லீலா ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லீலா ராம்
Leela Ram
சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) அரியானா சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
அக்டோபர் 2019
முன்னையவர்இரண்தீப்ர்ச்சேவாலா
தொகுதிகைத்தல் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2000–2005
முன்னையவர்சரண் தாசு
பின்னவர்சம்சேர் சிங் சுர்ச்சேவாலா
தொகுதிகைத்தல் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 ஏப்ரல் 1961 (1961-04-20) (அகவை 62)
கைத்தல் மாவட்டம், அரியானா
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்பல்பீர் கவுர்
பிள்ளைகள்1
வாழிடம்(s)கைத்தல் மாவட்டம், அரியானா, இந்தியா
முன்னாள் கல்லூரிகுருச்சேத்திரப் பல்கலைக்கழகம் (முதுகலை, 1985)
தொழில்தொழிலதிபர், விவசாயி

லீலா ராம் (Leela Ram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலில் கைத்தல் தொகுதியில் போட்டியிட்டு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 ஆவது மற்றும் 10 ஆவது அரியானா சட்டமன்றங்களில் லீலா ராம் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

லீலா ராம் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி அரியானாவின் கைத்தல் மாவட்டத்தில் உள்ள குல்தரன் தாலுக்கா உச்சானா கிராமத்தில் இயந்து ராமுக்கு மகனாகப் பிறந்தார். [1] முதுகலை பட்டதாரியான இவர் 1985 ஆம் ஆண்டில் குருசேத்ரா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் [2] பல்பீர் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

லீலா ராம் 2000 முதல் 2005 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய லோக்தள கட்சி வேட்பாளராக கைத்தல் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அரியானா சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் [3] பின்னர் 2014 ஆம் ஆண்டில் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார் [2] [4]

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அரியானா சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் கைத்தல் தொகுதியில் பாரதிய சனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றார், இரண்டு முறை வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சியின்ரன்தீப் சிங் சுர்ச்சேவாலாவை 530 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "MLA Details". பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
  2. 2.0 2.1 "Leela Ram(Bharatiya Janata Party(BJP)):Constituency- KAITHAL(KAITHAL) – Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 1 November 2019.
  3. "Sitting and previous MLAs from Kaithal Assembly Constituency". http://www.elections.in/haryana/assembly-constituencies/kaithal.html. 
  4. 4.0 4.1 "Haryana assembly election result: Congress's Randeep Surjewala concedes defeat from Kaithal". https://www.indiatoday.in/elections/haryana-assembly-election/story/haryana-assembly-election-result-congress-s-randeep-surjewal-concedes-defeat-from-kaithal-1612466-2019-10-24. 
  5. "Kaithal Election Results 2019 Live Updates (कैथल): Leela Ram of BJP Wins". News18. 24 October 2019. https://www.news18.com/news/politics/kaithal-election-results-2019-live-updates-winner-loser-leading-trailing-2358769.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லீலா_ராம்&oldid=3860938" இலிருந்து மீள்விக்கப்பட்டது