வினோத் பாயானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வினோத் பயானா (Vinod Bhayana) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் அரியானாவில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹான்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2019-இல் நடந்த தேர்தலில் 22,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இவரது முந்தைய பதவிக்காலத்தில், அரியானா அரசாங்கத்தில் சிறைகள், ஒழுங்கு மற்றும் சட்டம் மற்றும் மின்சாரத்துறையின் கீழ் தலைமை நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

பயானா தனது அரசியல் வாழ்க்கையை லோஹாரி ராகோவில் தொடங்கினார். அங்கு இவர் ஐந்து முறை கிராம ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை பாய் மகேஷ் சந்தர் பயானாவும் அங்கு கிராம ஊராட்சித் தலைவராக இருந்தார். வினோத் பயானா 2009-ஆம் ஆண்டில் [1] இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ஆம் ஆண்டில் இவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடும்பம்[தொகு]

1984-ஆம் ஆண்டில், பயானா சுனிதா பயனாவை மணந்தார். தம்பதியருக்கு அன்ஷுல் பயானா, சாஹில் பயானா மற்றும் சுப்ரியா நாக்பால் ஆகிய இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் ஹன்சியில் வசிக்கின்றனர். [2] [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_பாயானா&oldid=3646351" இலிருந்து மீள்விக்கப்பட்டது