பன்சிலால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்சிலால் லெகா
பாதுகாப்புத் துறை அமைச்சர்
பதவியில்
21 திசம்பர் 1975 – 24 மார்ச் 1977
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் இந்திரா காந்தி
பின்வந்தவர் ஜெகசீவன்ராம்
இரயில்வே துறை அமைச்சர்
பதவியில்
31 திசம்பர் 1984 – 4 சூன் 1986
பிரதமர் ராஜீவ் காந்தி
முன்னவர் ஏ. பி. ஏ. கனி கான் சௌத்ரி
பின்வந்தவர் மோஷினா கித்வாய்
3வது அரியானாவின் முதலமைச்சர்
பதவியில்
22 மே 1968 – 30 நவம்பர் 1975
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் பனாரசி தாஸ் குப்தா
பதவியில்
5 சூலை 1986 – 19 சூன் 1987
முன்னவர் பஜன்லால்
பின்வந்தவர் தேவிலால்
பதவியில்
11 மே 1996 – 23 சூலை 1999
முன்னவர் பஜன்லால்
பின்வந்தவர் ஓம்பிரகாஷ் சௌதாலா
பிவானி மக்களைத் தொகுதி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1980–1987
முன்னவர் சந்திராவதி
பின்வந்தவர் சௌத்ரி ராம் நாராயண் சிங்
பதவியில்
1989–1991
முன்னவர் சௌத்ரி ராம் நாராயண் சிங்
பின்வந்தவர் ஜங்பீர் சிங்
தனிநபர் தகவல்
பிறப்பு 26 ஆகஸ்ட் 1927
கோலாகர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு 28 March 2006 (2006-03-29) (அகவை 78)
புது தில்லி, இந்தியா

பன்சிலால் லெகா (Bansi Lal Legha) (26 ஆகஸ்ட் 1927 - 28 மார்ச் 2006) ஓர் இந்திய சுதந்திர ஆர்வலரும், மூத்த காங்கிரசுத் தலைவரும், அரியானாவின் முன்னாள் முதல்வரும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு மந்திரியும் ஆவார். இவர், நவீன அரியானாவின் கட்டிடக் கலைஞராக பலராலும் கருதப்பட்டார்.[1] பன்சி லால் அரியானாவின் புகழ்பெற்ற லால் என்ற பெயரைக்கொண்ட மூவரின் ஒரு பகுதியாக இருந்தார். அதில் அரியானாவின் முக்கிய அரசியல் குடும்பங்களை உருவாக்க்கிய தேவிலால் , பஜன்லால் ஆகியோர் அடங்குவர். [2]

சட்டமன்றம்[தொகு]

பன்சிலால் அரியானா மாநில சட்டமன்றத்திற்கு ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967இல் தோசாம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாக வெற்றி பெற்றார். அரியானாவின் முதல்வராக மூன்று முறை பணியாற்றினார் (1968-75, 1986-87, , 1996-99. 1975 -1977). அவசர காலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கும் அவரது மகன் சஞ்சய் காந்திக்கும் நெருங்கிய நம்பிக்கையாளராக இவர் கருதப்பட்டார்.[3]

பாராளுமன்றம்[தொகு]

இவர் திசம்பர் 1975 முதல் மார்ச் 1977 வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றினார். மேலும் 1975 இல் மத்திய அரசில் துறை இல்லாத அமைச்சராக சிலகாலம் பணியாற்றினார். இரயில்வே மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளையும் வகித்தார்.

இவர் 1996 இல் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த பின்னர் அரியானா விகாஸ் கட்சியை அமைத்தார். 2004இல் காங்கிரசுக்கு மீண்டும் திரும்பிய இவர், 2005 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறு ஆட்சியமைக்க காங்கிரசுக்கு உதவினார். [4]

இறப்பு[தொகு]

பன்சிலால் புது தில்லியில் மார்ச் 28, 2006 அன்று தனது 79 வயதில் இறந்தார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bansi Lal dead".
  2. "Bansi Lal RIP".
  3. "Bansi Lal RIP".
  4. "Bansi Lal RIP".
  5. "Former Haryana CM Bansi Lal dead".
  • Bansi Lal: Chief Minister of Haryana By S. R. Bakshi, Sita Ram Sharma 1998 ISBN 9788170249856
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சிலால்&oldid=3188731" இருந்து மீள்விக்கப்பட்டது