2024 அரியானா சட்டப் பேரவைத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||||||||||||
அரியானா சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 90 இருக்கைகளுக்கும் அதிகபட்சமாக 46 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
2024 அரியானா சட்டப் பேரவைத் தேர்தல் என்பது 1 அக்டோபர் 2024 அன்று அரியானா மாநிலத்தின் சட்டப்பேரவையின் 90 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் ஆகும்.[1]தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மைக்கு மேல் 48 தொகுதிகளில் வென்றுள்ளதால், மூன்றாவது முறையாக அரியானா மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
பின்னணி
[தொகு]அரியானா சட்டப் பேரவையின் பதவிக்காலம் 3 நவம்பர் 2024 அன்று முடிவடைய உள்ளது.[2] இதற்கு முந்தைய சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 2019-இல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி அமைத்து மாநில அரசை அமைத்து, மனோகர் லால் கட்டார் முதலமைச்சரானார்.[3]
அட்டவணை
[தொகு]தேர்தல் நிகழ்வு | அட்டவணை |
---|---|
அறிவிப்பு தேதி | 5 செப்டம்பர் 2024 |
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 12 செப்டம்பர் 2024 |
வேட்புமனு பரிசீலனை | 13 செப்டம்பர் 2024 |
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி | 16 செப்டம்பர் 2024 |
வாக்குப்பதிவு தேதி | 1 அக்டோபர் 2024 |
வாக்கு எண்ணிக்கை தேதி | 4 அக்டோபர் 2024 |
கட்சிகளும் கூட்டணிகளும்
[தொகு]கூட்டணி/கட்சி | கொடி | சின்னம் | தலைவர். | போட்டியிட்ட இருக்கைகள் | |||
---|---|---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | நயாப் சிங் சைனி | 90 | |||||
இந்திய தேசிய காங்கிரசு | பூபேந்தர் சிங் ஹூடா | 90 | |||||
ஜனநாயக ஜனதா கட்சி | துஷ்யந்த் சவுதாலா | 70 | |||||
ஆசாத் சமாஜ் கட்சி (கன்சிராம்) | படிமம்:Indian election symbol Kettle jpg.png | சந்திரசேகர் ஆசாத் இராவணன் | 20 | ||||
இந்திய தேசிய லோக் தளம் | அபய் சிங் சவுதாலா | 53 | |||||
பகுஜன் சமாஜ் கட்சி | ராஜ்பீர் சோர்கி [4] | 37 | |||||
ஆம் ஆத்மி கட்சி | சுஷில் குப்தா[5] | 90 | |||||
அரியானா லோகித் கட்சி | கோபால் காண்டா | மு.செ.வே. | |||||
சிரோமணி அகாலி தளம் | சரண்ஜித் சிங் சோதா | மு.செ.வே. |
தேர்தல் முடிவுகள்
[தொகு]மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளையும், இந்திய தேசிய காங்கிரசு 37 தொகுதிகளையும், இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளையும், சுயேட்சைகள் 3 தொகுதிகளையும் கைப்பற்றியது.[6]மாநிலத்தில் ஆட்சி அமைக்க 45 இடங்கள் தேவை. பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வென்றுள்ளதால் அரியானா மாநிலத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Correspondent, Special (2019-10-16). "Haryana Assembly election: Will throw out every intruder before 2024, says Amit Shah" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/elections/haryana-assembly/haryana-assembly-election-will-throw-out-every-intruder-before-2024-says-amit-shah/article29714410.ece.
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 30 August 2022.
- ↑ "Manohar Lal Khattar takes oath as Haryana CM for second term, Dushyant Chautala as his deputy". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-10-27. பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
- ↑ "Mayawati to stay put in Delhi, to meet leaders from various states". https://timesofindia.indiatimes.com/city/lucknow/mayawati-to-stay-put-in-delhi-to-meet-leaders-from-various-states/articleshow/101683880.cms.
- ↑ "Haryana seeking big change: Kejriwal as AAP decides to go solo for assembly election". Hindustan Times (in ஆங்கிலம்). 2024-01-28. பார்க்கப்பட்ட நாள் 2024-01-28.
- ↑ Haryana Assembly Election Reults