அடா லவ்லேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடா லவ்லேசு
அடா கிங், கவுண்டெசு ஆப் லவ்லேசு, 1840
பிறப்பு(1815-12-10)10 திசம்பர் 1815
லண்டன், இங்கிலாந்து
இறப்பு27 நவம்பர் 1852(1852-11-27) (அகவை 36)
மேரில்போர்ன், லண்டன், இங்கிலாந்து
கல்லறைபுனித மகதலேனா மரியாள் ஆலயம், ஹக்னல், நாட்டிங்கேம்
தேசியம்பிரித்தானியர்
தாக்கம் 
செலுத்தியோர்
த மோர்கன்
பட்டம்லவ்லேஸின் கோமகள்

அகஸ்தா அடா கிங், லவ்லேஸின் கோமகள் (10 டிசம்பர் 1815 – 27 நவம்பர் 1852; இயற்பெயர் அகஸ்தா அடா பைரோன்) என்பவர் ஆங்கிலேய கணிதவியலாளர் ஆவார். பாபேஜ்ஜின் பகுப்புப் பொறியில் இவராற்றியப்பணிக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பொறிக்கு இவர் எழுதியதே முதல் முதலாக எழுதப்பட்ட படிமுறைத் தீர்வு ஆகும். இதனால் இவர் முதல் நிரலராகக் கருதப்படுகின்றார்.[1][2][3] இவருக்கு மதிப்பளிக்கும் வகையில் அமெரிக்க இராணுவம் வடிவமைத்த நிரலாக்க மொழிக்கு அடா நிரலாக்க மொழி எனப் பெயரிடப்பட்டது.

வாழ்க்கை[தொகு]

அடா பைரன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் காதல் கவிஞர் லார்ட் பைரன் மற்றும் மில்பன்கே என்பவர்களுக்கு மகளாக 1815ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். பைரன் குறுகிய காலமே மில்பன்கே உடன் வாழ்ந்தார். பின், அடா அவர் தாயுடன் வாழ்ந்தார். அவரது வாழ்க்கை அனைத்து துறையிலும் அவரை பயணிக்க செய்தது. ஆனால் அடா தன் நேரத்தை கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார். அவரின் கடின உழைப்புக்கு பிறகு 1828ல், தனது 13வது வயதில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். கணிதம் இவரது வாழ்கைக்கு பறக்க ஒரு சிறகைக் கொடுத்தது.

திருமணம் /குடும்பம்[தொகு]

1835ல் அடா பத்து வயது மூத்தவரான வில்லியம் கிங் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பின், 1838ஆம் ஆண்டு இவர்கள் ஏர்ல் மற்றும் லவ்லேஸால் கவுண்டெஸ் (Earl and Countess of Lovelace) என்ற பட்டத்தின் மூலம் கௌரவிக்கப்பட்டனர். அடாவிற்கு மூன்று குழந்தைகள்.

கண்டுபிடிப்புகள்[தொகு]

அடா தன் நேரத்தை கணிதத்திலும், இசையிலும் செலவிட்டார். அவரின் கடின உழைப்புக்கு பிறகு 1828ல், தனது 13வது வயதில் பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார். கணிதம் இவரது வாழ்கைக்கு பறக்க ஒரு சிறகைக் கொடுத்தது.லேடி பைரன் மற்றும் அடா லண்டனில் குடிப்பெயர்தந்தனர். அது ஒரு பணக்கார சமூகம். அங்கு அனைவரும் அரசியல், கணிதம், உயிரியல், வானவியல் என பல்வேறு துறை அனுபவ அறிவைப் பெற்று இருந்தனர். 19ம் நுற்றாண்டில் தொழில் துறை ஆராய்ச்சி என்று ஒன்று இல்லை. ஆகையால், ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் வேவேல் என்ற பல்துறை வல்லுனரின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். அக்காலத்தில் பெண்கள் இத்தகைய அறிவைப் பெற்றிருந்தாலும் அவர்கள் பெரிதும் வரவேற்கப்படவில்லை.1833 ஆம் ஆண்டு அடா தனது 17 வயதில் கணினி உலகின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் பாப்பேஜ்ஜியை சந்தித்தார். அடா கணித அறிவு மற்றும் திறன் ஆய்வில் சிறந்து விளங்கினார். பின், பாப்பேஜ் உடன் நட்பு தொடர்ந்தது. 1834 ஆம் ஆண்டு “வேறுபாட்டுப் பொறி” (Difference Engine) என்ற கணக்கிட்டு இயந்திரத்தை முடிக்கும் முன்பே அவர் தனது இரண்டாவது முயற்சியாக பகுப்பாய்வு இயந்திரத்தை (Analytical Engine) உருவாக்க முடிவு செய்தார். இவர் தனது இரண்டாவது ஆராய்ச்சி நிதிக்காக நாடாளுமன்றத்தை அணுகும் பொழுது உறுப்பினர்கள் முதல் ஆராய்ச்சியை முடிக்காமலே இரண்டாவதை தொடங்குவதை எதிர்த்தனர். ஆனாலும் பாபேஜ்க்கு வெளிநாட்டு ஆதரவு கிட்டியது. 1842 ஆம் ஆண்டில், இத்தாலிய கணிதவியலாளர், லூயிஸ் மினிப்ரே தனது பகுப்பாய்வு இயந்திரத்தின் (Analytical Engine) ஆய்வுகளை வெளியிட்டார். லூயிஸ் மினிப்ரேவின் ஆய்வை தொடர்ந்து பாபேஜ்யும், அடாவும் இணைந்து பகுப்பாய்வு இயந்திரத்தின் முதல் கணனி நிரலை எழுதினார். இது அடாவிற்கு நீடித்த புகழைத் தேடிக்கொடுத்தது. அடா தன்னை ஒரு ஆய்வாளர் என்றும் மீவியர்பியன் (Analyst & Metaphysician) என்றும் முன்நிலைப்படுத்திக்கொண்டார். பாப்பேஜ்யின் இயந்திர திட்டங்களை புரிந்து அல்கோரிதங்களை எழுதினார். மேலும், இது பொது நோக்கத்திற்காக கணினி என்றும் மிக சிக்கலான செயல்பாடுகளை (Complex Problem) தீர்க்க உதவும் என்றும் கூறினார்.

மறைவு[தொகு]

1852ம் ஆண்டு தனது 37 வது வயதில் புற்றுநோயால் இறந்தார். இவரது அறிவியல் பங்களிப்புகள் சமீபத்தில் புத்துயிர் பெற்றுக்கொண்டு இருக்கிறது.

பெருமை[தொகு]

இவரை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்க இராணுவம் கண்டுபிடித்த நிரலாக்க மொழிக்கு இவர் பெயரை சூட்டியது.2015ஆம் ஆண்டு அகஸ்தா அடாவிற்கு 200வது பிறந்த நாள். கணினி உலகின் ஒப்பற்ற பெண்ணாய் திகழ்ந்த அடாவை பெருமைப்படுதும் விதமாக பிரிட்டிஷ் டிஜிட்டல்-உரிமைகள் ஆர்வலர் ஆன்டர்சன் கடந்த 2009 ஆண்டு முதல் அடா லோவ்லேஸ் தினம் கொண்டப்படுவது பெண்உலகிற்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல நவீன கணினி உலகின் எழுச்சிக்கு வித்திட்டவராய் திகழ்கிறார்.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அடா லவ்லேசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Fuegi & Francis 2003, ப. 16–26.
  2. Phillips, Ana Lena (நவம்பர்–டிசம்பர் 2011). "Crowdsourcing gender equity: Ada Lovelace Day, and its companion website, aims to raise the profile of women in science and technology". American Scientist 99 (6): 463. 
  3. "Ada Lovelace honoured by Google doodle". The Guardian. 10 டிசம்பர் 2012. http://www.guardian.co.uk/technology/2012/dec/10/ada-lovelace-honoured-google-doodle. பார்த்த நாள்: 10 டிசம்பர் 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடா_லவ்லேஸ்&oldid=3729856" இலிருந்து மீள்விக்கப்பட்டது