அரியானா சட்டமன்றத் தேர்தல், 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அரியானா மாநிலத்திற்கான 12வது[சான்று தேவை] சட்டமன்றத்தை தேர்ந்தெடுக்க 2014, அக்டோபர் 15 அன்று தேர்தல் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2014, அக்டோபர் 19 அன்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. பாசகவின் மனோகர் லால் கட்டார் புதிய முதல்வராக பதவியேற்றார். [1]


11வது சட்டமன்றம்[தொகு]

2009ஆம் ஆண்டு நடைபெற்ற 11வது சட்டமன்றத்துக்கு[சான்று தேவை] நடைபெற்ற தேர்தலில் வென்ற பெருபான்மையான இடங்களை வென்ற காங்கிரசு ஆட்சியில் உள்ளது. முதலமைச்சமைராக காங்கிரசு கட்சியை சேர்ந்த பூபிந்தர் சிங் கூடா உள்ளார்,

இதன் பதவிக்காலம் 2014, அக்டோபர் 27 அன்று முடிவடைகிறது.

காங்கிரசு இந்திய தேசிய லோக்தளம் பாரதிய ஜனதா கட்சி அரியானா ஆங்கிட் காங்கிரசு பகுஜன் சமாஜஃ கட்சி அகாலி தளம் கட்சிசாரா வேட்பாளர்கள்
40 31 4 6 1 1 7

தேர்தல் ஆணைய அறிவிப்பு[தொகு]

தேர்தல் தொடர்பான நிகழ்வு தேதி
தேர்தல் அறிவிக்கப்பட்டது in gazzate 2014, செப்டம்பர் 20
போட்டியிடுவதற்கான மனு அளிப்பதற்கான இறுதி தேதி 2014, செப்டம்பர் 27
மனுக்கள் சரிபார்க்கப்படும் தேதி 2014, செப்டம்பர் 29
மனுவை விலக்கிக்கொள்ள இறுதி தேதி 2014, அக்டோபர் 01
தேர்தல் நடைபெறும் தேதி 2014, அக்டோபர் 15
வாக்குகள் எண்ணப்படும் தேதி 2014, அக்டோபர் 19

[2] அரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 17 தாழ்த்தப்பட்டோருக்கும் 0 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் அரியானாவில் நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 100% ஆகும். இத்தேர்தலுக்காக 16,244 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. [3]

சிர்சாவை மையமாக உடைய தேரா சாச்சா சௌடா தன் ஆதரவை பாசகவுக்கு அனைந்து தொகுதிகளிலும் (90) வழங்கியுள்ளது. முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சி தனித்து அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. முன்பு லோக்தளம் அல்லது அரியானா விகாஸ் கட்சிகளின் தோழமையுடன் போட்டியிட்டது. அரியானா விகாஸ் கட்சி காங்கிரசுடன் இணைந்துவிட்டது. அரியானா ஜாங்கிட் காங்கிரசுடனும் கூட்டணி வைத்திருந்தது. [4]


முன்னாள் முதல்வர் லோக்தளம் கட்சியின் தலைவர் ஓம் பிரகாசு சௌத்தாலா ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துவதில் ஊழல் செய்தார் என்று கடந்த ஆண்டு 10 ஆண்டு சிறைதண்டனை பெற்றார். தேர்தலுக்கு முன்பு உடல்நிலை காரணமாக பிணை பெற்று வந்த இவர், பிணை நிபந்தனையை மீறி சட்டமன்ற தேர்தலில் பரப்புரை செய்ததால் டெல்லி உயர் நீதிமன்றம் இவரின் பிணையை தள்ளுபடி செய்து வெள்ளிக்கிழமை ஆணையிட்டது. [5] சனிக்கிழமை சௌத்தாலா திகார் சிறை அதிகாரிகளிடம் தன்னை ஒப்படைத்தார். [6]


சிரோன்மணி அகாலிதளத்தின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் ஞாயிரன்று அரியானா மக்கள் சௌத்தாலா தலைமையில் ஒன்றுபட்டு உள்ளதாகவும் அவர்கள் லோக்தளம்- அகாலிதளம் கூட்டணிக்கு தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கச்செய்வார்கள் என்றும் கூறினார் [7][8]

தேர்தல் முடிவு[தொகு]

பாரதிய ஜனதா கட்சி காங்கிரசு லோக் தளம் அரியானா ஜாங்கிட் காங்கிரசு அகாலி தளம் பகுஜன் சமாஜ் கட்சி சாரா வேட்பாளர்கள்
47 15 20 2 1 1 4

மேற்கோள்கள்[தொகு]