அலைச்சறுக்கு
அலைச் சறுக்கு (Surfing) என்பது நீர் விளையாட்டு ஆகும். தக்கைபலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்வார். பொதுவாக, இந்த விளையாட்டில் ஒருவரே பங்கேற்பார். போட்டிகளும் நடைபெறுவதும் உண்டு. பெரும்பாலும் இந்த விளையாட்டை கடலில் மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். ஏரிகளில் செயற்கையாக உருவாக்கப்படும் அலைகளிலும் விளையாடுவதும் உண்டு. இந்த தக்கைபலகைக்கு சர்ப் போட் என்ற பெயர் உண்டு. இது ஒன்பது அடிவரையிலும் நீளம் கொண்டதாக இருக்கும். இதை காலில் இணைத்துக் கொண்டு விளையாடத் துவங்குவர். ஐந்தடி வரையிலும் உயரம் கொண்ட அலைகளில் பயணித்து, அவற்றிலேயே சாகசம் செய்வோருக்கு போட்டிகளின் போது அதிக புள்ளிகள் வழங்கப்படும். இந்த விளையாட்டிற்கான அடிப்படை விதிகளும், வழிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன.
அலைகள்
[தொகு]திறந்தவெளியில் இருக்கும் நீரின்மேல், காற்று தொடர்ந்து வீசினால் அலைகள் உருவாகும். அலையின் உயரமும், அகலமும், காற்றின் தன்மையைப் பொருத்து அமையும்.
அலைச்சறுக்கர்கள்
[தொகு]தங்கள் பொழுதுபோக்கிற்காக அலைகளில் சறுக்கி விளையாடுவோரும் உண்டு. உலகளவில் போட்டிகள் நடத்தப்படுவதால், அவற்றில் பங்கேற்று பணத்தைப் பரிசாகப் பெற பயிற்சி பெறுவோரும் உண்டு. இந்த போட்டிகளில் அலைச்சறுக்கர்களின் சாகசங்களை படம்பிடித்து வருமானம் பெறுவோரும் உண்டு.
முறை
[தொகு]அலைச்சறுக்கர், தன் காலில் பலகையைக் கட்டிக் கொண்டு கரையோரத்தில் நீந்துவார். அலையின் வேகத்திற்கு இணையாக நீந்தத் தொடங்கியதும், எழுந்து நின்று, அலையோடு முன்னேறிச் செல்வார். புதிதாக கற்பவர்களுக்கு அலையின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதில் சிக்கல் இருக்கும். சீறிப் பாயும் அலைகளில் தாவிச் செல்வதைக் கொண்டு, அலைச்சறுக்கர்களின் திறமையை மதிப்பிடலாம்.
ஆபத்துகள்
[தொகு]நீரில் அமிழ்தல்
[தொகு]மற்றைய நீர் விளையாட்டுகளைப் போன்றே நீரில் அமிழ்தலுக்கான வாய்ப்பும் உண்டு. எனவே, விளையாட வருபவருக்கு நீந்தத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். பலகையை தன் காலுடன் கட்டியிருப்பதால், அலைச்சறுக்கர் நீரில் மிதப்பார். எனினும், அது கழன்றுவிடவும் வாய்ப்பு உள்ளது. [1]
மோதுதல்
[தொகு]சில நேரங்களில், பாறைகளிலோ, மண் திட்டுகளிலோ, பனிக்கட்டிகளிலோ மோதி, காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. [2] தோலில் கீறலோ, சிராய்ப்போ ஏற்படுவதும் உண்டு. இறப்பதற்கும் வாப்பு உண்டு.
கடல்வாழ் உயிரினங்களால் ஏற்படும் ஆபத்து
[தொகு]கடலில் வாழும் சுறா போன்ற மீன்களாலும், ஏனைய விலங்குகளாலும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உண்டு. [3]
அமைப்புகள்
[தொகு]இந்தியாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் பள்ளிகள், இந்திய அலைச்சறுக்குப் பள்ளிக் குழுமத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Ocean Safety". Archived from the original on 2013-05-05. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
- ↑ "Dangers - Hard Bottoms". Surfing San Diego. Site Tutor Inc. பார்க்கப்பட்ட நாள் 26 September 2012.
- ↑ "Unprovoked White Shark Attacks on Surfers". Shark Research Committee. பார்க்கப்பட்ட நாள் 20 September 2010.