பாண்டான் மக்களவைத் தொகுதி
பாண்டான் P100 Pandan | |
---|---|
மலேசிய நாடாளுமன்றம் | |
முன்னாள் தொகுதி | |
நாடாளுமன்ற உறுப்பினர் | ராபிஸி ராம்லி |
கட்சி | பாக்காத்தான் ஹரப்பான்; பி.கே.ஆர். |
அமைவிடம் | உலு லங்காட் சிலாங்கூர் மலேசியா |
வாக்காளர்கள் | 148,730 |
பாண்டான் (மலாய்: Pandan; ஆங்கிலம்: Pandan; சீனம்: 香兰); என்பது மலேசியா, சிலாங்கூர் உலு லங்காட் மாவட்டதில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதி; மற்றும் ஒரு நாடாளுமன்றத் தொகுதி (P100) ஆகும்.
இந்தத் தொகுதி 2002-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2003-ஆம் ஆண்டு முதல் மலேசிய மக்களவையில் (Dewan Rakyat) பிரதிநிதித்துவம் படுத்தப் படுகிறது.[1]
பொது
[தொகு]2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் (2022 Malaysian General Election) இந்தத் தொகுதியில் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பி.கே.ஆர்.யின் சார்பில் ராபிஸி ராம்லி (Mohd Rafizi Ramli) என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2022- ஆம் ஆண்டு அன்வார் இப்ராகிம் அமைச்சரவையில் பொருளாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திராங்கானு மாநிலத்தின் பெசுட் நகர்ப் பகுதியில் பிறந்தவர். கிழக்கு கடற்கரை நகரமான கெமாமான் பகுதியில் வளர்ந்தவர். இவர் ஓர் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர்; இவரின் தந்தையார் ரப்பர் மரம் சீவும் தொழில் செய்தவர்.
பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியின் பரப்பளவு 20 சதுர கி.மீ. 2022-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி 148,730 வாக்காளர்கள் உள்ளனர்.
பாண்டான் நாடாளுமன்றத் தொகுதி
[தொகு]பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
அம்பாங் ஜெயாவில் இருந்து உருவாக்கப்பட்ட தொகுதி | |||
11-ஆவது | 2004–2008 | ஓங் தீ கியாட் | பாரிசான் (மசீச) |
12-ஆவது | 2008–2013 | ||
13-ஆவது | 2013–2018 | ராபிசி ராம்லி | (பிகேஆர்) |
14-ஆவது | 2018–2022 | வான் அசிசா வான் இஸ்மாயில் | பாக்காத்தான் (பிகேஆர்) |
15-ஆவது | 2022-தற்போது வரையில் | ராபிசி ராம்லி |
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]நாடாளுமன்றத் தொகுதி | சட்டமன்றத் தொகுதி | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது வரையில் | |
பாண்டான் | செம்பாக்கா | ||||||
பாண்டான் இண்டா | |||||||
தெராத்தாய் |
மலேசியப் பொதுத் தேர்தல், 2022 முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | (%) | |
---|---|---|---|---|
பாக்காத்தான் அரப்பான் | ராபிசி ராம்லி | 74,002 | 63.98 | |
பெரிக்காத்தான் நேசனல் | முகமட் ராபிக் | 25,706 | 22.23 | |
பாரிசான் நேசனல் | லியோங் கோக் வீ | 11,664 | 10.09 | |
சபா பாரம்பரிய கட்சி | ஓங் தி கீட் | 3,323 | 2.87 | |
தாயகப் போராளிகள் கட்சி | நதியா அனாபியா | 961 | 0.83 |
மேலும் காண்க
[தொகு]- கோம்பாக்
- உலு லங்காட் மாவட்டம்
- மலேசியப் பொதுத் தேர்தல்
- மலேசியப் பொதுத் தேர்தல், 2022
- அன்வார் இப்ராகிம் அமைச்சரவை
மேற்கோள்கள்
[தொகு]- "Keputusan Pilihan Raya Suruhanjaya Pilihan Raya". Election Commission of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-12.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. Archived from the original (PDF) on 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
வெளி இணைப்புகள்
[தொகு]