கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாலவராளி இராகம் கருநாடக இசையின் 39வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 39வது இராகத்திற்கு தாலிவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
இலக்கணம் [தொகு]
ஜாலவராளி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
- ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) 3 வது மேளம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் கானமூர்த்தி (03) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).
உருப்படிகள் [தொகு]