உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ரா சர்வாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா சர்வாரா
பிறப்பு18 மார்ச்சு 1975 (1975-03-18) (அகவை 49)
அம்பாலா மாவட்டம், அரியானா, இந்தியா
பணிஅரசியல்வாதி, சமூக ஆர்வலர், வடிவமைப்பாளர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்நிர்மல் சிங்[1]
நயிப் கௌர்
வாழ்க்கைத்
துணை
திக்விஜய் சிங் (கோல்ப் வீரர்) (தி. 2005)
.[2]
பிள்ளைகள்2
உறவினர்கள்உதய்வீர் சிங் (சகோதரர்)
சேதக் சிங் (சகோதரர்)
நூர் சர்வாரா (சகோதரி)
சித்ராங்கதா சிங்
(மருமகள்)
வலைத்தளம்
www.chitrasarwara.com

சித்ரா சர்வாரா (Chitra Sarwara ; பிறப்பு 18 மார்ச் 1975) இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியாவார். இவர் அரியானா ஜனநாயக முன்னணியில் இணைந்து பணியாற்றினார். அகில இந்திய மகளிர் காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளராகவும், சமூக ஊடக பொறுப்பாளராகவும் இருந்தார். அரியானா பிரதேச மகளிர் காங்கிரசு குழுவின் மூத்த துணைத் தலைவராகவும், அதன் செய்தித் தொடர்பாளராகவும், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான ஒருங்கிணைப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது அரியானா ஜனநாயக முன்னணியில் பொதுச் செயலாளர் பதவியை வகித்து வருகிறார்.

இவர் அரியானாவின் அம்பாலா மாநகராட்சியின் கூட்டுரிமைக்குழு உறுப்பினராக 13 சூன் 2013 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவரது தாத்தா அசாரா சிங் சர்வாரா ஒரு ஆங்கில, உருது ஆசிரியர் ஆவார். இவரது பாட்டி சிந்தோ தேவி, ஒரு இல்லத்தரசி.

பெற்றோர்கள்

[தொகு]

கல்வி

[தொகு]

இவர் அம்பாலாவின் ஜீசஸ் அண்ட் மேரி ஆங்கிலப் பள்ளியிலும்[3] அம்பலாவின் பாரதிய பொதுப் பள்ளியிலும்[4] தனது ஆரம்பக் கல்வியை பயின்றார். பின்னர் 1994 இல் சோனிபட்டின் ராய், மோதிலால் நேரு விளையாட்டுப் பள்ளியில் சேர்ந்து [5] தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

இவர் ஒரு தேசிய கைப்பந்தாட்ட வீரர், ராய் அணியின் ஒரு பகுதியாக பல மாநில, தேசிய பட்டங்களை வென்றார். 1993இல் பீகாரின் பூர்னியாவில் நடந்த தேசிய பள்ளி கைப்பந்தாட்ட போட்டியில் அரியானாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இதில் அரியான அணி வென்றாது. பெங்களூரில் நடந்த இந்திய முகாமில் கலந்து கொண்டார். 1994இல் கைப்பந்து போட்டிகளில் இலங்கைக்கு எதிராக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இவர், அகமதாபாத்தின் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் சேர்ந்து,[6] 2000இல் தளவாடச் சாமான்கள் வடிவமைப்பில் நிபுணத்துவம் பெற்ற தொழில்துறை வடிவமைப்பாளராக பட்டம் பெற்றார்.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_சர்வாரா&oldid=4034878" இலிருந்து மீள்விக்கப்பட்டது