உள்ளடக்கத்துக்குச் செல்

பிரவீன் தாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரவீன் தாகர்
சட்டமன்ற உறுப்பினர் அரியானா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 நவம்பர் 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1976
ஆதின், பல்வால், அரியானா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்ராம்ஜி லால் தாகர்
வீர்வதி
வாழிடம்(s)மண்ட்கோலா கிராமம், ஆதின், அரியானா, 121103
வேலைஅரசியல்வாதி

பிரவீன் தாகர் (Praveen Dagar) ஒரு இந்திய அரசியல்வாதியும் அரியானாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2019 அரியானா சட்டமன்றத் தேர்தலில் ஹாதினில் இருந்து ஹரியானா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

பிரவீன் தாகர் 1976 ஜனவரி 1 அன்று அரியானாவின் பல்வல் மாவட்டத்தின் ஆதின் வட்டத்தில் அமைந்துள்ள மண்ட்கோலாவில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.[5] இவரது தந்தை ஸ்ரீ ராம்ஜி லால் தாகர் ஒரு விவசாயியும் அரசியல்வாதியும் ஆவார். இவரது தந்தை ஒரு விவசாயத் தலைவராக அறியப்பட்டு 1972-ஆம் ஆண்டில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[6] விவசாயிகளின் உள்ளூர் பிரச்சினைகளை எழுப்புவதன் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பிரவீண், 2005 ஆம் ஆண்டில் தனது முதல் மாவட்ட ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றார்.

கல்வி[தொகு]

பிரவீன் தாகர் தனது தொடக்கக் கல்வியை மண்ட்கோலா கிராமத்தில் முடித்தார். பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, ரோத்தக் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு இவர் உள்ளூர் அரசியலில் பங்கேற்கத் தொடங்கியதோடு உள்ளூர் பிரச்சினைகளை எழுப்பத் தொடங்கினார்.[7]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2005 ஆம் ஆண்டில், இவர் ஒரு விவசாயத் தலைவராக அரசியலில் நுழைந்தார். உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளை எழுப்பினார். இவர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 2005 இல் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். இது அவரது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியது, அதன் பின்னர் இவர் அரசியலில் தீவிரமாக உள்ளார். 2019 ஆம் ஆண்டில் அவர் ஹாதின் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana – JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  2. "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  3. "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
  4. Myneta
  5. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 13 July 2021.
  6. "Haryana Vidhan Sabha MLA". elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
  7. "Praveen Dagar - हथीन विधानसभा चुनाव 2019 परिणाम". amarujala.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
  8. "पूर्व विधायक रामजीलाल के बेटे प्रवीण डागर को बीजेपी ने हथीन से दिया टिकट". etvbharat.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
  9. "हरियाणा विधानसभा चुनाव 2019 Results". india.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_தாகர்&oldid=3971800" இலிருந்து மீள்விக்கப்பட்டது