கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59வது மேளகர்த்தா இராகமும், "திசி" என்று அழைக்கப்படும் 10வது சக்கரத்தின் 5வது இராகமுமாகிய தர்மவதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம் [தொகு]
ரஞ்சனி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ரஞ்சனி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரன காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
- இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது ஔடவ-ஔடவ இராகம் எனப்படுகின்றது.
உருப்படிகள் [தொகு]
- கிருதி - துர்மார்கசராதமுலனு - ரூபகம் - தியாகராஜர்
- கிருதி - ரஞ்சனி நிரஞ்சனி - ஆதி - ஜி. என். பாலசுப்பிரமனியம்
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
- டி. எஸ். பார்த்தஸாரதி, "ஸ்ரீ தியாகராஜஸ்வாமி கீர்த்தனைகள்", The Karnatic music book centre, Madras, ஏழாம் பதிப்பு - 1996