நீவா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீவா ஆறு அல்லது பொன்னை ஆறு என்பது பாலாற்றின் துணை ஆறாகும்.[1] இந்த ஆறானது ஆந்திரப் பிரதேசத்தின், சித்தூர் மாவட்டம், சேசாசலம் வனப்பகுதியில் தோன்றுகிறது. அங்கிருந்து 83 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் ஆந்திர எல்லையான பொன்னை என்ற இடத்தை வந்தடைகிறது. அங்கிருந்து திருவல்லம் வழியாக பாய்ந்து மேல்விஷாரம் அருகே பாலாற்றில் கலக்கிறது.

இந்த ஆற்றின் குறுக்கே மேல்பாடி என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பணையில்யில் தேக்கப்படும் நீரை கால்வாய்கள் வழியாக கொண்டு சென்று, வேலூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 129 ஏரிகளை நிரப்பி அப்பகுதிகளை வளப்படுத்தியது. பல்வேறு சூழல்களால் இந்த ஆறு 30 ஆண்டுகளாக வறண்டு காணப்படுகிறது.[2]

பரவலர் பண்பாட்டில்[தொகு]

பென்னை என்கிற நீவா நதியால் மூன்று போகம் விளைச்சலோடு வாழ்ந்த உழவர் பெருமக்களின் நிலங்களை பல்வேறு வாக்குறுதிகளை அளித்த அரசானது சிப்காட் தொழிறாசலை வளாகங்களுக்காக கையகப்படுத்துகிறது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளால் உழவர்களின் வாழ்வும், ஆறும் பலியாவதை நீவா நதி என்ற பெயரில் எழுத்தாளர் கவிப்பித்தன் புதினமாக எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. வ. செந்தில் குமார் (23 சூலை 2015). "பாலாறு: தஞ்சைக்கு நிகராக செழித்தோங்கிய வடாற்காடு". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 மே 2019.
  2. "பொன்னை ஆற்றில் விடப்படும் தொழிற்சாலைக் கழிவுநீர்: குடிநீர் நஞ்சாகும் அபாயம்". செய்தி. தினமணி. 24 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 7 மே 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. ஆதி வள்ளியப்பன் (27 ஏப்ரல் 2019). "படிப்போம் பகிர்வோம்: வேலூர் நதி கொல்லப்பட்ட கதை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7 மே 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீவா_ஆறு&oldid=3577653" இலிருந்து மீள்விக்கப்பட்டது