உள்ளடக்கத்துக்குச் செல்

கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோலா சிலாங்கூர் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோலா சிலாங்கூர் (P096)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Kuala Selangor (P096)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி

மாவட்டம்கோலா சிலாங்கூர் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிகோலா சிலாங்கூர் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலா சிலாங்கூர்; தஞ்சோங் காராங்; செகிஞ்சான்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
உலு சிலாங்கூர் (2022)
மக்களவை உறுப்பினர்சுல்கிப்லி அகமட்
(Dzulkefly Ahmad)
வாக்காளர்கள் எண்ணிக்கை105,325 (2023)[1]
தொகுதி பரப்பளவு434 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (68.7%)
  சீனர் (12.0%)
  இதர இனத்தவர் (0.2%)

கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P096) ஆகும்.

கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் மலாயா கூட்டரசின் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 1955-ஆம் ஆண்டில் இருந்து கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கோலா சிலாங்கூர் மாவட்டம்

[தொகு]

கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர் ஆகும்.[4]

கோலா சிலாங்கூர்

[தொகு]

கோலா சிலாங்கூர் நகரம், கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் நிர்வாக மையம். கிள்ளான் நகரில் இருந்து 50 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோலா சிலாங்கூர் நகரம், சிலாங்கூர் சுல்தானகத்தின் தலைநகரமாக இருந்தது.[5] பின்னர் 1827-ஆம் ஆண்டில் கோலா லங்காட் பகுதியில் உள்ள ஜுக்ரா நகரத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 1870-களில் சிலாங்கூர் சுல்தானகடததினால், கிள்ளான் நகரத்திற்கு மாற்றப்பட்டது.

கோலா சிலாங்கூரின் வரலாறு 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்குகிறது. ஜொகூர் சுல்தானகத்தின் ஆட்சியில் கோலா சிலாங்கூர் இருந்தது. ஜொகூரில் இருந்து துன் முகமட் எனும் அரசப் பிரதிநிதி, கோலா சிலாங்கூர் நிலப் பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்.

கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி

[தொகு]
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1955 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது P065 1955–1959 ராஜா ரசுதாம் ராஜா சாயிட்
(Raja Rastam Shahrome Raja Said Tauphy)
கூட்டணி
(அம்னோ)
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது P065 1959–1963 முகமது தகாரி முகமது அலி
(Mohamed Dahari Mohd Ali)
கூட்டணி
(அம்னோ)
மலேசிய மக்களவை
1-ஆவது P065 1963–1964 முகமது தகாரி முகமது அலி
(Mohamed Dahari Mohd Ali)
கூட்டணி
(அம்னோ)
2-ஆவது 1964–1969 ராஜா ரோம் ராஜா மாமோர்
(Raja Rome Raja Ma'amor)
1969–1971 நாடாளுமன்றம் முடக்கப்பட்டது[6]
3-ஆவது P065 1971–1973 ராஜா நோங் சிக் ராஜா இசாக்
(Raja Nong Chik Raja Ishak)
கூட்டணி
(அம்னோ)
1973–1974 கூட்டணி
(அம்னோ)
4-ஆவது P076 1974–1978 ராஜா நோங் சிக் ராஜா இசாக்
(Raja Nong Chik Raja Ishak)
5-ஆவது 1978–1982 அபு அசன் ஒமார்
(Abu Hassan Omar)
6-ஆவது 1982–1986
7-ஆவது P085 1986–1990
8-ஆவது 1990–1995
9-ஆவது P089 1995–1997
1997–1999 ஜமாலுதீன் அட்னான்
(Jamaluddin Adnan)
10-ஆவது 1999–2004 மொகமட் சயூதி சாயிட்
(Mohamed Sayuti Said)
11-ஆவது P096 2004–2008 முகமட் தாவுத் தாரிகெப்
(Mohd Daud Tarihep)
12-ஆவது 2008–2013 சுல்கிப்லி அகமது
(Dzulkefly Ahmad)
பி.கே.ஆர் (பாஸ்)
13-ஆவது 2013–2018 இர்மோகிசாம் இப்ராகிம்
(Irmohizam Ibrahim)
பாரிசான் (அம்னோ)
14-ஆவது 2018–2022 சுல்கிப்லி அகமது
(Dzulkefly Ahmad)
பாக்காத்தான் (அமாணா)
15-ஆவது 2022–தற்போது

கோலா சிலாங்கூர் சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]
நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
கோலா சிலாங்கூர் அசாம் ஜாவா
புக்கிட் மெலாவத்தி
ஈஜோக்
ஜெராம் ஜெராம்
கோலா சிலாங்கூர்
பெக்கான் கோலா சிலாங்கூர்
bஎர்மாத்தாங்
செரி சகாயா
சுங்கை திங்கி
தஞ்சோங் காராங்

கோலா சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

[தொகு]
சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N10 புக்கிட் மெலாவத்தி நூராசிலே யகாயா
(Noorazley Yahya)
பெரிக்காத்தான் (பெர்சத்து)
N11 ஈஜோக் ஜெப்ரி மேசன்
(Jefri Mejan)
பெரிக்காத்தான் (பாஸ்)
N12 ஜெராம் அரிசன் அசான்
(Harrison Hassan )
பெரிக்காத்தான் (பெர்சத்து)

கோலா சிலாங்கூர் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
102,951
வாக்களித்தவர்கள்
(Turnout)
87,685 84.00% 3.67
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
86,481 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
132
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
1,072
பெரும்பான்மை
(Majority)
1,002 1.15% 12.85
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
[7]

கோலா சிலாங்கூர் வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (கோலா சிலாங்கூர் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
சுல்கிப்லி அகமட்
(Dzulkefly Ahmad)
பாக்காத்தான் 31,033 35.88% -14.09
துங்கு ஜப்ருல் அசீஸ்
(Tengku Zafrul Aziz)
பாரிசான் 30,031 34.73% -1.01
முகமது நூர் முகமது சகார்
(Mohd Noor Mohd Sahar)
பெரிக்காத்தான் 23,639 27.33% +27.33
முகமது சைத் ரோசுலி
(Mohd Shaid Rosli)
உள்நாட்டு போராளிகள் கட்சி 1,778 2.06% +2.06

கோலா சிலாங்கூர் உள்ளாட்சி மன்றங்கள்

[தொகு]
எண் சட்டமன்ற தொகுதி உள்ளாட்சி மன்றம்
N10 புக்கிட் மெலாவத்தி
(Bukit Melawati)
கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி
N11 ஈஜோக்
(Ijok)
N12 ஜெராம்
(Jeram)

மலேசிய உள்ளாட்சி மன்றங்கள்

[தொகு]
இடம் உள்ளாட்சி மலாய் ஆங்கிலம் எடுத்துக்காட்டு
மாநகரம் மாநகராட்சி Dewan Bandaraya City Hall or City Council கோலாலம்பூர் மாநகராட்சி
நகரம் நகராட்சி Majlis Perbandaran Municipal Council செலாயாங் நகராட்சி
கிராமப்புறம் மாவட்ட ஊராட்சி Majlis Daerah District Council கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி
சிறப்பு உள்ளாட்சி நகராண்மைக் கழகம்;
மேம்பாட்டுக் கழகம்
Pihak Berkuasa Tempatan Corporation; Development Board; Development Authority புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
  5. "SEJARAH DAERAH KUALA SELANGOR". பார்க்கப்பட்ட நாள் 29 April 2019.
  6. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
  7. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]