நயாப் சிங்
நயாப் சிங்கு சைனி Nayab Singh Saini | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | இராச் குமார் சைனி |
தொகுதி | குருசேத்ரா |
மாநில அமைச்சர் அரியானா அரசாங்கம் | |
பதவியில் 24 சூலை 2015 – 3 சூன் 2019 | |
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் | 22 சூலை 2016 - 3 சூன் 2019 |
சுரங்கம் மற்றும் புவியியல் அமைச்சர் | 24 சூலை 2015 - 3 சூன் 2019 |
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் | 24 சூலை 2015 - 22 சூலை 2016 |
அரியானா சட்டமன்றம் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | இராம்கிசன் குர்சார் |
பின்னவர் | செல்லி |
தொகுதி | நாராயண்கார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 25 சனவரி 1970 அம்பாலா மாவட்டம், அரியானா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | தெலு ராம் |
நயாப் சிங் சைனி (Nayab Singh Saini) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் மக்களவை உறுப்பினரான இவர் அரியானா மாநிலத்தின் குருசேத்ரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]நயாப் சிங் சைனி 1970 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதியன்று அம்பாலாவில் உள்ள மிசாபூர் மச்ரா என்ற சிறிய கிராமத்தில் ஒரு சைனி குடும்பத்தில் பிறந்தார். [1] [2][3] முசாபர்பூரில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்திலும், மீரட்டில் உள்ள சரண் சிங் பல்கலைக்கழகத்திலும் படித்து சட்டப்பாடத்தில் பட்டங்களைப் பெற்றார்.[4]
தொடக்கத்தில் நயாப் சிங்கு வலதுசாரி இந்து அமைப்பான இராசுட்ரிய சுயம் சேவாக்கு சங்கத்தில் சேர்ந்தார். இதன் மூலம் மனோகர் லால் கட்டாரை சந்தித்து ஈர்க்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு இவர் பாரதீய சனதா கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு அம்பாலா நகரத்தில் தலைவர் உட்பட பல உள்ளூர் கட்சி அலுவலகங்களை நடத்தினார். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்கு வங்கியாகவும், நீண்ட காலமாக கட்சிக்கு விசுவாசமாகவும் இருந்து வருகிறார்.[5]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நரைங்கர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எதிர்த்துப் போட்டியிட்ட ராம்கிசன் குர்சரால் தோற்கடிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 24,361 வாக்குகள் வித்தியாசத்தில் நயாப் சிங் சைனி வெற்றி பெற்றார். அரியானா அரசின் மாநில அமைச்சராக இருந்தார். இப்போது அவர் குருசேத்திரத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nayab Singh | National Portal of India". www.india.gov.in. Retrieved 2020-09-01.
- ↑ "Lok Sabha Elections 2019: BJP replaces rebel MP with Haryana minister Nayab Saini to retain Kurukshetra seat". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-04-22. Retrieved 2020-09-01.
- ↑ "Caste equations weigh heavy as BJP looks for its next Haryana chief". The Indian Express (in ஆங்கிலம்). 2020-02-22. Retrieved 2020-09-01.
- ↑ "MLA Details". 2019-07-01. Archived from the original on 1 July 2019. Retrieved 2020-09-01.
- ↑ "Caste balance intact, BJP names Dhankar as Haryana party chief". The Indian Express (in ஆங்கிலம்). 2020-07-20. Retrieved 2020-09-01.
- ↑ "Nayab Singh(Bharatiya Janata Party(BJP)):Constituency- KURUKSHETRA(HARYANA) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2020-09-01.