைக்கும் போல்ட்.
 1. 2009ஆம் ஆண்டு 17 ஆகத்து அன்று பெர்லினில் இடம்பெற்ற உலக தடகளப் போட்டிகளில் இவர் நூறு மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துக்கொண்டார்.
 2. 100மீ சாதனையைத் தொடர்ந்து, 20 ஆகஸ்ட் அன்று நடைபெற்ற 200மீ ஓட்டத்திலும் 19.19 வினாடிகளில் உலக சாதனையைப் புரிந்து இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றார்.[26]

விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

புள்ளிவிவரங்கள்[தொகு]

சிறந்த ஓட்டங்கள்[தொகு]

நிகழ்வு நேரம் (நொடிகள்) இடம் தேதி சாதனைகள் குறிப்புகள்
100 மீ 9.58 பெர்லின், ஜெர்மனி 16 ஆகஸ்ட் 2009 உலக சாதனை மேலும் இரண்டாவது துரித வேக சாதனையும்(9.63) தக்கவைத்துள்ளார்; மூன்றாவது சாதனை வேகத்தை டைசன் கே மற்றும் யோஹன் பிலேக்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 2012-இல் போல்ட் நிகழ்த்திய 9.63 நொடிகள் ஓட்டம் தான் ஒலிம்பிக் சாதனை நேரமாகும்.
150 மீ 14.35 மான்செஸ்டர், ஐக்கிய இராச்சியம் 17 மே 2009 உலக சாதனை[35] இதன் இறுதி 100 மீ தூரத்தை 8.70 நொடிகளில் ஓடியதே 100மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட மிகத்துரித நேரமாகும். இது ஏறத்தாழ மணிக்கு 41.38 km (25.71 mi) வேகத்திற்கு சமமானதாகும்.
200 மீ 19.19 பெர்லின், ஜெர்மனி 20 ஆகஸ்ட் 2009 உலக சாதனை மேலும் ஒலிம்பிக் சாதனையான 19.30 நொடி நேரத்தில் 200 மீ ஓடிய சாதனையைக் கொண்டுள்ளார்]].
300 மீ 30.97 ஓஸ்த்ராவா, செக் குடியரசு 27 மே 2010 மைக்கேல் ஜான்சனின் 30.85 நொடிகளுக்கு அடுத்தபடியான வேகமான ஓட்டமாகும். இந்நிகழ்வு ஐ.ஏ.ஏ.எஃபால் அங்கீகரிக்கப்படாத ஒன்று.
400 மீ ஓட்டம் 45.28[5] கிங்ஸ்டன், ஜமைக்கா 5 மே 2007
4 × 100 மீ தொடரோட்டம் 36.84 லண்டன், இங்கிலாந்து 11 ஆகஸ்ட் 2012 உலக சாதனை யொஹான் ப்லேக், மைக்கேல் ஃப்ரேட்டர் மற்றும் நெஸ்டா கார்டர் ஆகியோருடன் இணைந்து நிகழ்த்தியது.

சாதனைகள்[தொகு]

100 மீ மற்றும் 200 மீ ஓட்டங்களுக்கான உசேன் போல்ட்டின் சிறந்த ஓட்ட நேரங்கள் (நொடிகள்), 2001-2015
பல் பருவங்களின் சிறந்த 100 மீ ஓட்டங்களின் நேரக் குறிப்புகள் (நொடிகளில்), 2007–2015. 2007-இல் 10.0 நொடிகளில் துவங்கி 2009-இல் 9.58 நொடிகளுக்கு (உலக சாதனை) சரிந்து, மீண்டும் 2010-இல் 9.8 நொடிகலை நோக்கி ஏறி, பின்னர் நிலையாக சரிந்து 2012-இல் 9.63 நொடிகளை எட்டியுள்ளது
பல் பருவங்களின் சிறந்த 100 மீ ஓட்டங்களின் நேரக் குறிப்புகள் (நொடிகளில்), 2007–2015[36]  
பல் பருவங்களின் சிறந்த 200 மீ ஓட்டங்களின் நேரக் குறிப்புகள் (நொடிகளில்), 2002–2015. 2002-இல் 20.6 நொடிகளில் துவங்கி, 2009-இல் 19.2 நொடிகளுக்கு(உலக சாதனை) சரிந்து, 2010-இல் 19.5 நொடிகளுக்கு ஏற்றம் கண்டு, பின்னர் நிலையாக சரிந்து 2012-இல் 19.3 நொடிகளை எட்டியது.
பல் பருவங்களின் சிறந்த 200 மீ ஓட்டங்களின் நேரக் குறிப்புகள் (நொடிகளில்), 2001–2015[36]  
இரு படங்களின் தாழ்வான புள்ளிகளும் தற்போதைய உலக சாதனைகளைக் குறிப்பவை


மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "உசேன்போல்ட்.காம் - குறிப்புப் பக்கம்". பார்த்த நாள் 6 செப்டம்பர் 2011.
 2. யூடியூபில் உசேன் போல்ட் கே-வைத் தோற்கடிக்கிறார், புதிய சாதனை படைக்கிறார் – யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்
 3. யூடியூபில் 200 மீ பந்தயத்தில் உசேன் போல்ட் புதிய உலக சாதனை – யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்
 4. "உசேன் போல்ட் ஐ.ஏ.ஏ.எஃப் குறிப்பு". ஐ.ஏ.ஏ.எஃப். பார்த்த நாள் 17 ஆகஸ்ட் 2008.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 ஹூபர்ட் லாரன்ஸ்; கார்ஃபீல்ட் சாமுவேல்ஸ் (20 ஆகஸ்ட் 2007). "(ஆங்கிலம்) யமேக்கா மீது கவனம் – உசேன் போல்ட்". (ஆங்கிலம்) ஃபோகஸ் ஆன் அத்லெட்ஸ் (தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம்). http://www.iaaf.org/news/athletes/newsid=36356.html. பார்த்த நாள்: 1 ஜூன் 2008. 
 6. பதென்ஹொசென், கர்ட் (4 ஆகஸ்ட் 2012). "(ஆங்கிலம்) உசேன் போல்ட் எவ்வாறு ஆண்டுதோறும் $20 மில்லியன் ஈட்டுகிறார்". ஃபோர்ப்ஸ். http://www.forbes.com/sites/kurtbadenhausen/2012/08/04/how-usain-bolt-earns-20-million-a-year/. பார்த்த நாள்: 10 ஆகஸ்ட் 2012. 
 7. "(ஆங்கிலம்) 2017 லண்டன் உலக சாம்பியன்ஷிப்பிற்கு பிறகு ஓய்வு பெறுகிறார் உசேன் போல்ட்". பிபிசி விளையாட்டு (14 பிப்ரவரி 2015). பார்த்த நாள் 14 பிப்ரவரி 2015.
 8. (ஆங்கிலம்) ஃபோஸ்டர், ஆந்தனி (24 நவம்பர் 2008). "போல்ட் மீண்டும் மேலொங்கினார்". ஜமைக்கா கிலேனர். 3 பிப்ரவரி 2009-இல் மீட்கப்பட்டது.
 9. ஹெல்ப்ஸ், ஹொரேஸ் (16 ஆகஸ்ட் 2008). "(ஆங்கிலம்) கிழங்கு சக்தியினாலேயே போல்ட்டின் தங்கம் - போல்ட்டின் தந்தை". ரியூட்டர்ஸ். http://www.reuters.com/article/2008/08/16/us-olympics-athletics-bolt-father-idUSPEK32492120080816. பார்த்த நாள்: 27 மார்ச் 2011. 
 10. லேய்டன், டிம் (16 ஆகஸ்ட் 2008). "(ஆங்கிலம்) த ஃபினோம்". ஸ்போர்ட்ஸ் இல்லஸ்டிரேட்டட். http://sportsillustrated.cnn.com/2008/writers/tim_layden/07/23/usain.bolt0728/. பார்த்த நாள்: 17 ஆகஸ்ட் 2008. 
 11. சின்கிலேர், கிலென்ராய் (15 ஆகஸ்ட் 2008). "(ஆங்கிலம்)போல்ட்டின் பந்தம்". ஜமைக்கா கிலேனர். பார்த்த நாள் 28 ஆகஸ்ட் 2008.
 12. லாங்க்மோர், ஆன்டுரூ (24 ஆகஸ்ட் 2008). "(ஆங்கிலம்)வரலாற்றுப் பாதையில் விரையும் திறமிக்க போல்ட்". த டைம்ஸ் (ஐக்கிய இராச்சியம்). http://www.timesonline.co.uk/tol/sport/olympics/article4596711.ece. பார்த்த நாள்: 27 ஆகஸ்ட் 2008. 
 13. 13.0 13.1 "(ஆங்கிலம்) கரிஃப்டா விளையாட்டுகள் (17 வயதுக்குட்பட்டோர்)". ஜி.பி.ஆர் அத்லெடிக்ஸ். பார்த்த நாள் 17 ஆகஸ்ட் 2008.
 14. "(ஆங்கிலம்) அதிகாரப்பூர்வ முடிவுகள் – 200 மீ – ஆடவர் – அரையிறுதி". ஐ.ஏ.ஏ.எஃப் (14 ஜூலை 2001). பார்த்த நாள் 17 ஆகஸ்ட் 2008.
 15. லூட்டன், தரேன் (18 ஆகஸ்ட் 2008). "(அங்கிலம்) பாப்லோ மெக்நீல் – போல்ட்டிற்கு விசையளித்த மனிதர்". ஜமைக்கா கிலேனர். பார்த்த நாள் 26 ஆகஸ்ட் 2008.
 16. "(ஆங்கிலம்) மத்திய அமெரிக்க மற்றும் கரீபிய இளையோர் போட்டிகள்". ஜி.பி.ஆர் அத்லெடிக்ஸ். பார்த்த நாள் 17 ஆகஸ்ட் 2008.
 17. "(ஆங்கிலம்) அதிகாரப்பூர்வ முடிவுகள் – 200 மீ – ஆடவர் – இறுதி". ஐ.ஏ.ஏ.எஃப் (19 ஜூலை 2002). பார்த்த நாள் 17 ஆகஸ்ட் 2008.
 18. "(ஆங்கிலம்) அதிகாரப்பூர்வ முடிவுகள் – 200 மீ – ஆடவர் – ஆயத்த சுற்றுகள்". ஐ.ஏ.ஏ.எஃப் (18 ஜூலை 2002). பார்த்த நாள் 8 ஆகஸ்ட் 2010.
 19. 19.0 19.1 லாங்க்மோர், ஆன்ட்ரூ (16 ஆகஸ்ட் 2008). "(ஆங்கிலம்)உசேன் போல்ட் முயற்சிக்கக்கூட இல்லை எனினும் - 9.69". த டைம்ஸ் (ஐக்கிய இராச்சியம்). http://www.timesonline.co.uk/tol/sport/olympics/article4547874.ece. பார்த்த நாள்: 17 ஆகஸ்ட் 2008. 
 20. ஹாட்டன்ஸ்டோம், சைமன் (28 ஆகஸ்ட் 2010). (ஆங்கிலம்) உசேன் போல்ட்: கட்டவிழ்த்த வேகம். த கார்டியன். 28 ஆகஸ்ட் 2010-இல் மீட்கப்பட்டது.
 21. "(ஆங்கிலம்) அதிகாரப்பூர்வ முடிவுகள் – 4x100 மீ – ஆடவர் – இறுதி". ஐ.ஏ.ஏ.எஃப் (22 ஜூலை 2002). பார்த்த நாள் 17 ஆகஸ்ட் 2008.
 22. "(ஆங்கிலம்) 4x400 மீ – ஆடவர் – இறுதி". ஐ.ஏ.ஏ.எஃப் (22 ஜூலை 2002). பார்த்த நாள் 17 ஆகஸ்ட் 2008.
 23. (ஆங்கிலம்) கரிஃப்டா விளையாட்டு பத்திரிகை, பாகம் 2. கரிஃப்டா விளையாட்டுக்கள் 2011. http://www.cariftagames2011.herobo.com/web_documents/carifta_magazine_sm_part2.pdf. பார்த்த நாள்: 12 அக்டோபர் 2011. 
 24. (ஆங்கிலம்) கரிஃப்டா விளையாட்டு பத்திரிகை, பாகம் 3. கரிஃப்டா விளையாட்டுக்கள் 2011. http://www.cariftagames2011.herobo.com/web_documents/carifta_magazine_sm_part3.pdf. பார்த்த நாள்: 12 அக்டோபர் 2011. 
 25. (ஆங்கிலம்) போல்ட் 19.93 நொடிகளில் உலக இளையோர் 200 மீ சாதனையத் தகர்க்கிறார்!. ஐ.ஏ.ஏ.எஃப். 12 ஏப்ரல் 2004. http://www.iaaf.org/news/printer,newsid=24850.htmx. பார்த்த நாள்: 7 பிப்ரவரி 2012 
 26. "உலக தடகள 200 மீ ஓட்டம்-போல்ட் புதிய சாதனை". http://tamil.oneindia.com/news/2009/08/21/sports-bolt-creates-history-in-200-m-also.html. 
 27. "Fastest man on Earth Usain Bolt wins Laureus World Sportsman of the Year Award". http://www.laureus.com/press_releases?article_id=1652. பார்த்த நாள்: 6 November 2009. 
 28. "2010 Laureus World Sports Awards Winners are Announced". http://www.laureus.com/press_releases?article_id=1975. பார்த்த நாள்: 10 March 2010. 
 29. "Usain Bolt, Jessica Ennis win top Laureus awards". The Australian. 12 March 2013. http://www.theaustralian.com.au/sport/usain-bolt-jessica-ennis-win-top-lauerus-awards/story-e6frg7mf-1226595727770. 
 30. "(ஆங்கிலம்) நம் ஒலிம்பிக் வீரர்களை வரவேற்கிறோம்", ஜமைக்கா கிலேனர், 5 அக்டோபர் 2008.
 31. 31.0 31.1 (ஆங்கிலம்) ஜமைக்காவின் தேசிய விருதுகள் [தொடர்பிழந்த இணைப்பு] ஜமைக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்
 32. 32.0 32.1 National Awards of Jamaica [தொடர்பிழந்த இணைப்பு] ஜமைக்க அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம். Quote: (ஆங்கிலம்)'So far, the youngest member is Ambassador the Hon. Usain Bolt. He was awarded at age 23 for outstanding performance in the field of athletics at the international level.'
 33. "(ஆங்கிலம்) ஜமைக்க ஆணை(ஆர்டர் ஆஃப் ஜமைக்கா) விருது பெறுகிறார் உலகின் வேகமான மனிதர் போல்ட்", The Associated Press, 19 அக்டோபர் 2009.
 34. "(ஆங்கிலம்) தேசிய விருதிற்கான 103 பேர்", ஜமைக்கா கிலேனர், 6 ஆகஸ்ட் 2009.
 35. ஐ.ஏ.ஏ.எஃப் 150 மீ தூர ஓட்டத்தை அங்கீகரிக்காததால், இது ஓர் அதிகாரபூர்வமற்ற சாதனையகவே கருதப்படுகிறது
 36. 36.0 36.1 "Athletes – Bolt Usain Biography". Iaaf.org. பார்த்த நாள் 15 July 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

நிழற்படங்கள்[தொகு]

காணொலிகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உசேன்_போல்ட்&oldid=1910126" இருந்து மீள்விக்கப்பட்டது