கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியாமலி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 16வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இதர அம்சங்கள் [தொகு]
சியாமலி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
சியாமலி அவரோகண சுரங்கள், C யிலிருந்து தொடக்கம்
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு உபாங்க இராகம்.
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
உசாத்துணைகள் [தொகு]
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996