உள்ளடக்கத்துக்குச் செல்

குருச்சேத்திரப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருச்சேத்திரப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைyogastha kuru karmāṇi
வகைகல்வி & ஆராய்ச்சி
உருவாக்கம்1956 (1956)
வேந்தர்அரியானா ஆளுநர்
துணை வேந்தர்எஸ் என் சச்தேவா[1]
அமைவிடம்,
29°57′28″N 76°48′57″E / 29.957691°N 76.815848°E / 29.957691; 76.815848
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
இணையதளம்www.kuk.ac.in

குருச்சேத்திரப் பல்கலைக்கழகம் (Kurukshetra University) என்பது 1956ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் நாள் நிறுவப்பட்ட பல்கலைக்கழகமாகும்.[2] இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் அரியான மாநிலத்தில் குருச்சேத்திரத்தில் அமைந்துள்ளது. குருச்சேத்திரா இந்தியத் தலைநகர் புது தில்லியிலிருந்து 160 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3] இது பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளது.[4]

வரலாறு

[தொகு]
குருசேத்திரா பல்கலைக்கழகத்தின் கலையரங்கம்

இப்பல்கலைக்கழகம் 1956-ல் இணைவு பெற்ற கல்லூரிகள் இல்லா பல்கலைக்கழகமாக இருந்தது. இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவரான பாரத ரத்னா இராசேந்திர பிரசாத் பல்கலைக்கழகத்தினைத் தொடங்கிவைத்தபோது சமசுகிருத துறை மட்டுமே செயல்பட்டது.[5] சமசுகிருத அறிஞரான சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங், பஞ்சாப் மாநிலத்தின் குடியரசுத் தலைவராக இருந்தபோது இப்பல்கலைக்கழகத்தை நிறுவும் யோசனை உருவானது.

2012-ல், தத்துவவியல் துறை பகவத் கீதை பற்றிய பாடத்தை அறிமுகப்படுத்தியது.[6]

வளாகம்

[தொகு]

இப்பல்கலைக்கழகத்தின் வளாக 473 ஏக்கர்கள் (1.91 km2) [5] பரப்பில் இந்துக்களின் புனித நகரமான குருசேத்திரத்தில் பிரம்மசரோவர் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.[7]

கல்வி

[தொகு]

தரப்படுத்துதல்

[தொகு]

1வது மற்றும் 2வது பருவத்தில் பெற்ற மதிப்பெண்களின் 20% பங்களிப்புடன், 8வது வரையிலான ஒவ்வொரு பருவமும் 10% பங்களிப்பைக் கொண்டு, தரங்களைக் கணக்கிடுவதற்கான முறையினை பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது.[8]

தரவரிசைகள்

[தொகு]

2020-ல் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் இப்பல்கலைக்கழகம் 99வது இடத்தைப் பிடித்தது. கல்வி உலக தரவரிசை 2020ன் படி இது 68வது இடத்தில் உள்ளது [8]

நிறுவனம்

[தொகு]

சிறப்பு மையம்

[தொகு]

கல்லூரிகள் மற்றும் பள்ளிகள்

[தொகு]

பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்[10]

  • பல்கலைக்கழக மேல்நிலை மாதிரி பள்ளி
  • ஒருங்கிணைந்த மதிப்பு கல்வி நிறுவனம் (முன்னர் பல்கலைக்கழக கல்லூரி)
  • பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி
  • சுற்றுச்சூழல் ஆய்வுகள் நிறுவனம்
  • சட்டத்துறை
  • புவி இயற்பியல் துறை
  • பல்கலைக்கழக மேலாண்மை பள்ளி
  • பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
  • மேலாண்மை ஆய்வுகள் நிறுவனம்
  • மக்கள் தொடர்பு ஊடக தொழில்நுட்பம்

இணைவுபெற்ற கல்லூரிகள்

[தொகு]

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 457 இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.[2] இவற்றில் குறிப்பிடத்தக்க சில:

  • இ-மேக்ஸ் பொறியியல் பயன்பாட்டு ஆய்வு பள்ளி
  • அரசு பொறியியல் கல்லூரி, நிலோகேரி
  • ஜிந்த் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்
  • கர்னல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம், கர்னல்
  • ஸ்ரீ கிரிஷன் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம்
  • ஜேஎம்ஐடி

சாதனைகள்

[தொகு]

கல்வி

[தொகு]

2011 ஆம் ஆண்டில் மின்னணு அறிவியல் துறைக்கு, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம் நானோ அறிவியல் குறித்த ஆய்விற்கு 2.96 கோடி (US$3,70,000) ஒதுக்கப்பட்டது.[11]

விளையாட்டு

[தொகு]

குருசேத்ரா பல்கலைக்கழகம், விளையாட்டில் பல சாதனைகள் படைத்துள்ளது. 2015ஆம் ஆண்டில் குருசேத்ரா பல்கலைக்கழகத்தின் குத்துச்சண்டை அணி அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா முழுவதுலுமிருந்து 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக வீரர்கள் கலந்துகொண்ட போட்டியில் வென்றது.[12] அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் ஜலந்தர் குத்துச்சண்டை பயிற்சியாளர் ராஜேஷ் குமார் ராஜவுண்டின் கீழ் குருசேத்ரா பல்கலைக்கழக வீரர்கள் 3 தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.[13] பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் சுழற்கேடயம் வழங்கப்பட்டது. 966-1967ஆம் ஆண்டில் இந்திய அரசால் சர்வதேச மற்றும் தேசிய அரங்கில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களின் செயல்திறனுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statutory Officers". www.kuk.ac.in. Kurukshetra University. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகஸ்ட் 2017. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. 2.0 2.1 "About us". Kurukshetra University. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  3. "Kurukshetra University declares results". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 Apr 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  4. Kurukshetra University Info பரணிடப்பட்டது 1 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம் Association of Commonwealth Universities.
  5. 5.0 5.1 "A rating PU tops region in NAAC grading". The Times of India. 4 Feb 2009. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  6. Kurukshetra University introduces course on Gita, Hindustan Times, 29 Aug 2012.
  7. About KUK, KUK, accessed 22 Aug 2021.
  8. 8.0 8.1 NIRF ranking, KUK, accessed 22 aug 2021.
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 p KU Gets 100 crore for CoE, The Tribune, 2018.
  10. "Kurukshetra University :: Kurukshetra". www.kuk.ac.in. பார்க்கப்பட்ட நாள் 17 October 2017.
  11. "Kurukshetra University bags project to boost Nanoscience". The Times of India. 15 Feb 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-08-08.
  12. "Punjab News Live, Headlines, Channel Live, Online, Live - Sikh News AIU's All India Inter University Women Boxing Championship 2014-15 concluded - City Air News". cityairnews.com. Archived from the original on 2021-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
  13. "Kurukshetra women win Varsities Boxing Trophy". punjabnewsexpress.com. Archived from the original on 13 April 2015. பார்க்கப்பட்ட நாள் 13 April 2015.
  14. "List of winners of Maulana Abul Kalam Azad Trophy (1956-2018)" (PDF). Ministry of Youth Affairs and Sports (India). பார்க்கப்பட்ட நாள் 8 October 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]