உள்ளடக்கத்துக்குச் செல்

அரியானா சட்டப் பேரவைத் தேர்தல், 2019

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியானா சட்டப் பேரவைத் தேர்தல், 2019

← 2014 21 அக்டோபர் 2019 2024 →
வாக்களித்தோர்68.20% ( 8.34%)
 
தலைவர் மனோகர் லால் கட்டார் பூபேந்தர் சிங் ஹூடா
கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
தலைவரான
ஆண்டு
2014 2005
விழுக்காடு 36.49% 28.08%

 
தலைவர் துஷ்யந்த் சவுதாலா அபே சிங் சவுதாலா
கட்சி ஜனநாயக ஜனதா கட்சி இ.தே.லோ.த.
கூட்டணி -
தலைவரான
ஆண்டு
2018 2014
விழுக்காடு 14.8% 2.44%

தொகுதி வாரியாக தேர்தல் முடிவுகள்

அரியானா சட்டமன்றம் அமைப்பு, தேர்தலுக்குப் பின்னர்

முந்தைய முதலமைச்சர்

மனோகர் லால் கட்டார்
பா.ஜ.க

முதலமைச்சர் -தெரிவு

மனோகர் லால் கட்டார்
பா.ஜ.க


அரியானா சட்டப் பேரவைத் தேர்தல், 2019 (2019 Haryana Legislative Assembly election) என்பது அரியானா சட்டமன்றத்தின் 90 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அரியானாவில் 21 அக்டோபர் 2019 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆகும்.[1][2] இத்தேர்தலின் இறுதி வாக்குப்பதிவு விகிதம் 68.20ஆக இருந்தது.[3] பதிவான வாக்குகள் 24 அக்டோபர் 2019 அன்று எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[4]

இத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் ஜனநாய ஜனதா கட்சி (ஜஜக) மற்றும் ஏழு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தது.[5] பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும், ஜஜக தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையை வென்று, மாநிலத்தில் காங்கிரசின் 10 ஆண்டு ஆட்சிக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

தேர்தல்கள்

[தொகு]

அட்டவணை

[தொகு]
தேர்தல் நிகழ்வு அரியானா
தேர்தல் அறிவிப்பு நாள் 27 செப்டம்பர் 2019
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 4 அக்டோபர் 2019
வேட்புமனு ஆய்வு செய்தல் 5 அக்டோபர் 2019
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 7 அக்டோபர் 2019
வாக்குப்பதிவு நாள் அக்டோபர் 21,2019
வாக்குகள் எண்ணிக்கை 24 அக்டோபர் 2019
ஆதாரம்: இன்றைய வணிகம்[1]

வாக்குப்பதிவு

[தொகு]

2019 ஆண்டு அரியான சட்டப்பேரவை தேர்தல் இறுதி வாக்குப்பதிவு 68.20% ஆக இருந்தது.[3] பதேகாபாத் (73.7%), கைதல் (73.3), ஜகதாரி (73%), மற்றும் காதின் (72.5%) சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குப்பதிவுகள் கொண்ட தொகுதிகளாகவும், குருகிராம் (51.2%), பட்கால் (51.3%), மற்றும் திகாவ் (53.2%) ஆகியவை மாநிலத்தில் மிகக் குறைந்த வாக்குப்பதிவைக் கொண்ட தொகுதிகளாகும் இருந்தன. இருப்பினும் குறைந்த வாக்குப்பதிவுகள் கொண்ட தொகுதிகளின் வாக்குப்பதிவு விகிதம் 50%க்கும் சற்று அதிகமாக இருந்தது.[6]

எண் கட்சி கொடி சின்னம் புகைப்படம் தலைவர். போட்டியிட்ட இடங்கள்
1. பாரதிய ஜனதா கட்சி மனோகர் லால் கட்டார் 90
எண் கட்சி கொடி சின்னம் புகைப்படம் தலைவர் போட்டியிட்ட இடங்கள்
1. இந்திய தேசிய காங்கிரசு பூபேந்தர் சிங் ஹூடா 90
எண் கட்சி கொடி சின்னம் புகைப்படம் தலைவர். போட்டியிட்ட இடங்கள்
1. ஜனநாயக ஜனதா கட்சி துஷ்யந்த் சவுதாலா 87

     இதேலோத-சிஅத கூட்டணி

[தொகு]
எண் கட்சி கொடி சின்னம் புகைப்படம் தலைவர் போட்டியிட்ட இடங்கள்
1. இந்திய தேசிய லோக் தளம் அபய் சிங் சவுதாலா 81
2. சிரோமணி அகாலி தளம் 3

கணக்கெடுப்பும் வாக்கெடுப்பும்

[தொகு]

வாக்கு சதவீதம் (%)

[தொகு]
வெளியீட்டு தேதி வாக்குப்பதிவு நிறுவனம்
தே.ஜ.கூ. ஜெ.மு.கூ. மற்றவை
26 செப்டம்பர் 2019 ஏபிபி செய்திகள்-சி ஓட்டர்[7] 46 22 32
18 அக்டோபர் 2019 இந்திய-ஆசிய செய்திச் சேவை[8] 47.5 21.4 30.7

முதலமைச்சருக்கான சிறந்த தேர்வு

[தொகு]
வெளியீட்டு நாள் வாக்குப்பதிவு நிறுவனம்
மனோகர் லால் கட்டார் பூபேந்தர் சிங் ஹூடா துஷ்யந்த் சவுதாலா அசோக் தன்வார் அபே செளதாலா தீபேந்தர் ஹூடா ஓம்பிரகாஷ் சௌதாலா குல்தீப் பைசுனோய் நவீன் ஜெய்கிந்த் பிறர் கருத்துக்கூற விருப்பமில்லை
26 செப்டம்பர் 2019 ஏபிபி-நியூஸ்-சி-ஒட்டர் 48.1 % 12.6% 11.1% 4.3 1.7 1.3 1 0.7 0.4 12.8 5.9

தேர்தல் கணிப்புகள்

[தொகு]
வாக்கெடுப்பு வகை வெளியீட்டு தேதி வாக்குப்பதிவு நிறுவனம் பெரும்பான்மை
தே.ஜ.கூ. ஐ.மு.கூ மற்றவை
கருத்துக் கணிப்புகள் 26 செப்டம்பர் 2019 ஏபிபி நியூஸ்-சி. வி. ஓட்டர்[7] 78 08 04 33
26 செப்டம்பர் 2019 தேசபக்தி வாக்காளர் [9] 51 25 14 11
27 செப்டம்பர் 2019 நியூஸ்எக்ஸ்-போல்ஸ்ட்ராட் [10] 76 06 08 31
17 அக்டோபர் 2019 ரிபப்ளிக் தொலைக்காட்சி[11] 58-70 12-15 5-8 13-25
18 அக்டோபர் 2019 ஏபிபி-சி வாக்காளர்[12] 83 3 4 38
18 அக்டோபர் 2019 இந்திய-ஆசிய செய்திச் சேவை[13] 79-87 1-7  – 34-42
கருத்துக் கணிப்புகள் இந்தியா டுடே-அச்சு[14] 32-44 30-42 6-10 HUNG
டிவி9-பாரத்வர்ஷ்[15] 47 23 20 2
நியூஸ் 18-ஐபிஎஸ்ஓஎஸ்[15] 75 10 5 30
தேசபக்தி வாக்காளர் [9] 46 26 18 1
ரிபப்ளிக் தொலைக்காட்சி[15] 52-63 15-19 12-18 7-18
ஏபிபி நியூஸ்-சி வாக்காளர்[15] 72 8 10 27
நியூஸ்எக்ஸ்-போல்ஸ்ட்ராட்[15] 75-80 9-12 1-4 30-35
டைம்ஸ் நவ்[15] 77 11 8 32

விரிவான முடிவுகள்

[தொகு]


வாக்கு பங்கீடு

  பாஜக (36.49%)
  இதேகா (28.08%)
  ஜஜக (14.84%)
  பசக (4.21%)
  இதேலோத (2.44%)
  சுயேச்சை (9.17%)
  பிறர் (4.77%)
கட்சிகள் மற்றும் கூட்டணிகள் மக்கள் வாக்கு இருக்கைகள்.
வாக்குகள் % ± ppபிபி வெற்றி பெற்றனர். +/-
பாரதிய ஜனதா கட்சி 45,69,016 36.49% 3.39Increase 40 7
இந்திய தேசிய காங்கிரசு 35,15,498 28.08% 7.55Increase 31 16Increase
ஜனநாயக ஜனதா கட்சி 18,58,033 14.80% புதியது. 10 10Increase
இந்திய தேசிய லோக் தளம் 3,05,486 2.44% 21.67 1 18
அரியானா லோகித் கட்சி 81,641 0.66% 0.56 1 1Increase
பகுஜன் சமாஜ் கட்சி 5,18,812 4.21% 0.16 0 1
சிரோமணி அகாலி தளம் 47,336 0.38% 0.24 0 1
சுயேச்சைகள் 11,29,942 9.17% 6.34Increase 7 2Increase
நோட்டா 65,270 0.53%
மொத்த 1,25,20,177 100.00 90 ±0
செல்லுபடியாகும் வாக்குகள் 1,25,20,177 99.85
செல்லாத வாக்குகள் 19,076 0.15
வாக்குப்பதிவு 1,25,39,253 68.20
விலகல்கள் 58,47,429 31.80
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 1,83,86,682

மக்களாட்சி தரநிலைகள்

[தொகு]

அரசியல் கட்சிகளின் செயல்பாடு

[தொகு]

அரியானாவின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் 75 இடங்களை பாஜக வெல்லும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக "75 +" என்ற முழக்கத்தைக் கையிலெடுத்தது. ஆனால், பாஜக தனது இலக்கை அடைய முடியவில்லை, சட்டப்பேரவையின் பெரும்பான்மையைக் கூட இழந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி கூடுதலான இடங்களைப் பெற்றது. செல்ஜா குமாரி மற்றும் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோரின் தலைமையில் காங்கிரசு தேர்தலில் போட்டியிட்டது. காங்கிரசு கட்சியால் 46 இடங்களைப் பெரும்பான்மையாகப் பெற முடியவில்லை என்றாலும், முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில் 15 இடங்களை கூடுதலாகப் பெற்று 30 இடங்களில் வென்றது.

பணக்காரர்களின் அரசியல் நுழைவதற்குத் தடை

[தொகு]

போட்டியிட்ட வேட்பாளர்களில் 83.3% பேர் (90 இல் 75) குறைந்தபட்சம் 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டின் சராசரி சொத்து மதிப்புடன் (ரூபாய் 12.97 கோடி) ஒப்பிடும்போது 2019ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு அதிகமாக இருந்தது (ரூபாய் 18.29 கோடி).[16]

குற்றப்பின்னணி

[தொகு]

ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ. டி. ஆர்) ஜனநாயகத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான வாக்கெடுப்பு பகுப்பாய்வு செய்யும் ஒரு சிந்தனைக் குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட 90 எம்எல்ஏக்களில் 12 பேர் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியினரும் (4 பேர்), இதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த 2 பேரும், ஜஜக-யினை சேர்ந்த ஒருவரும், மீதமுள்ளவர்கள் சுயேச்சையாக வெற்றிபெற்றவர்கள் ஆவர்.[16]

குடும்ப அரசியல்

[தொகு]

இத்தேர்தலில் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் பலர் களத்தில் இருந்தனர், பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட பல வம்சாவளிகள் இத்தேர்தலில் வெற்றி பெற்றனர்.[17]

ரன்பீர் சிங் ஹூடா [[பூபேந்தர் சிங் ஹூடா|], பன்ஸி லால் குலத்தைச் சேர்ந்த கிரண் சவுத்ரி, பஜன் லால் குலத்தைச் சேர்ந்தவர் குல்தீப் பிஷ்னோய், அஜய் சிங் யாதவ் குலத்தைச் சேர்ந்த சிரஞ்சீவ் ராவ், பூல் சந்த் முல்லனா மற்றும் ராவ் டான் சிங் ராவ் நர்வீர் சிங்குடன்[18][19] தொடர்புடையவர்.[17] ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த குர்சித் அகமதுவின் மகன் அப்தாப் அகமது,[20][21] அமித் சிஹாக் சவுதாலா மற்றொரு வம்சாவளி ஆவார். இவர் தப்வாலியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்ப்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சவுதாலா தேவிலாலின் பேரன் ஆவார்.[22]

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்ற வம்சாவளியினராக பஜன் லால் குடும்பத்தினைச் சேர்ந்த துராராம் உள்ளார்.[23]

தேவி லாலின் சவுதாலா குலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையிலான அளவில் வெற்றி பெற்ற வம்சாவளியினர் ஆவார். இவர்கள் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். மொத்தமாக போட்டியிட்ட 6 பேர்களில் 5 பேர் வெற்றி பெற்றனர். இதில் துஷ்யந்த் சவுதாலா மற்றும் அவரது தாயார் நைனா சிங் செளதாலா ஆகியோர் ஜஜக சார்பிலும், அபய் சிங் சவுதலா ஐ. என். எல். டி, மற்றும் காங்கிரசு எதிர்ப்பு சார்பில் ரஞ்சித் சிங் சவுத்லா சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே போல் தப்வாலியிலிருந்து அமித் சிஹாக் சவுதாலா இந்திய தேசிய காங்கிரசு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பஜன் லால் குலத்தைச் சேர்ந்த குல்தீப் பிஷ்னோய் மற்றும் துர ராம் ஆகிய 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.[17][23] எச்எல்பி கட்சியின் ஒரே சட்டமன்ற உறுப்பினர் கோபால் காண்டாவும் அரசியல் பின்னணி உள்ளக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கடந்த பொதுத் தேர்தலில் ஜன் சங்க வேட்பாளராகப் போட்டியிட்டார்.

பெண் அதிகாரம் இல்லாமை

[தொகு]

இத்தேர்தல் மூலம் 9 (மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 10%) பெண் வேட்பாளர்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரசிலிருந்து 4, பாஜகவிலிருந்து 3, ஜஜகவிலிருந்து 1 மற்றும் 1 சுயேச்சை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விண்ணப்பதாரர்களின் கல்வி மற்றும் புதுமைத் தரங்களின் பற்றாக்குறை

[தொகு]

ஏடிஆர் அறிக்கையின்படி, வெற்றிபெற்றவர்களில் 69% (90 இல் 62%) பேர் மட்டுமே குறைந்தபட்சம் இளநிலை பட்டம் பெற்றுள்ளனர். 31% அடிப்படை கல்வியறிவு கூட பெறவில்லை,

மாவட்ட வாரியாக முடிவுகள்

[தொகு]
மாவட்டம் இடங்கள். பாஜக இதேகா ஜஜக பிறர்
அம்பாலா பிரிவு
பஞ்ச்குலா 2 1 1 0 0
அம்பாலா 4 2 2 0 0
யமுனாநகர் 4 2 2 0 0
குருச்சேத்திர 4 2 1 1 0
கர்னல் பிரிவு
கைத்தல் 4 2 0 1 1
கர்னால் 5 3 1 0 1
பானிபத் 4 2 2 0 0
ரோத்தக் பிரிவு
சோனிபத் 6 2 4 0 0
பிவானி 4 3 1 0 0
சர்க்கி தாத்திரி 2 0 0 1 1
ரோத்தக் 4 0 3 0 1
ஜாஜ்ஜர் 4 0 4 0 0
ஹிசார் பிரிவு
ஜிந்து 5 1 1 3 0
பத்தேஹாபாத் 3 2 0 1 0
சிர்சா 5 0 2 0 3
ஹிசார் 7 3 1 3 0
குர்கான் பிரிவு
மகேந்திரகர் 4 3 1 0 0
ரேவாரி 3 2 1 0 0
குர்கான் 4 3 0 0 1
பரிதாபாத் பிரிவு
நூக் 3 0 3 0 0
பல்வல் 3 3 0 0 0
பரீதாபாத் 6 4 1 0 1
மொத்தம் 90 40 31 10 9

தொகுதி வாரியாக முடிவுகள்

[தொகு]
தேர்தல் முடிவுகள்
சட்டமன்றத் தொகுதி வெற்றி பெற்றவர் இரண்டாமிடம் வித்தியாசம்
வ. எண். பெயர் பெயர் கட்சி வாக்குகள் பெயர் கட்சி வாக்குகள்
பஞ்சகுலா மாவட்டம்
1 கால்கா பர்தீப் சவுத்ரி இதேகா 57948 இலத்திகா சர்மா பாஜக 52017 5931
2 பஞ்சகுலா கியான் சந்த் குப்தா பாஜக 61537 சந்தர் மோகன் இதேகா 55904 5633
அம்பாலா மாவட்டம்
3 நாராயண்கட் சாலி இதேகா 53470 சுரேந்தர் சிங் பாஜக 32870 20600
4 அம்பாலா பாளையம் அனில் விஜ் பாஜக 64571 சித்ரா சர்வாரா சுயேச்சை 44406 20165
5 அம்பாலா நகரம் அசீம் கோயல் பாஜக 64896 நிர்மல் சிங் சுயேச்சை 55944 8952
6 முலானா (பஇ) வருண் சவுத்தரி இதேகா 67051 ராஜ்பீர் சிங் பாஜக 65363 1688
யமுனாநகர் மாவட்டம்
7 சடௌரா (பஇ) ரேணு பாலா இதேகா 65806 பல்வந்த் சிங் பாஜக 48786 17020
8 ஜகாதரி கன்வர் பால் குஜ்ஜர் பாஜக 66376 அக்ரம் கான் இதேகா 50003 16373
9 யமுனாநகர் கன்சியாம் தாசு பாஜக 64848 தில்பாக் சிங் இதேலோத 63393 1455
10 ராதௌர் பிசன் லால் இதேகா 54087 கரண் தேவ் பாஜக 51546 2541
குருச்சேத்திர மாவட்டம்
11 லாடுவா மேவா சிங் இதேகா 57665 பவன் சைனி பாஜக 45028 12637
12 ஷாஹாபாத் (பஇ) இராம் கரன் ஜஜக 69233 கிருஷன் குமார் பாஜக 32106 37127
13 தானேசர் சுபாசு சுதா பாஜக 55759 அசோக் குமார் அரோரா இதேகா 54917 842
14 பேஹோவா சந்தீப் சிங் பாஜக 42613 மந்தீப் சிங் சத்தா இதேகா 37299 5314
கைத்தல் மாவட்டம்
15 குஹ்லா (பஇ) ஈசுவர் சிங் ஜஜக 36518 சௌத்ரி திலு ராம் இதேகா 31944 4574
16 கலாயத் கமலேசு தண்டா பாஜக 53805 ஜெய் பர்காசு இதேகா 44831 8974
17 கைத்தல் லீலா ராம் பாஜக 72664 ரண்தீப் சுர்ஜேவாலா இதேகா 71418 1246
18 புண்டரி இரந்தீர் சிங் கோல்லன் சுயேச்சை 41008 சத்பீர் பானா இதேகா 28184 12824
கர்னால் மாவட்டம்
19 நீலோகேடி (பஇ) தரம் பால் கோண்டர் சுயேச்சை 42979 பகவான் தாசு பாஜக 40757 2222
20 இந்திரி இராம் குமார் காஷ்யப் பாஜக 54221 ராகேஷ் கம்போஜ் சுயேச்சை 46790 7431
21 கர்னால் மனோகர் லால் கட்டார் பாஜக 79906 தர்லோசன் சிங் இதேகா 34718 45188
22 கரௌண்டா அர்விந்தர் கல்யாண் பாஜக 67209 அனில் குமார் இதேகா 49807 17402
23 அசந்த் சம்சேர் சிங் கோகி இதேகா 32114 நரேந்திர சிங் பஜக 30411 1703
பானிபத் மாவட்டம்
24 பானிபத் ஊரகம் மஹிபால் தாண்டா பாஜக 67086 தேவேந்திர காடியன் ஜஜக 45125 21961
25 பானிபத் நகரம் பர்மோத் குமார் விஜ் பாஜக 76863 சஞ்சய் அகர்வால் இதேகா 37318 39545
26 இஸ்ரானா (பஇ) பல்பீர் சிங் இதேகா 61376 கிரிசன் இலால் பன்வார் பாஜக 41361 20015
27 சமால்கா தரம் சிங் சோக்கர் இதேகா 81898 சசி காந்த் கௌசிக் பாஜக 66956 14942
சோனிபத் மாவட்டம்
28 கனௌர் நிர்மல் இராணி பாஜக 57830 குல்தீப் சர்மா இதேகா 47550 10280
29 ராய் மோகன் லால் படோலி பாஜக 45377 ஜெய் தீரத் தாகியா இதேகா 42715 2662
30 கர்க்கௌதா (பஇ) ஜெய்வீர் சிங் இதேகா 38577 பவன் குமார் ஜஜக 37033 1544
31 சோனிபத் சுரேந்தர் பன்வார் இதேகா 79438 கவிதா ஜெயின் பாஜக 46560 32878
32 கோஹானா சகுபீர் சிங்கு மாலிக்கு இதேகா 39531 ராஜ் குமார் சைனி LSP 35379 4152
33 படௌதா சிறீ கிருஷ்ணன் ஹூடா இதேகா 42566 யோகேசுவர் தத் பாஜக 37726 4840
ஜிந்து மாவட்டம்
34 ஜுலானா அமர்ஜித் தண்டா ஜஜக 61942 பர்மிந்தர் சிங் துல் பாஜக 37749 24193
35 சபீதோம் சுபாசு கங்கோலி இதேகா 57253 பச்சன் சிங் ஆர்யா பாஜக 53560 3658
36 ஜீந்து கிரிஷன் லால் மித்தா பாஜக 58370 மகாபீர் குப்தா ஜஜக 45862 12508
37 உச்சானா கலாம் துஷ்யந்த் சவுதாலா ஜஜக 92504 பிரேம்லதா சிங் பாஜக 45052 47452
38 நர்வானா (பஇ) இராம் நிவாசு ஜஜக 79578 சந்தோசு ராணி பாஜக 48886 30692
பத்தேஹாபாத் மாவட்டம்
39 டோஹானா தேவேந்திர சிங் பாப்லி ஜஜக 100752 சுபாஷ் பராலா பாஜக 48450 52302
40 பதேகாபாத் துரா ராம் பாஜக 77369 வீரேந்தர் சிவாட்ச் ஜஜக 74069 3300
41 ரத்தியா (பஇ) லக்ஷ்மன் நாபா பாஜக 55160 ஜர்னைல் சிங் இதேகா 53944 1216
சிர்சா மாவட்டம்
42 காலான்வாலி (பஇ) சிவ்பால் சிங் இதேகா 53059 ராஜீந்தர் சிங் தேசுஜோதா சிஅத 33816 19243
43 டப்வாலி அமித் சிஹாக் இதேகா 66885 ஆதித்யா தேவி லால் பாஜக 51238 15647
44 ரானியாம் இரஞ்சித் சிங் சுயேச்சை 53825 கோபிந்த் காந்தா எச்.எல்.பி. 34394 19431
45 சிர்சா கோபால் காந்தா எச்.எல்.பி. 44915 கோகுல் சேத்தியா சுயேச்சை 44313 602
46 எலனாபாத் அபய் சிங் சவுதாலா இதேலோத 56976 பவன் பெனிவால் பாஜக 45133 11922
ஹிசார் மாவட்டம்
47 ஆதம்பூர் குல்தீப் பிஷ்னோய் இதேகா 63693 சோனாலி போகட் பாஜக 34222 29471
48 உக்லானா (பஇ) அனூப் தானக் ஜஜக 65369 ஆசா கேதர் பாஜக 41676 23693
49 நார்னௌந்த் இராம் குமார் கௌதம் ஜஜக 73435 கேப்டன் அபிமன்யு பாஜக 61406 12029
50 ஹான்சி வினோத் பாயானா பாஜக 53191 இராகுல் மாக்கார் ஜஜக 30931 22260
51 பர்வாலா ஜோகி ராம் சிஹாக் ஜஜக 45868 சுரேந்தர் புனியா பாஜக 41960 3908
52 ஹிசார் கமல் குப்தா பாஜக 49675 இராம் நிவாசு ராரா இதேகா 33843 15832
53 நல்வா இரன்பீர் சிங் கங்வா பாஜக 47523 இரந்தீர் பனிகர் இதேகா 37851 9672
பிவானி மாவட்டம்
54 லோஹாரூ ஜெய் பிரகாசு தலால் பாஜக 61365 சோம்வீர் சிங் இதேகா 43688 17677
சர்க்கி தாத்திரி மாவட்டம்
55 பாட்டா நைனா சிங் செளதாலா ஜஜக 52938 இரன்பீர் சிங் மகேந்திரா இதேகா 39234 13704
56 தாத்ரி சோம்வீர் சங்வான் சுயேச்சை 43849 சத்பால் சங்வான் ஜஜக 29577 14272
பிவானி மாவட்டம்
57 பிவானி கன்சியாம் சரப் பாஜக 61704 சிவசங்கர் பரத்வாஜ் ஜஜக 33820 27884
58 தோசாம் கிரண் சௌத்ரி இதேகா 72699 சசி ரஞ்சன் பர்மர் பாஜக 54640 18059
59 பவானி கேடா (பஇ) பிசம்பர் சிங் பாஜக 52387 இராம்கிசன் பௌஜி இதேகா 41492 10895
ரோத்தக் மாவட்டம்
60 மேகம் பால்ராசு குண்டு சுயேச்சை 49418 ஆனந்த் சிங் டாங்கே இதேகா 37371 12047
61 கடி சாம்ப்லா கிலோய் பூபேந்தர் சிங் ஹூடா இதேகா 97755 சதீசு நந்தல் பாஜக 39443 58312
62 ரோத்தக் பாரத் பூசன் பத்ரா இதேகா 50437 மணீசு குரோவர் பாஜக 47702 2735
63 கலானௌர் (பஇ) சகுந்தலா கதக் இதேகா 62151 இராமாவதார் பால்மிகி பாஜக 51527 10624
ஜாஜ்ஜர் மாவட்டம்
64 பகதூர்கட் ராஜிந்தர் சிங்சூன் இதேகா 55825 நரேசு கெளசிக்கு பாஜக 40334 15491
65 பட்லி குல்தீப் வாட்சு இதேகா 45441 ஓம் பிரகாசு தங்கர் பாஜக 34196 11245
66 ஜாஜ்ஜர் (பஇ) கீதா புக்கல் இதேகா 46480 இராகேசு குமார் பாஜக 31481 14999
67 பேரி இரகுவீர் சிங் காடியன் இதேகா 46022 விக்ரம் காடியன் பாஜக 33070 12952
மகேந்திரகர் மாவட்டம்
68 அட்டேலி சீதாராம் யாதவ் பாஜக 55793 அதர் லால் பஜக 37387 18406
69 மகேந்திரகட் இராவ் தன் சிங் இதேகா 46478 இராம் பிலாசு சர்மா பாஜக 36258 10220
70 நார்னௌல் ஓம் பிரகாசு யாதவ் பாஜக 42732 கமலேசு சைனி ஜஜக 28017 14715
71 நாங்கல் சவுத்ரி அபய் சிங் யாதவ் பாஜக 55529 முல்லா ராம் ஜஜக 34914 20615
ரேவாரி மாவட்டம்
72 பாவல் (பஇ) பன்வாரி லால் பாஜக 69049 எம். எல். ரங்கா இதேகா 36804 32245
73 கோசலி இலட்சுமன் சிங் யாதவ் பாஜக 78813 யதுவேந்தர் சிங் இதேகா 40189 38624
74 ரேவாரி சிரஞ்சீவ் ராவ் இதேகா 43870 சுனில் குமார் பாஜக 42553 1317
குர்கான் மாவட்டம்
75 பட்டௌதி (பஇ) சத்ய பிரகாசு ஜராவதா பாஜக 60333 நரேந்தர் சிங் பகாரி சுயேச்சை 24027 36306
76 பாதுஷாபூர் இராகேசு தௌல்தாபாத் சுயேச்சை 106827 மணீசு யாதவ் பாஜக 96641 10186
77 குர்காவுன் சுதிர் சிங்லா பாஜக 81953 மோகித் குரோவர் சுயேச்சை 48638 33315
78 சோகனா சஞ்சய் சிங் பாஜக 61376 ரோகிதாசு சிங் ஜஜக 46664 12453
நூக் மாவட்டம்
79 நுஹ் அப்தாப் அகமது இதேகா 52311 ஜாகீர் உசேன் பாஜக 48273 4038
80 பிரோசாபூர் ஜிர்கா மம்மன் கான் இதேகா 84546 நசீம் அகமது பாஜக 47542 37004
81 புனஹானா முகமது இலியாசு இதேகா 35092 இரகீசு கான் சுயேச்சை 34276 816
பல்வல் மாவட்டம்
82 ஹத்தீன் பிரவீன் தாகர் பாஜக 46744 முகமது இசுரேல் இதேகா 43857 2887
83 ஹோடல் (பஇ) ஜெகதீசு நாயர் பாஜக 55864 உதய் பான் இதேகா 52477 3387
84 பல்வல் தீபக் மங்லா பாஜக 89426 கரண் சிங் இதேகா 61130 28296
பரீதாபாத் மாவட்டம்
85 பிருத்லா நயன் பால் ராவத் சுயேச்சை 64625 இரகுபீர் தெவாடியா இதேகா 48196 16429
86 பரிதாபாத் என்.ஐ.டி நீரஜ் சர்மா இதேகா 61697 நாகேந்தர் பதானா பாஜக 58455 3242
87 பட்கல் சீமா திரிகா பாஜக 58550 விஜய் பிரதாப் சிங் இதேகா 56005 2545
88 பல்லப்கட் மூல் சந்த் சர்மா பாஜக 66708 ஆனந்த் கௌசிக் இதேகா 24995 41713
89 பரீதாபாத் நரேந்தர் குப்தா பாஜக 65887 லகன் குமார் சிங்லா இதேகா 44174 21713
90 திகாவுன் இராஜேசு நாகர் பாஜக 97126 இலலித் நாகர் இதேகா 63285 33841

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Haryana Assembly polls to be held on time: Manohar Lal Khattar". The Economic Times. 12 January 2018. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/haryana-assembly-polls-to-be-held-on-time-manohar-lal-khattar/articleshow/62478886.cms. 
  2. "Election Dates 2019 updates: Haryana, Maharashtra voting on October 21, results on October 24" (in en). Business Today. 21 September 2019. https://www.businesstoday.in/latest/economy-politics/story/assembly-election-2019-dates-live-updates-maharashtra-haryana-polls-schedule-results-election-commission-231226-2019-09-21. 
  3. 3.0 3.1 "Assembly Elections 2019: Haryana records voter turnout of 68.47%, Maharashtra at 61.29%" (in en). 21 October 2019. https://eci.gov.in/PollTurnOut/voterturnout-AC.htm. 
  4. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT OCT-2019". Election Commission of India. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 24 October 2019.
  5. "BJP forms government in Haryana". News Hook. 28 October 2019. https://newzhook.com/story/bjp-forms-government-in-haryana/. 
  6. "Haryana Election 2019 Voting Updates: 62.64% turnout recorded at close of polling; Narnaund sees highest figure at 73.57%" (in en). Firstpost. 21 October 2019. https://www.firstpost.com/politics/haryana-election-2019-voting-live-updates-latest-news-today-election-commission-of-india-bjp-congress-inld-bsp-assembly-vidhan-sabha-polls-chunav-exit-poll-7515691.html. 
  7. 7.0 7.1 "Maharashtra, Haryana Opinion Poll: दोनों राज्यों में बन सकती है BJP की सरकार, सत्ता बचाने में होगी कामयाब" (in hi). ABP News. 21 September 2019. https://www.abplive.com/india-news/bjp-could-get-mandate-in-haryana-and-maharashtra-both-states-1205799. 
  8. "Survey Predicts Landslide BJP Victory in Haryana, Big Win in Maharashtra". News18. 18 October 2019. பார்க்கப்பட்ட நாள் 18 October 2019.
  9. 9.0 9.1 "PvHARYANA19".
  10. "NewsX-Pollstart Opinion Poll: BJP likely to retain power in Haryana and Maharashtra". NewsX. 26 September 2019 இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191009112059/https://www.newsx.com/national/newsx-poll-start-opinion-poll-bjp-likely-to-retain-power-in-haryana-and-maharashtra.html. 
  11. "Jan Ki Baat Opinion poll 2019: BJP likely retain power in Haryana and Maharashtra; Khattar, Fadnavis look set for second term". 23 October 2019. https://www.financialexpress.com/india-news/haryana-assembly-election-maharashtra-assembly-election-2019-updates-republic-tv-opinion-poll-live-jan-ki-baat-bjp-congress/1738566/. 
  12. "Opinion poll predicts BJP win in Haryana, Maharashtra". Deccan Herald. 18 October 2019. https://www.deccanherald.com/assembly-election-2019/opinion-poll-predicts-bjp-win-in-haryana-maharashtra-769463.html. 
  13. "BJP to sweep Haryana, Maharashtra: Opinion poll". OnManorama. 20 October 2019. https://www.onmanorama.com/news/india/2019/10/20/bjp-victory-haryana-maharashtra-opinion-poll.html. 
  14. "Neck-and-neck fight in Haryana for BJP, Congress, shows India Today exit poll" (in en). India Today. 22 October 2019. https://www.indiatoday.in/elections/haryana-assembly-election/story/india-today-exit-poll-haryana-bjp-congress-jjp-1611953-2019-10-22. 
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 "Exit poll results: Pollsters predict big win for BJP in Maharashtra, Haryana". Mint. 21 October 2019. பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.
  16. 16.0 16.1 "Haryana MLAs: 93 per cent newly elected Haryana MLAs are crorepatis: ADR report". 25 October 2019. https://economictimes.indiatimes.com/news/elections/assembly-elections/haryana/93-per-cent-newly-elected-haryana-mlas-are-crorepatis-adr-report/articleshow/71755033.cms. 
  17. 17.0 17.1 17.2 Sura, Ajay (25 October 2019). "Haryana Election Result: Dynasts have a field day in Haryana's game of thrones" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/india/dynasts-have-a-field-day-in-haryanas-game-of-thrones/articleshow/71748783.cms. 
  18. Singh, Rashpal (1 May 2017). "Haryana minister goes paperless for daughter's wedding invitations" (in en). Hindustan Times. https://www.hindustantimes.com/gurgaon/haryana-minister-goes-paperless-for-daughter-s-wedding-invitations/story-s20DMPpasPLDj9F5c5hOEM.html. 
  19. "Constituency wise win list". Election Commission of India. p. 6. பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
  20. "Constituency wise win list". Election Commission of India. p. 7. பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
  21. Sharma, Supriya (19 October 2012). "Did Congress reward Robert Vadra's associates?" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/india/Did-Congress-reward-Robert-Vadras-associates/articleshow/16872647.cms. 
  22. Ghose, Debobrat (25 October 2019). "Haryana Assembly polls: Ex-Dy PM Chaudhary Devi Lal's legacy gets boost after five relatives from different political stripes win seats" (in en). Firstpost. https://www.firstpost.com/politics/haryana-assembly-polls-ex-dy-pm-chaudhary-devi-lals-legacy-gets-boost-after-five-relatives-from-different-political-stripes-win-seats-7555911.html. 
  23. 23.0 23.1 "Constituency wise win list". Election Commission of India. p. 3. பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]