மகர் மக்கள்
மொத்த மக்கள்தொகை | |
---|---|
18,87,733 | |
மொழி(கள்) | |
மகர் மொழி மற்றும் கைகே மொழி | |
சமயங்கள் | |
மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம், ஆவியுலகக் கோட்பாடு |
மகர் மக்கள் (Magar) நேபாளத்தின் மூன்றாவது பெரிய இனக்குழுவினர் ஆவர். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள மக்கள்தொகையில் மகர் மக்கள் 7% ஆகவுள்ளனர். மேற்கு நேபாளத்தில் பாயும் கண்டகி ஆற்றின் மேற்கு கரைப்பகுதியில் அமைந்த லும்பினி மாநிலத்தில் உள்ள குல்மி மாவட்டம், அர்காகாஞ்சி மாவட்டம் மற்றும் பால்பா மாவட்டங்களே மகர் மக்களின் தாயகம் ஆகும்.[1] மகர் மக்கள் மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம் மற்றும் ஆவியுலகக் கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். இம்மக்களின் பெரும்பாலோர் மகர் மொழியும், கைகே மொழியும் பேசுகின்றனர்.
நேபாளத்தில் மகர் மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் வாழும் மகர் மக்கள்தொகை 1,887,733 (7.1%) ஆகும். மகர் மக்கள் லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் உள்ள கீழ்கண்ட மாவட்டங்களில் வாழ்கின்றனர்:[2]
- பால்பா மாவட்டம் (52.3%)
- ரோல்பா மாவட்டம் (43.2%)
- மியாக்தி மாவட்டம் (39.5%)
- பியுட்டான் மாவட்டம் (32.6%)
- பாகலுங் மாவட்டம் (28.0%)
- தனஹு மாவட்டம் (26.9%)
- கிழக்கு ருக்கும் மாவட்டம் (23.8%)
- சியாங்ஜா மாவட்டம் (21.5%)
- குல்மி மாவட்டம் (20.7%)
- சுர்கேத் மாவட்டம் (18.9%)
- அர்காகாஞ்சி மாவட்டம் (18.0%)
- நவல்பராசி மாவட்டம் (17.5%)
- சல்யான் மாவட்டம் (15.1%)
- சிந்துலி மாவட்டம் (14.9%)
- உதயபூர் மாவட்டம் (13.9%)
- தாங் மாவட்டம் (13.6%)
- டோல்பா மாவட்டம் (12.5%)
- கோர்க்கா மாவட்டம் (11.6%)
- ஒகல்டுங்கா மாவட்டம் (11.2%)
- ராமேச்சாப் மாவட்டம் (11.1%)
- பர்பத் மாவட்டம் (11.0%)
- ரூபந்தேஹி மாவட்டம் (10.7%)
- தன்குட்டா மாவட்டம் (9.7%)
- தைலேக் மாவட்டம் (9.2%)
- ஜாஜர்கோட் மாவட்டம் (9.0%)
- காஸ்கி மாவட்டம் (8.6%)
- தாதிங் மாவட்டம் (8.5%)
- முஸ்தாங் மாவட்டம் (8.3%)
தொழில் & அரசியல்
[தொகு]மகர் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் இராணுவச் சேவை ஆகும்.நேபாளம், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவத்தில் மகர் இன கூர்க்கா மக்கள் போர் வீரர்களாகப் பணிபுரிகின்றனர்.[3][4]
கோத் படுகொலைகள் வரை நேபாள இராச்சியத்தின் முக்கிய அரசவைப் பிரபுக்களாக மகர் இனத் தலைவர்கள் இருந்தனர். மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சியிலும், பின்னரும் நேபாள இராச்சிய அரசவையில் ஆறு அமைச்சர்களில் ஒருவராக மகர் இனத் தலைவர் இருந்தார்.[5]நேபாள இராணா வம்ச ஆட்சியின் போது மகர் இன மக்கள் அரசவையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்.
-
பாரம்பரிய உடை மற்றும் நகைகளில் மகர் இன இளைஞர்கள்
-
நேபாள இராச்சியத்தின் தலைமை படைத்தலைவர் அபிமான் சிங் ராண மகர்
-
மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் முதல் முதலமைச்சர் பிராஜ் தாபா மகர்
-
லக்கன் தாபா மகர்
அடிக்குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Vaidya, Tulasī Rāma; Mānandhara, Triratna; Joshi, Shankar Lal (1993). Social history of Nepal (in ஆங்கிலம்). Anmol Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8170417996.
- ↑ 2011 Nepal Census, District Level Detail Report
- ↑ Dor Bahadur Bista. 1972. People of Nepal. Kathmandu: Ratna Pustak Bhandar. p. 664.
- ↑ Eden Vansittart. 1993 (Reprint). The Gurkhas. New Delhi: Anmol Publications. p. 67.
- ↑ https://www.himalkhabar.com/news/115409
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Acharya, Baburam, Nepalako Samkshipta Itihasa (A short history of Nepal), edited by Devi Prasad Bhandari, Purnima No. 48, Chaitra 2037 (March–April 1981), Chapter VII:
வெளி இணைப்புகள்
[தொகு]- Nepal Magar Association, Central Committee, Kathmandu Nepal.
- Magar Studies Center
- Magar Academic Group பரணிடப்பட்டது 2021-02-03 at the வந்தவழி இயந்திரம்
- The Magar language – Linguistics research – Folktales in Magar (Western) – Nepal