உள்ளடக்கத்துக்குச் செல்

மனந்தெளிநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனந்தெளிநிலை (mindfulness) என்பது ஒருவர் இத்தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டங்கள், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள் மீது குவிக்கும் கவனம் ஆகும். இக்கவனம் விழிநிலையில் வலிந்த நோக்த்தோடு, எடைபோடாத, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும். இதை தியானத்தின் (Meditation) மூலம் பயில முடியும்.[1][2][3]

மனந்தெளிநிலை அனப்பனாசத்தி எனும் புத்த ஆழ்நிலைப் பயிற்சியில் இருந்து தோன்றியது. இப்பயிற்சியானது உளவியல் மருத்துவத்தில், கட்டுப்படுத்தவியலாத அதீதப்பற்று நோய் (OCD), பதட்டம், உளச்சோர்வு, போதை அடிமை போன்ற நிலைகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Baer, Ruth A. (2003). "Mindfulness Training as a Clinical Intervention: A Conceptual and Empirical Review". Clinical Psychology: Science and Practice 10 (2): 125–143. doi:10.1093/clipsy.bpg015. http://www.wisebrain.org/papers/MindfulnessPsyTx.pdf. 
  2. Kabat-Zinn J (2013). Full Catastrophe Living: Using the Wisdom of Your Body and Mind to Face Stress, Pain, and Illness. New York: Bantam Dell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0345539724.
  3. "Mindfulness Interventions". Annual Review of Psychology 68: 491–516. January 2017. doi:10.1146/annurev-psych-042716-051139. பப்மெட்:27687118. "Methodologically rigorous RCTs have demonstrated that mindfulness interventions improve outcomes in multiple domains (e.g., chronic pain, depression relapse, addiction).". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனந்தெளிநிலை&oldid=4116828" இலிருந்து மீள்விக்கப்பட்டது